Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புகைப்பிடிப்போரும் புகை பிடிக்காதோரும் – ஒரு ஒப்பீட்டு ரீதியான ஆய்வு

20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக் காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கணக்கி டப்பட்டுள்ளது.

தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களின் அறிவுத்திறன், சராசரி ஆண்களை விட எட்டு புள்ளிகள் வரை குறைவாக இரு க்கின்றது. தினமும் அவர்கள் புகைக்கும் சிகரெட்டின் எண்ணி க்கைக்கு ஏற்ப அறிவாற்றல் குறைவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு 101 புள்ளிகள் அறிவுத்திறன் இருக்கும் நிலையில் புகைப் பிடிப்பவர்களுக்கு 94 புள்ளிக ள் மட்டுமே அறிவுத்திறன் இருக்க வாய்ப்புள்ளதாக தெ ரிவிக்கின்றனர் ஆய்வாளர்க ள். மன அழுத்தம் அதிகம் உள் ள இளைஞர்களே அதிகம் புகைப்பிடிக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் புகைப்பழக்கம் மன அழுத்தத்தை அதிகரித்து மனநல பாதிப் புகளுக்கு உள்ளாக்குகிறது மேலும் புகைப்பழக்கம் குடிப்பழக்கத் திற்கும் வழிவகுக்கிறது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாரடைப்பு, புற்றுநோய், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிந்த விசயம். ஆனால் மனைவிக்கு நுரையீரல் புற்று நோய், இதயநோய் போன்றவற் றையும், குழந்தைகளுக்கு காது கோளாறு, ஆகியவையும் பரப் புகின்றனர். புகைப்பழக்கத்தில் இருந்து மீள மனரீதியான சிகிச் சைகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

வேலையில் டென்சன் ஏற்பட்டா ல் புகையை நாடாமல் நல்ல இசையை ரசிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உடற்பயிற்சி, தியான ம் போன்றவையும் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: