Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011 – மேஷம் முதல் மீனம் வரை..

சனிப் பெயர்ச்சி பலன்கள் – மேஷம் முதல் மீனம் வரை..

சனிபகவான் தற்போதைய இருப்பிடமான கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு இன்றைய தேதியான‌ மார்கழி 04ம் தேதி அன்று 57 நாழிகை 26 வினாடி அதாவது 21.12.2011 காலை 05 மணி 20 நிமிட த்திற்கு பெயர்ச்சியானார். துலா ராசியான து சனிபகவா னுக்கு உச்ச ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது இந்த நிலைக்கு வருவ தன் மூலம் அவர் பலம் மிகுந்தவ ராகி விடு வார் என்கிறது சோதிட நூல்கள்.

இதன் எதிரொலியாக அடுத்த இரண் டரை ஆண்டுகளுக்கு ஒவ்வொரு இராசிக்கும் எத் தகைய பலன்கள் உண்டாகும் என்பதைப் பற்றி  பார்ப் போம்.

மேஷம்

நட்சத்திரங்கள் – அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் வரை.

மேஷ ராசிக்காரர்கள் அடிப்படையில் சுயநலம் குறை ந்தவர்களாக இருப்பார்களாம். தற்போது இந்த ராசி யில் இருந்து ஆறாவது கட்டமான கன்னி ராசியில் இருந்து பெயர்ந்து ஏழாவது கட்டமான துலாம் இரா சிக்கு வருகிறார். இப்படி ஏழாவது கட்டத்திற்கு சனிபகவான் வரு வதை கண்டச் சனி என்கிறது சோதிட நூல்கள்.

இது வரை இருந்த ஆறாவது கட்டமானது அனுகூலமான பலன்க ளை தந்திருக்கும். இனி அவற்றில் சிறிய அளவிலான பாதிப்பு களை உண்டாக்கும் என்றால் மிகையில்லை. அடுத்த சித்திரை முத ல் ஆறு மாதங்களில் சுப பலன்கள் வாய்க்கும்.

பொதுவில் இந்த பெயர்ச்சியினால் சனி பகவானின் பாதிப்புகள் குறைந்த அளவில் இருக்கும். அதே நேரத்தில் மிதமான நல்ல பல ன்களை எதிர்பார்க்கலாம். பெரிய பாதிப்புகள் இல்லை என்பதே சுப பலன் என்பதை நினைவில் வைக்கவும்.

ரிஷபம்

நட்சத்திரங்கள் – கிருத்திகை 2ஆம், 3 ஆம், 4ஆம் பாதம் , ரோகிணி, மிருக சிரீஷம் 1ஆம், 2ஆம் பாதம் வரை.

ரிஷப ராசிக்காரர்கள் அடிப்படையில் மி குந்த முன் யோசனை உடையவர்களாக இருப்பார்களாம். தற்போது இந்த இராசி யின் ஐந்தாவது கட்டமான கன்னி ராசி யில் இருந்து சனிபகவான் பெயர்ந்து ஆறாவது கட்டமான துலாம் ராசிக்கு வருகிறார். இந்த நிலையை சாதக சிந்தாமணி பின்வருமா று கூறுகிறது.

“காரி என்னும் ரவிமைந்தன்
        கனிவாய் ஆறாம் வீடுற்றால்
வாரிக் கொடுப்பார் மனதிலுன்
       வாட்டம்யாவும் தீரும் பாரே”

இந்த சனிப் பெயர்ச்சியினால் பெரிய அளவில் நன்மை பெறப் போ வது இந்த ராசிக்கு உட்பட்டவர்கள்தான். உடல்நலம், மன நலம், செல்வ வளம் என எல்லா அம்சங்களிலும் ஏற்றம் உண்டாகுமாம். காரியத் தடைகள் விலகும், கல்வி சிறக்கும். குடும்பத்தில் மகி ழ்ச்சி உண்டாகுமாம். குருவருளும், திருவருளும் கைகூடி நிற்கும் காலமாக இருக்குமாம்.

மிதுனம்

நட்சத்திரங்கள் – மிருகசிரீஷம் 3ஆம், 4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை

மிதுன ராசிக்காரர்கள் பிறர் போற்றும் வகையில் முன் மாதிரியானவர்களா க இருப்பார்களாம். தற்போது இந்த ராசிக்கு நான்காவது கட்டமான கன் னி ராசியில் இருந்து சனி பகவான் பெ யர்ந்து ஐந்தா வது கட்டமான துலாம் ராசிக்கு செல்ல இருக்கிறார். இது வரை இருந்த நான்காவது கட்டத்தி னை “அர்த்தாஷ்டம சனி” என்கிறது சோ திட நூல்கள். இத்தகைய இடத்தி ல் இருந்து பெயர்வது இந்த ராசிக் காரர்களுக்கு நல்ல செய்தியே!

இதனை சாதக சிந்தாமணி பின் வருமாறு கூறுகிறது.

“பஞ்சம ஸ்தானம் தன்னில்
       பாங்காகக் காரி வந்தால்
மிஞ்சிய துன்ப மெலாம்
       மழிந்திடும் மேன்மை உண்டே”

சனி பகவானின் இந்த புதிய நிலையானது பூர்வ புண்ணிய பலன்க ளோடு தொடர்பு உடையது என்பதால், முற்பகலில் செய்ததன் பல ன்களை இப்போது அறுவடை செய்ய வேண்டி இருக்கும். குடும்ப வழிச் சொத்துக்கள், உறவுகள் மூலமாக நெருக்கடிகள் உண்டாக லாம். குருவருளை வேண்டி வணங்கி இடர்களை களையலாம்.

கடகம்

நட்சத்திரங்கள் – புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

கடக ராசிக்காரர்கள் உயரிய சிந்தனைப் போ க்கினை உடையவர்க ளாக இருப்பார்களாம். இத்தகைய கடக ராசிக்கு 3ம்இடமான கன்னி ராசியில் இருந்து 4ம் இடமான துலாம் ராசி க்கு சனி பகவான் பெயர்கிறார். இந்த நிலை அர்த்தாஷ்டம சனி எனப்படும். எனவே இது வரை இருந்த அனுகூல நிலை இனி இருக் காது.

எனவே இந்த கால கட்டத்தில் கடக ராசிக் காரர்கள் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் நிதானம் காட்டு வது நல்லது. எனினும் புது தமிழ் வருடத்தின் முதல் ஆறு மாதங்க ளில் சுபபலன்களை எதிர் பார்க்கலாம். மேலும் இந்த ராசிக்காரர் களின் தாயாருக்கும் தாய்மாமன்களுக்கும் பாதிப்புக்களைக் கொடு க்கும். தெய்வ வழி பாடு கைகொடுக்கும்.

சிம்மம்

நட்சத்திரங்கள் –  மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் வரை

சிம்ம ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகளாகவும், விடா முயற்சி யுடையவர்களாகவும் இருப்பா ர்களாம். இத்தகைய சிம்ம ரா சிக் காரர்களுக்கு இரண்டாம் இடத்தில் இருந்த சனி பகவான் பெயர்ந்து மூன்றாம் இடமாகிய துலாம் ராசிக்கு செல்கிறார். இந்த இடம் சிம்ம ராசிக்காரர் களுக்கு மிகவும் அனுகூலமான ஒரு இடமாகும். இதுவரை இரு ந்த துயர நிலை எல்லாம் இனி மாறி நன்மையுண்டாகுமாம். இதனை சாதக சிந்தாமனி பின் வருமாறு கூறுகிறது.

“வீரிய ஸ்தானம் மீதில்
      விளங்கிடும் காரி யுற்றால்
காரியம் யாவும் வெல்லும்
      காலமே ஏவல் செய்யுமாறே”

சிம்ம ராசிக் காரர்களுக்கு இவர் 7ம் வீட்டுக்கு உரியவராக இருந் தாலும் தற்போது இந்த ராசிக்காரர்கள் 7 1/2 ஆண்டுச் சனியிலிருந் து விடுபடுகின்றனர். இதனால் இல்லறம் நல்லறமாகும். தொழில், கல்வி சிறக்கும். எனினும் புது தமிழ் வருடத்தின் முதல் ஆறு மாத ங்கள் கவனமாய் இருந்து காரியமாற்றிட வேண்டும். பொதுவில் இந்த சனி பெயர்ச்சியால் அதிக நற் பலன்களைப் பெறும் ராசி களில் இதுவும் ஒன்று.

கன்னி

நட்சத்திரங்கள் – உத்திரம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , அஸ்தம், சித்திரை 1ஆம், 2ஆம் பாதம் வரை

இதுவரை ராசிக்கு ஜென்ம சனியாக இருந்த சனிபகவான் இரண்டாம் வீடான துலாம் ராசி க்கு பெயர்கிறார். இந்த புதிய நிலை எழரை ஆண்டுச் சனியின் இறுதி காலகட்டம் ஆகும். கடந்த ஆண்டுக ளில் நிலவி வந்த இறுக்கம், தயக்கம் போன்றவைகளின் தீவிரம் குறை யும்.

இல்லறத்தில் கணவன் மனைவி உறவில் இருந்து வரும் பேதம் குறையும். உடல் நலத்தில் மேலதிக அக்கறை காட்டிட வேண்டி வரும். பொதுவில் இன்பம் துன்பம் என இரண்டும் கலந்த கால கட்டமாக இருக்கும். மிதமான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

துலாம்

நட்சத்திரங்கள் – சித்திரை 3ஆம், 4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை

துலாம் ராசிக்காரர்கள் அனைவரு ம் கவரும் தோற்றமுடையவர்க ளாக இருப்பார்களாம். இத்தகைய துலாம் ராசிக்கு பன்னிரெண்டாவ து வீடான கன்னி ராசியில் இருந்த சனி பகவான் பெயர்ந்து ஜென்மச் சனியாக ராசிக்கு வருகிறார். இ தை ஏழரை ஆண்டுச் சனியின் உச் ச கால கட்டமாக சோதிட நூல்கள் கூறுகின்றன. இதனால் கடுமை யான விளைவுகளை எதிர் நோக்க வேண்டி இருக்கும்.

எனினும் துலாம் ராசி நாதனான சுக்கிரன் சனி பகவானின் நட்புக் கிரகமாகிப் போனதனால் இந்த பாதிப்புகள் பாதியாக குறையுமாம். எதிரிகளை இனங்கண்டு ஒதுக்கி விட்டு, நல்லவர்களின் அருகா மையை கொள்வது இடர்களை குறைக்கும். பொதுவில் இந்த பெய ர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாமாம்.

விருச்சிகம்

நட்சத்திரங்கள் – விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

விருச்சிக ராசிக்காரர்கள் விடா முயற்சியுடையவர்களாக இருப் பார்களாம். விருச்சிக ராசிக்கும் பதினோராம் இடமான கன்னி ராசி யில் இருந்த சனி பகவான் பெயர்ந்து பன்னிரெண்டாவது ராசியான துலாம் க்கு வருகிறார். இது ஏழரை ஆண்டுச் சனியின் துவக்க கால கட்டமாகும். எனவே இதுவரை இருந்து வந்த அனுகூல நிலைகள் இல்லாது போகும். பொருள் விரயம் இந்த கால கட்டத்தில் உண் டாகும். எண்ணம், செயல், சொற்களின் கவனம் தேவைப் படும் கால கட்டமாகும். இடமாற்றத்தையும் அதிக செலவுகளோடு அலைச்ச ல்களையும் கொடுக்கும் கால கட்டமிது. எனினும் சித்திரை முதல் ஆறு மாதங்களில் சுப பலன்கள் உண்டாகும். பொதுவில் இந்த கால கட்டத்தில் மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாம்.

தனுசு

நட்சத்திரங்கள் – முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் வரை

தனுசு ராசிக்காரர்கள் இயல்பில் நல்ல எண்ணங்களைக் கொண்ட வர்களாக இருப்பார்களாம். இத்தகைய ராசிக்கு பத்தா ம் இடமான கன்னியில் இருந்த சனிபகவான் பெய ர்ந்து பதினோராவது வீடான துலாம் ராசிக்கு வந்திரு க்கிறார். இது வரை இருந்த துயரமெல்லாம் பனி போல விலகும் காலமிது. இதனை சாதக சிந்தாமணி பின் வருமாறு கூறுகிறது.

“பதினோரா மிடதில் காரி
     பாங்குடன் வந்து விட்டால்
அதிகாரப் பதவி கூடும்
     சுகமாக அமையும் வாழ்வே”

இந்த கால கட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், பண வரவு உண்டாகும். இந்த சனிப் பெயர்ச்சியினால் சுப பலன்களை பெறும் ராசிகளில் தனுசு ராசியும் ஒன்று. இந்த வாய்ப்பினை நழுவ விடாது பலன் பெற்றிட எல்லாம் வல்ல குருவருள் துனை நிற் கட்டும். எனினும் சித்திரை முதல் ஆறு மாதங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மகரம்

நட்சத்திரங்கள் – உத்திராடம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம், திரு வோணம், அவிட்டம் 1ஆம், 2ஆம் பாதம் வரை

மகர ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்க ளாக இருப் பார்களாம். இத்தகைய மகர ராசிக்கு ஒன்பதாம் வீடான கன்னி ராசியில் இருந்த சனி பக வான் தற்போது பத்தாம் வீடான துலாம் ராசிக்கு பெயர்ந்திருக்கிறார். சோதிட நூல்கள் இதனை ஜீவ னச் சனி என்கிறது. மகர ராசி நாதனான சனி பகவான் தனது நட்புக் கிரகமான சுக்கிரன் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதால் பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது.

“சூரிய மைந்தன் காரியும்
       சுகமாய் தசமமிடம் வந்தால்
வரவு பெருகும் வளம்பெருகும்
       வதுமை புரியும்யோ கம்வரும்”

எனினும் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் நிதானம் கடை பிடிக்காவிடில் அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டிவரும். இடமாற்றமும் தொழில் மாற்றமும் முன்னேற்றங்களும் உண்டா கும். அத்துடன் அலைச்சலும் அகால போஜனமும் உண்டாகுமாம். என்றாலும் கூட இந்த சனி பெயர்ச்சியால் அதிக நற் பலன்களைப் பெறும் ராசிகளில் இதுவும் ஒன்று.

கும்பம்

நட்சத்திரங்கள் – அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம் , சதயம், பூரட்டாதி 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை

“நவமதில் காரி வந்தால்
     நாளும் நற்செல்வம் சேரும்
அவமரி யாதை நீங்கும்
     அகிலமே வணங்கிப் போற்றும்”

கும்ப ராசிக்காரர்கள் எத்தகைய சூழலிலும் நிதானமாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்க ளாய் இருப்பார்களாம்.இத்தகைய கும்பராசிக்கு ராசியின் அதிபதி யான சனி பகவான் எட்டாம் வீடான கன்னி யில்  இருந்து பெயர்ந்து ஒன்பதாவது ராசியான துலாம்க்கு பெயர்ந் திருக்கிறார். இதுவரை இருந்து வந்த அஷ்டம சனி விலகியிரு ப்பது ஆறுதல் தரும் அம் சம். இதுவரை இருந்த அவல நிலை இனி மாறும்.

இல்லறம் நல்லறமாகும். சிறுசிறு பிரச்சனைகளை தந்தாலும் பொ துவில் நல்ல நன்பலன்களையே சனிபகவான் தருவார். தகுதிக்கு மீறிய செயல்களில் இறங்காதிருத்தல் உத்தமம்.

மீனம்

நட்சத்திரங்கள் – பூரட்டாதி 4ஆம் பாதம் , உத்திரட்டாதி, ரேவதி.

மீன ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடமான கன்னி ராசியில் கண்டகச் சனியாக இருந்தவர் பெயர்ந்து எட் டாம் இடமான துலாம் ராசிக்கு அ ஷ்டமச் சனியாக வந்திருக்கிறார். இ து இதுவரை இருந்த துயர நிலையை அதிகரிப்பதாகவே இருக்கும். எனவே இனி வரும் நாட் களில் தேவைக்கும் அதிகமான நிதானமும், ஒழுங்குடன் கூடிய செயல்பாடுகளுமே கடுமையா ன துயரத்தில் இருந்து காப்பாற்றும்.

“அட்டம ஸ்தானம் தன்னில்
     கடுமையுடன் காரி வந்தால்
எருமை யேறிய எமனும்
      நேரில் வந்தது போலாமே”

உற்றார், உறவினர், நண்பர்கள் என சமூகத்தினரின் அவதூறுக்கும், அவமதிப்புக்கும் ஆளாகும் வாய்ப்புகள் உண்டு. கடுமையான மன அழுத்தங்கள் உண்டாகும் என்பதால் இந்த கால கட்டத்தில் நல் லோர் அருகாமையும், அறிவுரையும் கேட்டு நடப்பது நல்லது. இத்துடன் சனிப் பெயர்ச்சி பலன்கள் முற்றிற்று.

நன்றி சித்தர்கள் ராஜ்யம்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: