Friday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருடர்களை கண்டுபிடிக்க புதிய இணையதளம்.

வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகியவை ஒரு ரகம் என்றால், கடைகள், ஷாப்பிங்மா ல்களில் யாருக்கும் தெரியாமல் நை சாக பொருட்களை லவட்டுவது இன் னொரு ரகம்.

பெரிய ஆள் தோரணையில் இருப்பவர் கள் கூட இதுபோல கேவல திருட்டில் ஈடுபடுவார்கள் என்பதால் கண்டுபிடிப்பது கடினம். இதுபோன்ற ‘டீசன்ட்’ கொள்ளையர்களை கண்டுபிடிக்க உதவியாக ஆஸ்திரேலிய முன்னாள் போலீஸ் அதி காரிகள் சிலர் சேர்ந்து ‘ஹூ-டியூப்’ (www.whotube.com/) என்ற பெயரில் இணையதளம் தொடங்கியிருக்கிறார்கள்.

கடைகள், வர்த்தக நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா வில் திருட்டு தொடர்பாக பதிவாகும் காட்சிகளை இந்த இணைய தளத்தில் அப்லோடு செய்யலாம். திருடன் பற்றி தகவல்கள் தெரி ந்தால் அதையும் பதிவுசெய்து வைக்கலாம்.

இணையதளத்தை பார்க்கும் மற் ற கடைக்காரர்கள் உஷாராவதற் காக இந்த வசதி. இணையதளம் ஆரம்பித்து 3 மாதத்தில் மொத் தம் 127 காட்சிகளை பல பகுதிக ளை சேர்ந்த கடைக்காரர்களும் அப்லோடு செய்திருக்கிறார்கள். இதன் உதவியுடன் 2 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

 உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply