Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாஸ்போர்ட் பெறுவது எப்படி? (வழிமுறை – 2)

ஆர்டினரி (Ordinary), அப்பிசியல் (Official), டிப்ளோமேட்டிக் (Diplo- matic), ஜம்போ (Jumbo) என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பா ஸ்போர்ட் சாதாரண குடிமக்களு க்கும், Official பாஸ்போர்ட் அரசா ங்க ஊழியர்களுக்கும், Diploma- tic பாஸ்போர்ட் முதல் வர், பிரத மர் போன்ற உயர்மட்டத் தலைவர் களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
பாஸ்போர்ட் பெறுவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டி னரி. மற்றொன்று தட்கல். இதில் எந்த வகையில் விண்ணப்பிப்பதாக இருந்தாலும், சென்னையைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் வி ண்ணப் பத்தை கைப்பட பூர்த்தி செய்து கொண்டுவந்தால் அது ஏற்கப்படமா ட்டாது. ஆன்லை ன் மூலமாக வரும் விண்ணப்ப ங்கள் மட்டுமே ஏற்றுக்கொள் வார்கள். ஆன்லைனில் விண் ணப்பித்து, அந்தப் படி வத்தை ‘பிரின்ட்-அவுட்‘ எடுத்து, அதை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிடும் ஒரு தேதியில் வந்து டோக் கன் எடுக்க வேண்டும். பின்னர், நிர்ணயிக்கப்பட்ட கவுன்ட்டர்களில் செக் இன் செய்ய வேண்டும்.
அதே சென்னைக்கு வெளியே பிற ஊர்களில் இருப்பவர்கள் தங்கள் கைப்பட பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பத்தை அந்த ந்த மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவுகளிலோ அல்லது ஸ்பீடு போஸ்ட் சென்டர்களிலோ சமர் பிக்க வேண்டும். சில மெட்ரோ நகரங்களில் காவல் துறை நிலையங்களில் பாஸ்போர்ட் நடுவங்கள் இருந்தால், அங்கு விண்ணப்பத்தைச் சமர்பிக்கலாம்.
தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற கட்டாயம் மண்டல பாஸ்போ ர்ட் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், அரசாங்கம் அங்கீகரித்த ஏதேனும் மூன்று அடையாளச் சான்றிதழ்களைச் சமர்பிக்க வேண்டும். அந்த மூன்றில், ஒன்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை யாக இருக்க வேண்டும். பொதுவாக, வாக் காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றின் நகல்களை இணைக்கலாம்.
ஆர்டினரிக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பிறந்த தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும் சான்றிதழ், குடியுரிமை ஆவணம் ஆகியவற்றின் நகல்கள் தலா இர ண்டு இணைக்க வேண்டும். புதிய ஆர்டினரி பாஸ்போர்ட்டுக்கு 1000 ரூபாய், தட்கல் மூலம் என்றால் 2500 ரூபாய்.
ஆர்டினரி, தட்கல் என இரு முறை களிலும் பெறப்படும் பாஸ்போர்ட் டுகள் பத்து ஆண்டுகளுக்குச் செ ல்லுபடி ஆகும். பத்து ஆண்டுகள் முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன் னாலோ அல்லது பத்தாவது ஆண் டிலோ நீங்கள் அதைப் புதுப்பிக் கலாம். புதுப்பிக்க ஆர்டினரிக்கு 1000 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 500 ரூபாய் கட்டணம்.
பெயர், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவி யின் பெயரை உங்கள் பாஸ்போர்டில் குறிப்பி டுதல் போன்ற சின்னச் சின்ன திருத்தங்கள் மேற்கொள்ளவும், பா ஸ்போர்ட்டைப் புதுப்பி த்துக்கொள்ளவும் ஆன்லைனில் விண் ணப்பிக்கத் தேவை இல்லை. இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஃபார்ம் 2 ஐப் பயன் படுத்த வேண்டும்.
பாஸ்போர்ட் தொலைந்து போ னால் காவல் துறையினரிடம் பு கார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்க ள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படு ம். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.

நன்றி: ஆனந்த விகடன்-24.11.10

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply