Thursday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பங்குச் சந்தையில் போலி புரோக்கர்களை அடையாளம் காண்பது எப்ப‍டி?

  • போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள்.
  • ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவண ங்கள் என வியாபார ரீதி யாகக் கொடு க்க வேண்டிய எதையுமே உங்களுக்கு த் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற் றையும் துண்டுக்காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள்.
  • டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட் ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலி ல் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தி யாசப்படும்.
  • கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டு கொள் ளவே மாட்டார்கள்.
  • எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பணம் மட் டுமே கேட்பார்கள்.
  • காசோலை வாங்கும்போது வெவ்வேறு பெயரிலோ தனி மனி தரின் பெயரிலோ வாங்குவார்கள்.
  • உங்கள் கணக்கிற்கு யாருடைய கணக்கில் இருந்து காசோலை கொ டுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள்.
  • இத்தனை லாபம் நிச்சயம்: பத்திரத் தில்கூட எழுதித்தருகிறோம் என்கிற போலியான வாக்குறுதிகளை அள் ளி வீசுவார்கள்.
  • ஆள் பிடித்து தந்தால் கமிஷன் தருவ தாகவும் ஆசை காட்டுவார்கள்.
  • இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என அனைத்து சந்தைகளிலும் வியாபாரம் செய்கிறேன் என்று பச் சைப் பொய் சொல்வார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

 உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply