Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போலி நிதி நிறுவனங்களை அடையாளம் காண்பது எப்ப‍டி?

வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட ஆர்.பி.ஐ-யிடம் அனுமதி வாங்கியிருக்கிறதா என் று அவசியம் பாருங்கள்.

பதிவு செய்யப்பட்ட லிமிடெட் நிறுவனம் என்பது போன்ற விளம்ப ரங் களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒரு நிறுவனத்தை கம்பெனியாக பதிவு செய்வதற்கும், நிதி நிறுவன மாகப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

சீட்டு கம்பெனி எனில், சீட்டு ஃபண்ட் சட்டப்படி அந்தந்த மாநில அரசின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டதா என பாருங்கள்.

சில நிறுவனங்கள் தவணை முறையி ல் பணம் செலுத்த ச் சொல்லி அதற்கு இன்ஷூரன்ஸ் கவ ரேஜ் மற்றும் நிலம் கொடுப்பதாகவும் கூறுவது உண்டு. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டுமெனி ல், அந்த நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ. அனுமதியுடன் மட்டுமே செய்ய முடி யும். நிலம் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு கண்ணுக்குத் தெரி யாத ஊர்களில் இருக்கும் பாலைவனத்தில் இடம் ஒதுக்கியிருப்பா ர்கள்.

மார்க்கெட்டில் இருக்கும் வட்டி நிலவரத்தைவிட, மிக அதிகப் படியான வட்டி தருவதாகச் சொன்னால் உறுதியாகச் சொல்லி விட லாம் அந்த நிறுவனம் போலியானது என்று!

குறிப்பாக பெண்களை மையப்படுத்தி, அவர்களைக் கவரும் வகைக ளில் திட்டங்கள் இருந்தால் கவனம் தேவை.

சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களைக் கொண் டு அலுவலகம் திறப்பது, அவ ர்கள் கையால் பத்திரங்கள் கொடுப்பது போன்றவைகள் உங்களை திசை திருப்பும் வேலைகளில் ஒன்றா கும்.

அவசரப்படுத்தி முதலீடு செ ய்ய வைப்பது, ஏற்கெனவே இந்த நிறு வனத்தில் பணம் போட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்தவர் என யாராவது இரண்டு நபர்களை அறிமுகம் செய் துவைப்பது போன்றவை யும் தில்லாலங்கடிக்கான அறிகுறிகளே!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

 உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply