மனை அல்லது வீட்டை வாங்கும்போது மிகக் குறைந்த காலக்கட்ட த்துக்குள்ளாகவே பலமுறை சொத்து கைமாறியிருக்கிறதா என பாருங்கள். அப்படி இருந்தா ல் உஷாராகி, தாய் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் உரிமையா ளரைச் சந்தித்து உண்மையில் அவர் சொத்து விற்றாரா அல்ல து பாகப்பிரிவினைசெய்து தந் தாரா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
தாய் பத்திரம் அல்லது கிரயப்பத்திரம் தொலைந்துவிட்டது என்று சொ ன்னால் கூடுதலாக உஷாராகுங்கள்.
வீட்டை நேரில் பார்க்காமல் வாங்காதீர்கள். அதில் யாராவது குடியி ருந்தால் அவர்களிடம் நீங்க ள் வீட்டை வாங்கும் விஷய த்தைச் சொல் லுங்கள். சில இடங்களில் வீட்டின் உரிமை யாளரிடம் வாடகைக்கு ஆள் கூட்டி வருவதாகச் சொல்லி வீட்டைக் காட்டி, போலி பத்தி ரம் மூலம் வீட்டை விற்கும் வேலையும் நடந்து வருகிற து!
புரோக்கர்கள் அவசரப்படுத்தினால் ஒரு முறைக்கு நூறு முறை விசா ரியுங்கள்.
சொத்தின் உரிமையாளரை கண்ணில் காட்டாமலே வி லை பேசிக் கொண்டிருந்தா ல் அந்த புரோக்கரிடம் எச்சரி க்கையாக இருங்கள்.
புரோக்கர் நல்லவர்தானா என்பதை அறிய அப்பகுதி சார் பதிவாளர் அலுவலக பணியாளர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரிந்துவிடும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.