Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதுப்பொலிவுடன் பாவாடை தாவணியில் நவீன மங்கையர் – வீடியோ

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா…’ என்று இப்போது எந்த ஆணும், எந்தப் பெண்ணையும் பார்த்து பாட முடியாது. காரணம், தென்னிந்திய டீன் ஏஜ் பெண்களின் பாரம்பரிய உடை யாக இருந்த பாவாடை & தாவணியை இப்போது யாரும் அணிவதில்லை… என்று நினைக்கிறீர்களா? சாரி கைஸ்… பாவாடையும் & தாவணியும் பல பரி மாணங்கள் பெற்று புதுப் பொலிவுடன் இப்போது பெண்கள் மத்தியில் வலம் வருகிறது…’’ என்கிறார் ஆடை அலங் கார  நிபுணர் ஃபிபின்.

‘‘பெண்கள் வயதுக்கு வந்தவுடன் அவர்கள் அணியும் முதல் உடை யாக பாவாடை & தாவணியே இருந்தது. தென்னிந்தியாவில் இந்த உடையை அணியாத பெண்களே இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கிராமம் & நக ரம் என அனைத்துப் பகுதிகளிலும் வலம் வந்த இந்த உடை, பிறகு நாடெங்கும் பிரபலமானது.

ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் தங்கள் வசதிக்கு ஏற்ப பாவாடை & தாவ ணியை மாற்றி அமைத்துக் கொண்டனர். வட இந்தியாவில் பிரபலமாக இருக்கும் லெஹங்கா, காக்ரா சோளி… ஆகியவை பாவாடை & தாவணியின் இன்னொரு வெர்ஷன்தான். பொதுவாக பாவாடையும் தாவணியும், ஷிபான், ஜார்ஜெட் அல்லது காஞ்சிபுரம் பட்டில் அணிவது வழக்கம். ஆனால், இப்போது இதிலும் பேஷனை புகுத்தி பார்ட்டி, திருமணம், விசேஷ நாட்கள் என பிரித்து அதற்கு ஏற்ப அணியும்படி மாற்றி விட்டனர்.

பாவாடையை பொறுத்தவரை, பார்டரில் மட்டும் பட்டு ஜரிகை இருக் கும். அல்லது ஆங்காங்கே புட்டா வேலை ப்பாடு செய்யப்பட்டு இருக்கும். ஷிபான் துணி என்றால் பூ டிசைன் இருக்கும். ஆ னால், இப்போது அதில் எம்ராய்டரி, கல ம்காரி, சம்கி வேலைப்பாடு, பெயின்டிங், பிளாக் பிரின்டிங் என அசத்தலான டிசை ன்களில் விற்கிறார்கள்.

கிராமத்து பெண்கள் மட்டுமே அணிந்து வந்த பாவாடை தாவணியை, மார்டர்ன் பெண்களும் அணிய விரும்புவதால் இந்த மாற்றங்கள். ஆரம்பத்தில் பாவாடைகள் எல்லாம் ஒரே ஸ்டைலில் இருந்தன. அதாவது, பள்ளி குழந்தைகள் அணியும் ஸ்கர்ட்டில் இருப்பது போல பட்டை பட் டையா வரும். அல்லது நிறைய சுருக்கங்கள் வைத்து வரும். இப் போது அப்படியில்லை. பிஷ் கட் பாவாடை, யோக் பாவாடை, லேயர் பாவாடை, கேஜட் பாவாடை என பல மாடல் உள்ளன. பிஷ்கட் பாவா டை, மீன் வால் போன்ற அமைப்பினை கொண்டது. இடுப்பு வரை இறுக்கமாகவும் அதன் பிறகு நிறைய பிரில் வைத்து விரிந்தும் இருக்கும். இதற்கு நிறைய வேலைப்பாடு செய்யப்பட்ட பிளவுஸ் மற்றும் தாவணியை அணியலாம்.

லேயர் பாவாடை, குழந்தைகள் அணியும் பிரில் ஸ்கர்ட் போல் இருக்கும். முதலில் ஒரு துணி கால் நீளம் வரை வரும். அதற்கு மேல் மற்றொரு துணி முட்டிக்கால் வரை வரும். யோக் பாவாடை, இடுப்பு வரை ஸட்ரெயிட் கட் செய்யப்பட்டு அதன் பிறகு விரிந்து வரும். கேஜட் பாவாடையில், இரண்டு நிறங்கள் மாறி மாறி வரும். ஒவ்வொன்றும் பளிச்சென் று தெரிய நடுவே முக்கோண வடிவில் ஒரு டிசைன் இணைக்கப்பட்டு இருக்கும். பாவா டைகளின் அமைப்புக்கு ஏற்ப ஜாக்கெட் மற்றும் தாவணி மாறுபடும்.
ஆரம்பத்தில் ஒரே நிறத்தில் ஷிபான் துணியில்தான் தாவணி இருந் தது. அதை புடவை கட்டுவது போல் கட்டுவது வழக்கம். ஆனால், இப்போது துப்பட்டா போல் தாவணியை அணி வது வழக்கமாகி வருகிறது. காரணம், அதில் உள்ள வேலைப்பாடுகள். புடவையின் தலைப்பு போல் தாவணியில் வேலைப்பாடுகள் செய்யப் படுகிறது. நுனியில் அழகான மணிகள் தொங் க விடுவது, தாவணி ஓரங்களில் மட்டும் பட்டு ஜரிகைகள் அமைக்கப்படுவது இப்போதைய டிரன்ட்.

ஜாக்கெட்டுகளில் வேலைப்பாடு அதிகம் செய் யப்பட்டு இருந்தால் அதை எடுத்துக்காட்ட தாவ ணியை வலை துணியில் அணிவது லேட்ட ஸ்ட் பேஷன்…’’ என்று சொல்லும் ஃபிபின், பாவாடை & தாவணி, கான்ட்ராஸ்ட் நிறங்க ளில் பார்க்க எடுப்பாக இருக்கும் என்கிறார்.
& ப்ரியா

 நடிகை மீராஜாஸ்மின் பாவாடை தாவணி அணிந்து நடித்த‍ சண்டைக்கோழி திரைப்பட‍ த்தில் இருந்து ஒரு பாடல்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

 உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: