பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்த பாரதியே
இன்று நீ உயிரோடு இருந்திருந்து,
கைப்பை நிரப்ப, கற்பை விற்கும் பெண்களை
“கரு” பை சுமையென வெறுக்கும் பெண்களை
புகைக்கும், போதைக்கும், அடிமையான பெண்களை,
ஆணவத்தால் அறிவிழந்து, ஆண்களை மிதிக்கும் பெண்களை,
குடும்ப உறவுகளை உதாசீனம் செய்து, கும்மிருட்டில் கும்மாள மிடும் பெண்களை,
பணத்தால் பலம்பெற்று, போதை மணத்தால் நாறும் பெண்களை,
குழந்தைக்கு பாலூட்ட மறுத்து, குத்துப்பாட்டுடன் “குடி” கொண்டி ருக்கும் பெண்களை
தாயாட்டம் இல்லாமல், பேயாட்டம் போடும் பெண்களை,
“குல” விளக்காய் இல்லாமல் தெருவிளக்காய் விளங்காத பெண் களை
பார்த்திருந்தால் . . . . என் செய்வாயோ?
????????????????
கருவறையில் உருவெடுத்தாயோ?? – பாவமென்றெண்ணி
கருவிலேயே கரைந்தாயோ ??
பாரதி நீ சொல்!!
– வழங்கியவர் விதை2விருட்சம், ராசகவி, ரா. சத்தியமூர்த்தி