கிறிஸ்த்துவ சகோதர சகோதரிகளுக்கு விதை2விருட்சம் இணையத்தின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்ள் !

இயேசு பிறந்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்
கொண்டிருந்த இடையருக்கு இறை த்தூதர் தோன்றி பெத்லகேமில் இரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் பரலோக இறைத் தூதரனைவரும் அவர்கள் முன் தோன்றி “உன்ன தங்களிலே கடவுளுக்கு மகிமையும், இப் பூமியில் நன்மனதோருக்கு அமைதியுமாகுக” என பாடினர். இடையர் எழுந்து நகருகுள் சென்று குழந்தை இயேசுவை கண்டு வணங்கினார்கள்
இந்தியாவில் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்கள்
இந்தியாவில் கிறித்தவக் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுமுறை நாள்கள் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி (Good
Friday), மற்றும் கிறிஸ்து பிறப்பு விழா ஆகும்.
டிசம்பர் 24ஆம் நாள் நள்ளிர வில் கிறித்தவர் தம் கோவில் களுக்கும் ஆலயங்களுக்கும் சென்று வழி பாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டு நற்கருணை விருந்தில் பங் கேற்பர். திருப்பலியின் போது கிறிஸ்து பிறப்புவிழாவின் பொருள் என்ன என்பது மறையுரை வழியாக விளக்கப்படும். ஒவ்வொரு கோவிலிலும் கிறிஸ்துமஸ் குடில் செய்து வைக்கப்பட்டிருக்கும். வீடுகளிலும் குடில் செய்து வைக்கும் பழக்கம் உண்டு. அக்குடிலில் குழந்தை இயேசு, மரியா, யோ சேப்பு ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். கூடவே, இடையர்கள், இடையைச் சார்ந்த ஆடு கள், தொழுவத்தில் மாடு, கழுதை போன்ற உருவச்சிலைகளும் இடம்
பெறும்.
வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்துடை அணிவர். நண்பர்க ளையும் உறவினரையும் சந்திக்கச் செல் வர். மேலும், இரவில் வாண வேடிக் கைகள் நடைபெறும்.
பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளைச் சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள் (Carols) இசைப் பார்கள்.
கிறித்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண் டாடுகின்றனர். இது சமய நல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில் லை.
thanks to wikipedia
Marry Christmas.