Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (25/12) – உன் காதலன் உன்னை எங்கு தொட்டான் ? எங்கெங்கு முத்தம் கொடுத்தான்?

அன்புள்ள அம்மாவுக்கு —
எனக்கு வயது 32; என் கணவருக்கு 33. எங் களுக்கு திருமணமாகி, 10 வருடங்கள் ஆகிவிட் டன. எங்களுக்கு 12, 10 வயதுகளில் பெண் குழந்தைகள் இருக்கின் றனர். திருமணமாவத ற்கு முன், நான் ஒரு பையனை காதலித்தே ன்; ஆனால், குடும்ப கட் டாயத்துக்காக என் கணவரை மணந்து கொண்டேன். நிச்சயதா ர்த்தத்தின்போது, “காத லித்த பையனோடு எது வும் உடல் ரீதியான தவ றான தொடர்பு இல்லை யே…’ எனக் கேட்டார்; “இல்லை…’ என்றேன். அப்போது பெருந்தன் மையாக நடந்து கொ ண்டவர், திருமணத்திற்குப்பின் பெரிதாய் மாறிப் போனார். தினம் குடித்துவிட்டு வந்து, “உன் காதலன் உன்னை எங்கு தொட்டான், எங் கெங்கு முத்தம் கொடுத்தான், நீயும் அவனும், 60 – 70 தடவையாவது உறவு கொண்டிருப்பீர்களா…’ என கேட்டு, சித்திரவதை செய்கிறார். தூங்கும், 10 வயது மகளை எழுப்பி, என் காதலன் பெயர் கூறி, இனி, அவன்தான் உன் அப்பா என உளறுகிறார்.

என் மூத்த மகள், திருமணமான, 10வது மாதத்தில் பிறந்தாள்; அதனால், “அவள் உனக்கு பிறந்தவள் இல்லை…’ என, என் கணவ ரின் நண்பர்கள் கூறுகின்றனராம். இத் தனைக்கும் மாதவிலக்கு ஆவதற்காக திருமணத் திற்கு முந்தின நாள் என் கணவர் தான் மாத்திரை வாங்கிக் கொடுத்தார். முதலிரவு முடிந்த மூன்று நாட் களும் எனக்கு மாதவிலக்கானது. இருந்தும் என் கணவர் சந்தே கப்படுகிறார்.

தொலைபேசியில், ராங்கால் வந்தால் சந்தேகப்படுகிறார். காலர் ஐ.டி., வாங்கி வைத்து, வரும் ராங் நம்பருடன் பேசி, அவர்களின் குலம், கோத்திரம் விசாரிக்கிறார். காய்கறி அங்காடி போக விடா மல், வீட்டுச் சிறையில் என்னை வைக்கிறார். அவருடன் ஜோடியாக வெளியில் சென்றால்தான், தலையில் பூ வைத்து கொள்ள, மேக்-அப் செய்து கொள்ள அனுமதி.

கோவிலுக்கு விளக்கு போடப் போனால், காதலனுக்காக விளக்கு போடுகிறாயா என கேட்கிறார். என்னுடன் சேர்ந்து கோவிலுக்கு வந்த வேலைக்காரியிடம், “இவளின் கள்ளக்காதலுக்கு நீ உடந்தை யா?’ என வினவினார். வேலைக்காரி வேலையிலிருந்து நின்று விட்டாள். போகும் போது, “இவனிடம் நீ மனைவியாக இருப்பதற்கு, நாலு வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்து பிழைக்கலாம்…’ என கூறி விட்டு போனாள்.

இந்த கடிதத்தை எழுதி, ஒரு வருடமாக வைத்திருந்து இப்போதுதான் உங்களுக்கு அனுப்புகிறேன் அம்மா. காரணம், உங்கள் இதழை வாரம் தவறாமல் வாசிக்கும் கணவர், நான் கடிதம் எழுதியதை கண்டு பிடித்து விடுவார் என்ற பயம். கண்டுபிடித்து விட்டால், என்னை துவைத்து எடுத்து விடுவார்.

நீங்கள்தான் அந்த ஆள் திருந்துற மாதிரி புத்தி சொல்லணும். என் மகள்களின் எதிர்காலத்துக்காக நான் எந்த தவறான முடிவும் எடுக்காமல் இருக்கிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயம்… எங்களது திருமணத்திற்கு முன், என் கணவர், என் தங்கையை ஒருதலையாய் காதலித்துள் ளார். என் தங்கையை விட, நான் அழகாய் இருந்ததால், என்னை மணந்து கொண்டிருக்கிறார். என் தங்கை, என் கணவரை பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாள். “உன் தங்கையை கல்யாணம் செய் திருந்தால் ஜாலியாக இருந்திருப்பேன்…’ என்கிறார். வாழ்க்கையில் ஒரு நாளாவது என் தங்கையுடன் தாம்பத்யம் வைத்து, குழந்தை பெற்று தருவது என் கணவரின் லட்சியமாம். இவரது துர்நடத்தை யால் இதுவரை, ஐந்து வாடகை வீடுகள் மாறி விட்டோம். இவரால் தெரு பெண்கள் என்னை ஒரு பைசாவுக்கு கூட மதிப்பதில்லை. என் நகைகளை அடகு வைத் தும், பணத்தை செலவு செய்தும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்.

ஐந்து வருடங்களுக்கு முன், இரு தடவை மகளிர் காவல் நிலையம் போய், கணவரின் மீது புகார் கொடுத்தேன். “ஒழுங்காக மனைவி யை வைத்திருப் பேன்…’ என எழுதிக் கொடுத்து, என்னை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

“மொபைல் போனில் யாரிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாய்… என் கேஜ் டாகவே இருந்தது…’ என்கிறார். என் தங்கையின் ஒழுக்கத்தை பற்றியும், தங்கை கணவர் வயது பற்றியும் இழிவாக பேசுகிறார். தந்தையின் சாக்கடை பேச்சுகளுக்கு மகள்கள் விளக்கம் கேட்கின் றனர். என்ன விளக்கம் தருவது அம்மா?

வயதான பெற்றோரிடம் என் பிரச்னைகளை நான் கொண்டு செல்வ தில்லை. சொன்னால் திருமணத்திற்கு முந்தைய என் காதலை, அவர்களிடம் போட்டுக் கொடுத்து விடுவேன் என்கிறார். அவரை கொலை செய்து விடலாமா என்று கூட யோசிக்கிறேன். குடிக்காத நேரங்களில் அறிவுரை கூறினால், அந்த அறிவுரை, இரண்டு நாள் தாங்குகிறது. போலி பக்திமானாகி என் நகைகளை அடகு வைத்து, கண்டவர்களுக்கு சாமி கும்பிட்டு, கிடா வெட்டி சாப்பாடு போடு கிறார். ஊரைச்சுற்றி கடன். சமீபத்தில் என்னை அடித்து துன்புறுத்தி, அப்பா நிலம் விற்று வைத்திருந்த நாலு லட்ச ரூபாய் பணத்தை பிடுங்கிக் கொண்டார். அந்தப் பணத்தை, நண்பனின் மகன் பாரின் போய் படிக்க, கொடுத்து விட்டார் என் கணவர். படிக்க போன மாண வன் இறந்து விட்டான். நான்தான் அப்பாவிடம் வாங்கின கடனில் முக்கால்வாசியை அடைத்தேன்.

என் கணவன், இளங்கலை கட்டடப் பொறியியல் பட்டதாரி.
என் கணவர் குடிநோயாளி, செயின் ஸ்மோக்கர், சந்தேகப் பேய், பெண்களை மதிக்கத் தெரியாதவர், ஆடம்பர செலவாளி, பிறன் மனைவி நோக்குபவர்.

மகள்களின் எதிர்காலத்துக்காக தற்கொலை எண்ணத்தை கைவிட் டுள்ளேன். பெற்றோர் வீட்டில் இருக்க முடியாது. பெற்றோரை வண்டி, வண்டியாய் திட்டி, கேவலப்படுத்தி விடுவார். எனக்கு ஒரு நல்ல தீர்வை சொல்லுங்கள்

அம்மா.
— அபாக்கியவாதி மகள்.

அன்புள்ள மகளுக்கு —
உன் நீண்ட கடிதத்தை வாசித்தேன். கடிதம் முழுக்க உன் கணவனின் திருவிளையாடல்கள் தான் விரவிக் கிடக்கின்றன.

திருமணத்திற்கு முன் நீ ஒரு பையனை காதலித் தாய். உனக்கும், அவனுக்கும் இடையே உடல் ரீதியான தொடர்பு இருந்தது(?) என்ற ஒரு விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டுதான், உன் கணவர், 10 வருடங்களாக ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வருகிறார்.

“காதலித்த விஷயம் தெரிந்துதானே மணந்து கொண்டாய். எனக் கும், அவனுக்கும் உடல்ரீதியாக தொடர்பு இல்லவே இல்லை என்று, எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் வந்து சத்தியம் செய்கிறேன். அதை மீறி நீ என்னை அவதூறு செய்தால், அணில் கடித்த பழம் உன க்கு வேண்டுமென்று நீ விரும்பி தாலி கட்டினாய் என்றுதானே அர் த்தம்? திருமணத்திற்கு முன், காதல் இல்லாத ஆண் – பெண் யார் இருக்கின்றனர்? ஏன்… நீ, என் தங்கையை ஒருதலையாய் காதலிக்க வில்லையா? திருமணத்திற்கு பின் உன்னுடைய ஆயிரம் சந்தே கங்களுக்கு இடையேயும் நான் உனக்கு விசுவாசமாக நடந்து கொள் ளவில்லையா?’ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, சைக்கோ கணவனை திணறடிக்கத் தெரியவில்லை உனக்கு.

நீ கடிதத்தில் எழுதியிருப்பதை விடவும் உனக்கும், உன் காதலனுக் கும் இடையே ஓர் ஊரறிந்த நெருக்கம் இருந்திருக்கிறது. அதை நீ ஒருபலவீனப் புள்ளியாய் பாவிக்கிறாய். உன்னை துன்புறுத்த நினை க்கும் கணவன், அந்த பலவீனப் புள்ளியையே குறி வைத்து தாக்கு கிறான்.

நீ பட்டப்படிப்பு தேர்ச்சி பெறாதவள். சொற்ப சம்பளம் பெறும் தனியார் பணியில் இருக்கிறாய். மான, அவமானத்துக்கு பெரிதும் பயப்படுப வள் என யூகிக்கிறேன்.

உன் கணவனுக்கு கீழ்க்கண்ட அதிர்ச்சி வைத்தியங்கள் கொடு; சரி யாகி விடுவான்.

பத்து வயது குழந்தையிடம், உன் காதலனின் பெயர் கூறி, அவன் தான் உன் அப்பா என உன் கணவன் கூறினால், தயங்காமல், “அப் படியென்றால் இவளின் இனிஷியலை மாற்றிவிட நீ தயாரா?’ எனக் கேள். “என் வாழ்க்கையில் வழிப் போக்கனாக வந்து போன காதலனை இன்னும் பிடித்து ஏன் தொங்குகிறாய்? இன்னும் அவன் மேல் உனக்கு அக்கறை இருந்தால், நீ என்னை விவாகரத்து செய்து விட்டு, பழைய காதலனை அவனது மனைவியை விவாகரத்து செய் ய வை. இரண்டும் முடிந்தபின் எங்களிருவருக்கும் திருமணம் செய்வித்து, இன்னொரு சந்திரபாபு ஆகிறாயா?’ எனக் கேள்.

திருமணத்திற்கு முன் கருத்தரித்திருப்பாய் என சந்தேகப்பட்டுத்தான் உன் கணவன் உனக்கு மாதவிலக்கை செயற்கையாய் தருவிக்கும் மாத்திரையை கொடுத்திருக்கிறான்.

காய்கறி வாங்க போவதை சந்தேகப்பட்டால், பையை கொடுத்து நீயே வாங்கி வந்துவிடு எனக் கூறு. திருமணத்திற்கு முன் காதல் இருந்ததை யாராரிடம் சொல்லி இழிவு படுத்துவேன் என்கிறானோ, அவர்களிடமெல்லாம் உன் முன்னாள் காதலை நாசூக்காக கூறி விடு. தங்கையின் மீதுள்ள உன் கணவனின் வக்கிரத்தை தங்கை, தங்கை கணவரிடம் தெரியப்படுத்து.

குடித்துவிட்டு அரைகுறை ஆடைகளுடன் வீட்டுக்குள் உலவினால், போதை மீறி படுத்தவுடன் சாணத்தை கரைத்து புருஷன் மேல் ஊற்று.

விட்டுப் போன படிப்பை தபாலில் தொடர்.

உன் நடத்தை மீது வீண் பழி சுமத்தினால், “ஆண்மை குறைபாடு உள் ளவன்தான் மனைவியை அர்த்தமில்லாமல் குறை காணுவான்…’ என சாடு.

நீ, உன் கணவனை முறைப்படி விவாகரத்து செய்து, நீயும், உன் மகள் களும் வாழ மாதம் குறைந்தபட்சம், ஆறாயிரம் ரூபாய் தேவை. யாரையும் சாராமல் உன்னால் அந்த, ஆறாயிரம் ரூபாயை சம்பா திக்க முடியுமா? உனக்கு, 32 வயதாகிறது. உன்னால் உன் குழந்தை களுக்காக ஒரு லட்சிய வாழ்க்கை வாழ முடியுமா? திருமணத்திற்கு முன் ஒரு காதல் இருந்தது போல, விவாகரத்துக்குப் பின் புதியதோர் காதல் முளைத்து விடாதே? அப்பாவின் துர்நடத்தையை மூத்த மகளிடம் லேசுபாசாக சொல்லி, அவளை ஒழுங்காக படிக்கச் சொல்.

பொருளாதார சுதந்திரம், மனோதிடம் இருந்தால் தாராளமாக விவாகரத்து செய்து விடலாம். மறுமணம் எளிதல்ல; நடந்தாலும் வெற்றிகரமாக இராது. இரண்டும் இல்லாவிட்டால் தொடர்ந்து வீட்டுக்குள் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்து.

வேட்டை நாய் துரத்த, முயல் தலைதெறிக்க ஓடியதாம். ஒரு புள்ளி யில் முயல் நின்று, வேட்டை நாயை எதிர்கொண்டதாம். அந்த புள்ளி பாஞ்சாலங் குறிச்சி. நீ பாஞ்சாலங்குறிச்சி முயலாகு மகளே.

வெற்றி உனதே!

— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத். 

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

 • //பொருளாதார சுதந்திரம், மனோதிடம் இருந்தால் தாராளமாக விவாகரத்து செய்து விடலாம். மறுமணம் எளிதல்ல; நடந்தாலும் வெற்றிகரமாக இராது. இரண்டும் இல்லாவிட்டால் தொடர்ந்து வீட்டுக்குள் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்து.//

  யதார்த்தமான ஆலோசனை..

 • ஆனால் அதே நேரத்தில் அங்கேயே இருந்து கொடுமைக்குள்ளவதை விட
  மணமுறிவு பெறலாம். அல்லது மணமுறிவு பெறாமல் வாழ்க்கை பொருளுதவி தொகை பெறலாம்.
  கணவனுக்கு சொத்து இருந்தால் அதில் தனித்து வசிக்கும் உரிமையை கேட்கலாம்.
  மணமுறிவின் போது நிரந்தர பிரிமனை பணமாக தொகை கோரலாம்.
  எல்லாவற்றுக்கும் கணவன் கொடுமை செய்கின்றன் என்பதை மெய்ப்பிக்க வேண்டும்.
  அதற்கு தக்க சான்றுகள் வேண்டும். எனினும் முதன்மை வழக்கு முடியும் வரை இடைக்கால வாழ்க்கை பொருளுதவி கோர வழியுண்டு.
  இவை எல்லாவற்றையும் செய்தால் கணவனுக்கு நல்ல புத்தி வந்து விடும். நீதிமன்ற அலைச்சல், செலவு, மன வருத்தம் எல்லாம் அவருக்கு ஒரு புதிய திருப்பத்தை கொடுக்கும். தேவை மனைவிக்கு ஒரு நல்ல வழக்குரைஞர்.

Leave a Reply