Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொடுதிரைகள்

மொபைல் போனில் இப்போது வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி எதிர்பார்க்கும் ஓர் ஆடம்பரம் தொடு திரையாகும். இது ஆடம்பரம் என்ற நிலையை விட்டு, இப்படித்தான் இரு க்க வேண்டும் என்ற நிலையை நோ க்கி, கட்டாய அம்சமாக மாறி வரு கிறது.
இது பற்றி மேலும் அறியச் செல்கை யில் இருவகை தொடுதிரைகள் இரு ப்பதாக நிறுவனங்கள் அறிவிக்கின் றன. அவை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மற்றும் ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன். அவை குறித்து இங்கு காணலாம்.
தொடுதிரைகள் மொபைல் போனில் மட்டுமின்றி, டேப்ளட் பிசி, லேப் டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் மானிட்டர்களிலும் தற்போது கி டைக்கின்றன. ரெசிஸ்டிவ் ஸ்கிரீன் தொழில் நுட்பம் பரவலாகப் பய ன்படுத்தப்படுகிறது.
இந்த தொழில் நுட்பத்தில், திரை யின் மேல் புறமாக எந்த ஒரு தொ டுதலையும் சந்தித்து எதிர்கொ ண்டு செயல்படும் பொருள் பூசப்ப டுகிறது. கீழாக கடத்தும் தகடு ஒன்று அமைக்கப்படுகிறது. இரண் டிற்கும் இடையே மிகச் சிறிய அள விலான காற்று இடைவெளி தர ப்படுகிறது.
இதனால், இத்திரையைத் தொடுகையில் அந்த உணர்வானது நெட்டு மற் றும் படுக்கை வச அழுத்ததின் அளவில் உணரப்பட்டு அதற்கான சர்க் யூட் இணைக்கப்பட்டு சிக்னல் உள்ளே அனுப்பப்படுகிறது. தொடு உணர்ச் சியில் இது செயல்படுவதால், இதனை இயக்க தனியான ஒரு ஸ்டை லஸ் எனப்படும் பேனா தேவை இல்லை.
ஆனால், தேவையற்ற தொடுதலை யும் இது எடுத்துக் கொண்டு செயல் படுவதால், நாம் எதிர்பார்க்காத அழைப்புகளை இது ஏற்படுத்தலா ம். கம்ப்யூட்டர்களில், தேவைப் படாத செயல்பாடுகளை இயக்க லாம்.
கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பமும் அதிகமாகவே பயன்படுத் தப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தில், பாதுகாப்பான, காப்பிடப் பட்ட வகையிலான பூச்சின் உள்ளாக ஊடுகடத்தும் பொருள் வைக்கப்படுகி றது. பொதுவாக ஊடுகடத்தும் பொரு ளாக இண்டியம் டின் ஆக்ஸைட் பயன்படுத்தப்படுகிறது.
காப்பிடப்பட்ட பூச்சாக கிளாஸ் பய ன்படுத்தப்படுகிறது. ஊடு கடத்தும் பொருள், மேலாக உள்ள கண்ணாடித் திரையுடன் தொடர்பு கொள்கை யில், அதன் எலக்ட்ரிக் பீல்டு தன்மை மாறு கிறது. தொடர்பு ஏற்படுத்தும் தொடும் இடத்தின் நான்கு முனைகளுக்கேற் றபடி சிக்னல்கள் செலுத்தப்படுகின் றன.
இதில் என்ன சிக்கல் எனில், கை விரல்களில் உறை அணிந்து கொண் டோ, அல்லது வேறு பொருள் கொண்டு மூடியோ இதனை இயக்கினால், செயல்பாடுகள் நாம் எதிர்பார்க் காத வகையில் இருக்கும்.
இந்த தொழில் நுட்பங்கள் கொண் ட இருவகை திரைகளும் தற் போது புழக்கத்தில் செம்மையாக வே இயங்கி வருகின்றன. இருப் பினும், நாம் பயன்படுத்தும் மொ பைல் போனில் எந்த வகை உள் ளது என்று தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

Leave a Reply