Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வைரஸ்கள் நமக்கு நண்பேண்டா!!!

நண்பன் பகைவன் ஆவதும், பகைவன் நண்பன் ஆவதும் பொது வாழ் விலும், அரசியலிலும் சகஜம். ஆனா ல் மனித உடலுக்கு தீமை செய்யு ம் வைரஸ்கள் ஒருபோதும் நல் லது செய்யாது என்பது மருத்துவ உண்மை. இப்போது இந்த உண் மை பொய்யாகப் போகிறது. சில வைரஸ்கள் நமக்கு நண்பன் ஆக ப்போகிறது என்கின்றன புதிய ஆய்வுகள்.

“என்னது, வைரஸ்கள் நமக்கு நண்பனா? அட, இது நல்ல கதையா இருக்கே” என்கிறீர்களா?

வைரஸ்

அட, ஆமாங்க!  உடலுக்குள் இருக்கும் ஆரோக்கியமான உயிரணுக்க ளை விடுத்து புற்றணுக்களை (புற்றுநோய் உயிரணுக்கள்) இனம்கண்டு கொல்லக்கூடிய அளவில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட வைரஸ்களை பரவிய புற்றுநோயுள்ள நோயாளி களின் உடலுக்குள் செலுத்தி, சோ தனை முறையில் சிகிச்சை மேற் கொண்டு அதில் வெற்றியும் கண் டுள்ளார்கள் Jennerex என்னும் அமெரிக்க உயிர்தொழில் நுட்பவி யல் நிறுவனத்தைச்சேர்ந்த புற்று நோய் ஆய்வாளர்கள். இந்த ஆய்வு முடிவுகள் பிரபல அறிவி யல் இதழான Nature-ல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வி ன் மூலம் ‘புற்றுநோய் கொல்லி’ வைரஸ்களைக்கொண்டு புதிய வகை புற்றுநோய் மருந்து சாத்தியப்படும் எனும் நம்பிக்கை ஏற் பட்டுள்ளது.

இந்த ஆய்வில், வெவ்வேறு அளவுகளில் வைரஸ்களைக் கொண்ட ஊசி களை, வேவ்வேறு வகையான பரவிவிட்ட புற்றுநோயுடைய நோயாளி களின் உடலுக்கு செலுத்தியிருக்கிறார்கள். 10 நாட்கள் கழித்து, நோயாளி களின் புற்றுநோய் கட்டிகளை அறுவை செய்து பரிசோதித்தபோது, மிக அதிகப்படியான வைரஸ் அளவுள்ள ஊசி கள் போடப்பட்ட 8 நோயாளிகளில் 7 பேரின் புற்றுநோய் கட்டிகளில் வைரஸ்கள் இனப் பெருக்கம் அதிகமானதும், அதனால் பின் விளைகள் ஏதும் ஏற்படாததும் கண்டறிய ப்பட்டது. மேலும், ஊசி போடப்பட்டபின் பல வாரங்கள் கழித்து, வைரஸ் ஊசி போட் டுக்கொண்ட நோயாளிகளில் பாதிபேருக்கு புற்றுநோய்கள் வளர்வது முற்றிலும் நின் றதும், ஒருவரின் புற்றுநோய் சுருங்கி விட் டதும் கண்டறியப்பட்டது. இத்தகைய சில முயற்சிகள் முந்தைய ஆய்வுகளில் மேற் கொள்ளப்பட்டாலும், ஒரு புற்றுநோயாளி யின் உடலுக்குள் செலுத்தப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட வைரஸ் எப்படி செயலாற்றுகிறது என்பதை பதிவு செய்த முதல் இதுவே என்பதுதான் இந்த ஆய்வின் விசேஷம்!

நம் உடலில் புற்றுநோய் கட்டிகள் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி தொடர்ந்து வளர்வதற்கு ஒரு முக்கிய காரணம், புற்றுநோயானது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அடக்கி விடுகிறது என்பதுதான். ஆனால் இதுதான் வைரஸ்களுக்கு சாதக மாகி விடுகிறது. அதாவது, பொது வாக உடலுக்குள் செல்லும் வைர ஸ்களை நம் நோய்எதிர்ப்பு சக்தி கொன்று விடும். ஆனால், புற்று நோயால் கட்டுப்படுத்தப்படும் நோய்எதிர்ப்பு சக்தியால் சுதந்திர மாக செயல்படும் வைரஸ்கள், புற்றணுக்களுள் சென்று அவை வெடித்துச் சிதறும்வரை உள்ளேயே இனப்பெருக்கம் செய்கின்றன. இப் படித்தான் வைரஸ்கள் மூலம் தனக்குத்தானே வேட்டு வைத்துக் கொள் கின்றன புற்றணுக்கள்!

இச்சோதனைமுறை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டுள்ள JX-594 எனும் மரபணுமாற்ற வைரஸ்களை உருவாக்க, சின்னம்மை தடுப் பூசியில் பயன்படுத்தப்பட்ட, உடலின் நோய்எதிர்ப்பு சக்தி யின் தாக்குதலை லாவ கமாக தவிர்க்கும் திறனுடைய “வாக் சீனியா வகை வைரஸ்களை” பயன் படுத்தியுள்ளனர். இவ் வைரஸ்களுக்குள், புற்றணுக் களுக்கான உடலின் நோய் எதி ர்ப்பு சக்தியினை தூண்டும் தன்மையுடைய ஒரு புரதமான GM-CSF-னை உருவாக்கும் மரபணுவை பொருத்தினார்கள். இப்புரதத் தின் திறனைப் பயன்படுத்தியே மரபணுமாற்றம் செய்யப்பட்ட வைரஸ்கள் புற்றணுக் களை வெற்றிகரமாக அழிக்கின்றன.

புற்றுநோய் கட்டிகளுக்குள் ஊசி மூலம் நேரடியாக செலுத்தப்பட் டால், புற்றணுக்களை மட்டும் தேடிப்பிடித்துக் கொல்லும் திறனு டைய பல மரபணுமாற்ற வைர ஸ்கள் தற்போது பெருமளவில் உருவாக்கப்படு கின்றன. ஆனால், உடலின் ரத்த ஓட்டத்துக்குள் செ லுத்தப்பட்டு, ரத்தத்தில் இருக்கக் கூடிய உடலின் பிற பகுதிகளுக்கு பரவும் திறனுள்ள புற்றணுக்க ளை தேடிப்பிடித்துக் கொல்லும் திறனுடைய மரபணுமாற்ற வைரஸ் களே இப்போதைய உடனடி தேவை என்கிறார் இந்த துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த ஆய்வாளரான, அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் பொதுமருத்துவமனையின் சாமுவெல் ராப்கின்!

எது எப்படியிருந்தாலும், இந்த புதிய வகை மரபணுமாற்ற வைரஸ்களி ன் வருகை, இந்த துறையின் புதிய புதிய மரபணுமாற்ற வைரஸ் உரு வாக்கும் முயற்சிகளை ஊக்குவிப்பதோடு, தற்போது கல்லீரல் புற்று நோயாளிகளின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் ஆரம்பநிலை வெற்றி கண்டிருக்கிறது என்று நம்பிக்கையளிக்கிறார் இந்த ஆய்வை மேற்கொ ண்ட ஜென்னரெக்ஸ் நிறுவனத்தின் டேவிட் கர்ன்!

இனிவரும் காலங்களில் புற்றுநோய் மருத்துவர்கள் “மரபணுமாற்ற வைரஸ்களை ‘நண்பேண்டா’ என்று கொண்டாடினாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை!

(நன்றி தினத்தந்தி)

Leave a Reply