Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஒரு பெண், தனது கணவர் என நினைத்து வேறொருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற காமெடி கலாட்டா

ஹெல்மெட் அணிந்திருந்ததால் சொந்தக் கணவரையே அடையா ளம் தெரியாமல் வேறொரு ஆணுடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றுள்ளார் ஒரு பெண். இச் சம்பவம் நெல்லை நகரில் பெற் றோல் நிரப்பு நிலையத்தில் இடம் பெற்றுள்ளது.

நெல்லை நகரில் தற்போது 85 சத வீதத்திற்கும் அதிகமான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல் கிறார்கள். இந்நிலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஒரு பெண், தனது கணவர் என நினைத்து வேறொருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற காமெடி கலாட்டா நெல்லையில் நடந்து ள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

நெல்லை டவுனில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் நேற்று இரவு ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டனர். அவர்களில் ஏராளமானோர் மனைவியு டன் வந்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் கரண்ட் இல்லை. இந்நிலையில் மனைவியுடன் வந்திருந்த ஒருவர் தனது வா கனத் திற்கு பெட்ரோல் போட்டு முடித்ததும், தன்னுடைய மனை வியை பைக்கில் ஏறுமாறு கூறினார்.

அவர் ஹெல்மெட் அணிந்திரு ந்ததால், அங்கு நின்று கொண்டி ருந்த மற்றொருவரின் மனைவி, தனது கணவர் என நினைத்து, அவரது மோட்டார்சைக்கிளில் ஏறிவிட்டார். இதனைத்தொடர்ந்து அந்த நபரும், தனது மோட்டார் சைக்கிளை அங்கிருந்து கிளப்பி னார். இதனையறியாத அந்த பெண்ணின் கணவர், தனது மனை வியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் தனது மனைவியின் செல்போனுக்கு போன் செய் தார். அப்போது அந்த பெண், உங்களு டன் வரும்போதே எனக்கு ஏன் போன் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். உட னே அந்தநபர் நான் எங்கு போன் செய் தேன் என்று கேட்டவாறு பின்னால் திரும்பி பார்த்தார். தனது மோட்டார் சைக்கிளில் வேறொரு பெண் இருப்ப தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தனது மனைவி என நினைத்து வேறொ ருபெண்ணை அழைத்து வந்ததை அந்த வாகன ஓட்டியும், தனது கணவர் என நினைத்து வேறொரு நபருடன் பைக்கி ல் சென்றதை அந்த பெண்ணும், தெரி ந்து கொண்டனர். உடனே நடந்த சம்பவம் குறித்து, அந்தபெண் தனது கணவருக்கு போன்செய்து மேம்பாலம் அருகே வர வழைத் தார். அங்கு அந்த பெண்ணின் கணவர் வந்தார்.

பின்பு தனது மனைவியை அழைத்துச்சென்றார். அதன்பிறகு அந்த வாகன ஓட்டி பெட்ரோல் பங்க்கிற்கு சென்று, அங்கு தவித்தபடி நின்ற தனது மனைவியை அழைத்துக்கொண்டு பயணத்தை தொட ர்ந்தார். கரண்ட் கட் ஆகியிருந்தது, இருவரது மேடாட்டார் சைக்கி ளும் ஒரே கம்பெனி வாகனங்கள், இருவரும் ஹெல்மெட் அணிந் திருந்தது ஆகிய மூன்று காரணங்ககளும் சேர்ந்து ஒரு கலாட்டா காமெடியை ஏற்படுத்திவிட்டன.

இணையத்தில் இருந்ததை உங்கள் இதயத்தில் இணைக்கிறோம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: