ஃபேஸ் புக் – ல் நண்பர்களை சேர்ப்பதும் நீக்குவதும் சர்வ சாதாரண மாக நடந்து வருகிறது. சராசரியாக ஒருவருக்கு 130 நண்பர்கள் ஃபேஸ் புக்கில் இருக்கி றார்கள்.
ஃபேஸ் புக் நண்பர்களில் 82% பேர் நன்கு தெரிந்தவர்களாக இருக்கி றார்கள். 60% பேர் பரஸ்பர நண்பர்களாக (மியூச்சுவல் ஃப்ரண்டஸ்) இருக்கிறார்கள். 11% பேர் பிஸினஸ் நெட் ஒர்க்கில் இருக்கிறார்கள்.
மோசமான கமென்ட்கள் கொடுப்பதால் 55% நண்பர்களை நீக்கி விடுகிறார்கள். மேலும், 39% பேர் தங்கள் பொருட்களை விற்க முயல்வதால் நண்பர்கள் பட்டியலிலிருந்து ரத்து செய்யப்படுகி றார்கள்.
நீங்கள் எப்படி?
உங்கள் நண்பர்கள் எப்படி?
thanks to nanayam vikatan
ஃபேஸ்புக்கில் மட்டுமா? விரும்பினால் சேர்த்துக்கொள்வதும், விரும்பாவிடில் விலக்கி வைப்பதும்,
பெரியவங்க ஆயிரங்காலத்து பயிறு சொன்ன திருமணம் இப்பவெல்லாம் எப்படி மாறிப்போச்சு,
காலையில் திருமணம் மாலையில் விவாகரத்து என்ற நிலைக்கு நமது இந்திய சமுதாயம் குறிப்பாக தமிழர் சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத்தாலும், ஈகோ பிரச்சனைகளாலும் தம்பதிகள் தங்களது உறவை துண்டித்துக்கொள்ள வேண்டி, குடும்ப நல நீதிமன்றங்களில் பெருகிவரும் விவாகரத்து வழக்குகளே இதற்கு சாட்சி!
இதை விட மோசம் திருமணம்செய்துகொள்ளாமலேயே ஆணும் பெண்ணும் வாழ்வதுதான்.
ஆணும் சரி பெண்ணும் சரி
பிடித்த வரை வாழ்வோம் இல்லையென்றால்,
பிடித்த சனி ஒழிந்த்தென்று, தத்தமது
பிடித்தவரை நாடிச்செல்வோம்
என்ற நிலையே ஆழமாக ஊன்றி வருவது வேதனைக்குரிய விஷயம் வெட்கப்படவேண்டிய விஷயமல்லவா?
விதை2விருட்சம், ராசகவி, ரா.சத்தியமூர்த்தி