அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனி யில் சிவமூர்த்தியும் இருக்கி றார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலி கள் அரசமரத்தின் கிளையைப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசி த்து மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய் கின்றார்கள்.
கும்பம்: கங்கை புனிதமான. எல்லாவற்றையும் தூய்மை செ ய்வது. நீரின்றி அமையா உலகு? என்ப பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழைக்கின் றன. ஆகையால், மணவறையில் கும்பத்தில் நீர் வைத்து வழிபட வேண்டும்.
ஹோமம்: அனைத்துக்கும் அக்னியே சா ட்சி. நீயே உலகுக்கொரு காட்சி? என்று சீதாதேவியார் கூறுகின்றார். அக்னியா ல் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லையானால் உயிர் நிலை பெறமாட்டா. இதனால் அக்னி யை வழிபட வேண்டும். ஹோம ப்புகை ஆயுளையும் வளர்க்கும்.
நவ கோள் வழிபாடு: ஞாயிறு முதலிய நவ கோள்கள் இந்த உலகை இயக்குகின்றன. அதனால், நவகோள் களை வழிபட வேண்டும். மணமக்களுக்கு நவகோள்கள் நல்லருள் செய்யும்.
தாலி: பழங்காலத்தில் அணிகலன்கள் செய் யும் நாகரிகம் இல்லாதி ருந்தபோது ஒழுக்கம் மட்டும் உயர்ந்திருந்தது. தாலம்? என்பது ப னை யோலையைக் குறிக்கும். அந்தப்பன யோலையை ஒழுங்கு செய்து மஞ்சள் தடவி, அதில் பிள்ளயார் சுழியிட்டு இன்னாருடய மகள், இன்னாருடய மகன் மணந்து கொண்டார். வாழ்க? என்றெழு தி, அதச் சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோர்த்து மணமகள் கழுத்திலே தரிப்பர். தால ஓலயில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்ற
பெயர் வந்தது. நாகரிகம் வள ர்ந்த பிறகு (பனை ஓலை தண் ணீர் பட்டு நைந்து போவதால்) தாலியைத் தங்கத்தினால் செய்து தரித்துக்கொண்டனர். மனைவிக்கு மணவாளனே தெய்வ மாதலின் கணவருடய இருபாதங்கள் போல் திருமாங் கல்யத்தைச் செய்து மார்பில் தரித்துக் கொண்டனர்.
பெண்களுக்குத் திருமாங்கல்யம் என்ற அந்த மங்கல நாண் உயிரி னும் சிறந்தது. பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும், திரு மாங்கல்யத்தைக் கழற்றக் கூடாது. சீதா தேவியார் இராவணனால் கவரப்பட்ட பொழுது, எல்லா அணிகலன்களயும் சுழற்றி எறிந்தனள். திருமாங்கல்யம் மட்டும் அவள் கழுத்தில் அ ணி செய்து கொண்டிருந்தது.
அட்சதை: திருமாங்கல்ய தா ரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள். க்ஷதம் என் றால் குத்வ என்று பொருள்: அகரம் அண்மைப் பொருளைத் தெரி விக்கிறது. அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாத என்று பொருள். குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றல் உள்ளது. திரு மணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து, முறை யோடு அதில் பன்னீர் தெளித்து, மஞ்சள் பொடி தூவி, அந்த அட்சதை யை மணமக்கள் தலையிலே இறைவ னுடய மந்திரங்களச் சொல்லித் தெளித்தால் ஜீவகளையுண்டாகும்.
அம்மி மிதித்தல்: மணமக்கள் அக் னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக் கும். மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மண மகன் செய்வான். அதன் பொருள் ? ‘இக்கல்லைப்போல் உறுதியாக இரு ‘ என்பதாகும். தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும். ஆனால், கல் வளயாது; பிளந்து போகும்.
– திருமுருக கிருபானந்த வாரியார்
அருமையான அர்த்தம் பொதிந்த பகிர்வு பாராட்டுக்கள்..