Sunday, December 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“ஏல” (Auction) வகைகள்

 1 இங்கிலீஷ் ஏலம்     (English Auction):

 

வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும் இந்த முறை யில் பொருட்களுக்கான விலை யை ஏற்றிக் கொண்டே செல்வா ர்கள். ஏலம் கேட்பவர்கள் ஒவ்வொ ருவரும் போட்டி போட்டுக் கொண்டு விலையை ஏற்றிக் கொண்டே செல் லும் இந்த முறையில், அதிகபட்ச விலையைக் கேட்பவர்களுக்கே ஏல த்தில் விடப்படும் பொருள் கொடுக் கப்படும். ஏலம் விடப்படுவதற்கு மு ன், அந்தப் பொருளுக்கான குறைந்தபட்ச விலையை ஏலம் விடுபவர் களோ அல்லது ஏலம் விடும் அமை ப்போ நிர்ணயம் செய்துவிடும். அந்த விலைக்கு மேல்தான் ஏலம் எடுப் பவர்கள் ஏற்றிக் கொண்டு செல்ல முடியும். சில சமயங்களில் குறைந்த பட்ச நிர்ணய விலையைத் தாண்டி யாரும் ஏலம் கேட்க வராவிட்டால் அந்த ஏலம் பணால்தான். பாரம் பரியமான இந்த ஏலமுறைதான் இன்று டெண்டர், இடெண்டர் என்று வளர்ந்துள்ளது. நம்மூரில் பரவலாக இருக்கும் ஏலமுறையும் இதுதான்.

2 டச்சு ஏலம்      (Dutch Auction):

மேலே குறிப்பிட்டுள்ள ஏலத்து க்கு நேரெதிரான முறை இது. இந்த ஏலத்தில் பொருளைக் கேட்பவர்கள் விலையைக் குறைத்துக் கேட்பார்கள். ஏலம் விடுபவர்கள் நிர்ணயம் செய் திருக்கும் குறைந்தபட்ச விலை யை முதலில் கேட்கும் நபருக்கு அந்தப் பொருள் விற் கப்படும். ஹாலந்து நாட்டி ல்  ட்யூலிப் மலர்கள் இவ்விதம் ஏலம் விடப்படுகிறது.

3 சீலிடப்பட்ட விலை ஏலம் (First Price sealed Bid Auction – FPSB):

இந்த முறையில் குறிப்பிட்ட பொருளை ஏலம் கேட்பவர்கள் அனைவரும் தங்களின் விலை யை சீலிடப்பட்ட கவர்களில் சமர்ப்பிப்பார்கள். குறிப்பிட்ட நாளில் அனைத்து கவர்களும் திறக்கப்பட்டு, விலை அதிகம் கேட்டவர்களுக்கு பொருள் வழ ங்கப்படும். நம் நாட்டில் அரசு டெண்டர்கள் இம்முறையில் தான் விடப்படுகிறது.

4 விக்கரி ஏலம் (Vickery Auction)

சீலிடப்பட்ட ஏலம் போலவேதான் இதுவும். வெற்றி பெற் றவர் இரண் டாவது இடத்தில் உள்ள அதிகபட்ச விலை யைத்தான் செலுத்துவார். தற்போது eBay போன்ற இணை ய தளங்களில் இவ்வகையான ஏலமுறை நடைமுறை யில் உள்ளன. இதன்படி இரண்டாவது அதிகபட்ச விலை யுடன் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தையும் சேர்த்து வெற் றி பெற்றவர் செலுத்த வேண்டும்.

5 மல்டி யூனிட் ஏலம்: (Multi Unit Auction):

அதிக எண்ணிக்கையில் உள் ள பல பொருட்களை ஒரே நேரத்தில் ஏலம் விடு வதற்கு இம்முறை கடைப் பிடிக்கப்படுகிறது.

6 ஆல் பே ஆக்ஷன்   (All pay Auction):

இம்முறையில் ஏலம் கேட் பவர்கள் அனைவரும் தாங்கள் ஏலம் கேட்ட தொகையைக் கட்டிவிட வேண்டும். அதிக விலை கேட்டவர்கள்தான் வெற்றி பெற்றவராவர். மற்றவர்களுக்கு பட்டை நாமம்தான்.

7 பை அவுட் ஆக்ஷன் (Buy out Auction):

ஏலம் நடந்து கொண்டிருக்கும் போதே, ஒரு குறிப்பிட்ட விலை (சாதாரணமாக இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்) அறிவி க்கப்படும். அந்த விலைக்கு யாராவது ஒப்புக் கொண்டால் அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

8 காம்பினேஷன் ஏலம் (Combination Auction):

ஏலம் எடுப்பவர்கள் பலர் கூட்ட ணி அமைத்துக் கொண்டு ஏலம் எடுக்கும் முறை இது. புரிந்து கொ ள்வதற்கு மிகக் கடினமான இந்த ஏலத்தை, பலமுறை நேரில் போ ய்ப் பார்த்தால் மட்டுமே விளங் கும்.

9 ரிவர்ஸ் ஏலம் (Reverse Auctio):

இவ்வகையில் விற்பவர், வாங்கு பவர் ஆகியோரின் நிலை மாற்றப் படும். ஒரே விதமான பொருட்களை விற்கும் பல விற்பனையாளர்களிட மிருந்து குறைந்த விலையைக் கண் டறிந்து வாங்குபவர்களுக்கு இம் முறை பெரிதும் உதவி செய்கிறது.

10 ரிசர்வ் ஏலம் (Reserve Auction):

இவ்வகையில் அதிகபட்சமாகக் கேட் கப்பட்ட தொகையானது ஏலம் விடுபவருக்குத் திருப்தியளிக்கவில் லை என்றால், அந்த ஏலத்தை நிறு த்தி விட்டு, பொருள் ஏலத்தில் விடப்படமாட்டாது என்று அறிவிக்க முடி யும். விற்பவருக்குச் சாதகமானது இது.

11 நோ ரிசர்வ் ஏலம் (No Reserve Auction):

மேலே குறிப்பிட்டதற்கு நேர் எதிரான து இது. விலை கட்டுப்படியாகிற தோ இல்லையோ, அதிகபட்ச விலைக்கு பொருளைக் கொடுத்தே ஆக வேண்டு ம்.

12 டாப் அப் ஏலம் (Top up Auction):

தர்ம காரியங்களுக்காக நடத்தப்படும் ஏலங்களில் இதுவும் ஒன்று. ஏலம் கேட்கும் அனைவருமே பணம் கட்ட வேண்டும். அவர்கள் ஏலம் கேட்ட தொ கைக்கும், அவர்களுக்கு அடுத்துக் கேட் ட தொகைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கட்ட வேண்டும். உதாரண த்துக்கு ஒருவர் 1,000 ரூபாய் ஏலத்தொகையாகக் கேட்கிறார். அவருக்கு முந்தைய ஏலத்தொகை 800 ரூபாய் என்றால்,  ஏலம் கேட்டவர் 200 ரூபாய் கட்டியாக வேண்டும்.

13 வால்ராசியன் ஏலம் (Walrasian Auction):

விற்பவர் மற்றும் வாங்குபவர்கள் என்று இரு தரப்பினரிடமிருந்தும் ஏலம் நடத்து பவர் ஏலத் தொகையைக் கோருவார். பின்பு மார்க்கெட் நில வரத்துக்கு ஏற்ப விலையைக் கூட்டிக் குறைத்து அனை வருக்கும் லாபம் கிடைக்கும் வகையில் மொத்த ஏலத்தையும் நடத்துவார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply