Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்

புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்

புடவை வாங்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொண்டு வாங்க வே ண்டும். ஏனோதனோ

என்று வாங்கினால் வாங்கி வந்து கட்டிக்கொண்டு வெளியே போகு ம்போது பிறரது கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளாக நேரிடும்.

உயரமான பெண்களுக்கான புடவை: 

பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும். மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினே ஷன்(கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள் , குறுக்கு கோடுக ள் தைரியமாக செலக்ட் பண்ணலாம். 

அகலமான கரை வைத்த புடவைகள், முப் போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக் காகவே உரு வாக்க ப்பட்டவை.
ரொம்ப குண்டாக இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரி தாகத்தோற்றம் தரும். 
பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர் களை ஓரளவு பூசினாற் போல காட்டும். நீள த் தலைப்பு வைத்துக்கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும்.., அகலமான பார்டர், நல்ல கான்ட்ரா ஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங் கள்.
பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிள வுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத் துக்கு அழகான தோற்றம் தரும்.  பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.

குள்ளமான பெண்களுக்கான புடவை: 

கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே. டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு. தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது.

காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும். கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள ஆடைகளை அணிவதாலும் உயரத்தை அதிக மாக்கிக் காட்டலாம். சாய்வான கோடுகள் உள்ள ஆடை அணிய வேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.

 

இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லோ  வயலட் , வெளிர் நீலத்தில் வெள்ளைப் பூக்கள்… இதெல்லாம் ஓகே.
ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை  விழாக்களுக்கு அணியலாம். இது  காஞ்சிப் பட்டுக்கு ஈடு கொடுக்கும்.
 
சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள் ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன்வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவை யில்லை.

 

 

குண்டாக இருப்பவர்கள். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. 2 பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர்ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தை க் கொடுக்கும். லோ ஹிப் வே ண்டாம்.

 

ஒல்லியாக சற்று குள்ளமாக இருப்பவர் அழுத்தமான கலர்க ளில் உடை அணிவதைத் தவிருங்கள். (ஆனால் கருப்பு, மெரூன் போன்ற வை யாருக்கும் பொருந்தும்) சின்ன பார்டர்புடவையைத் தேர்ந்தெடு ங்கள். கங்கா, யமுனா சேலைபோல் ஒருபக்கம் டிசைன்உள்ள  புடவை சற்று பூசினாற் போலவும் உயரமாகவும் காட்டும். பிரைட் டிசைன், பெரிய பூடிசைன்களை தவிர்த்து விடுங்கள். புடவைகளில் நீளவாட்டு கோடுகளும், நீள வாட்டு டிசைன்களும் உங்களுக்குப் பொருத்தம். 

 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply