Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

27/12/1911-ல் கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட தேசிய கீதம்

தேசிய கீதம் அறிமுகப்படுத்தப்பட்டு, நூ றாண்டுகள் ஆகின்றன. ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய “ஜன கன மன’ என்ற பாடல், முதன் முதலாக 1911ம் ஆண்டு டிச., 27ம்தேதி, கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. 

நாடு சுதந்திரம் அடைந்ததும், இந்த பாடலை தேசிய கீதமாக்க முடிவு செய் யப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்க, இந்த பாடல் எழுதப்பட்டதா ல், இதற்கு பதில் பன்கிம் சந்திர சட் டோபாத்யாயா எழுதிய “வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்க, ஒரு தரப்பி ல் வற்புறுத்தப்பட்டது. ஆனால், இந்த பாடலில், “துர்கை’ பெயர் வருவதால், அதை மற்ற மதத்தினர் ஏற்க மாட்டார்கள் என்பதால், ஜன கன மன பாடல், கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 24ம்தேதி, தேசிய கீதமாக முறைப்படி அறிவிக் கப்பட்டது. சுதந்திர தின விழா, குடி யரசு தின விழா மற்றும் அரசு விழா க்களில், இந்த பாடல் இசைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல், 52 வினாடி யில் பாடப்பட வேண்டும், என்ற விதி உள்ளது. குறிப்பாக, இந்த பாடல் இசைக்கப்படும் போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். ஆனால் இந் த நடைமுறை வரவர குறைந்து வந் தது. அதனால் திரையரங்குகளில் தே சிய கீத ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு விட் டது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply