Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது . . .

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலியும், கழுத்து வலியும் அழையா விருந்தாளிகளா க தானாகவே வந்து விடுகின்றன. ”வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக் கும் கொடுக்கும் முக்கியத்துவத்தி ல் சிறிதளவாவது, வாகனத்தை ஓட்டும் முறைக்கும், நம் உடலுக்கு ம் கொடுத்தால், வலிகள் வராமலே தடுத்து விடலாம்” என்கிறார் பிசி யோதெரபிஸ்ட் பிரேம்குமார். 

”வாகனம் ஓட்டும்போது, கழுத்து, இடுப்புப் பகுதிக்கு முன்னும் பின்னு ம் இருக்கிற தசைப் பகுதிதான் நம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இந்த இரண்டு தசைப் பகுதிகளும் ஒன் றுக்கொன்று உறுதுணையாகச் செயல்பட வேண்டும்.

பொதுவாகவே, உடல் தசைகளி ன் அமைப்பு முறைப்படி வேலை செய்யச் செய்யத்தான் அதன் உறுதித்தன்மை அதிகரிக்கும். நாம் வாகனம் ஓட்டும்போது, எதிர்காற்றைக் கிழித்துக் கொண் டு செல்ல வேண்டியுள்ளது. இந் தச்சமயத்தில் காற்று நம்மைப் பின்னோக்கித் தள்ளும். அப்போ து நமது உடலின் பேலன்ஸ் மா றும். இதைச் சரி செய்வதற்கு, நாம் உடலை முன்னோக்கித் த ள்ளுவோம். இதனால், நம் முன் பக்க தசை அதிக அளவில் முன் னோக்கி வேலை செய்யும். அந்தச்சமயத்தில், பின் பக்க தசைக ளுக்கான வேலைப் பளு குறை வாகவே இருக்கும். இப்படி, பின் பக்க தசைப் பகுதி ஓய்வு நிலையி லேயே இருப்பதால், அதன் உறுதித் தன்மையை இழந்து, முதுகெ லும்புகளுக்கு மத்தியில் இருக்கக் கூடி ய இணைப்புகள் சரிவர செயல்பட முடி யாத நிலை உருவாகிவிடும். இதன் கா ரணமாக, முதுகெலும்புகளுக்கு இடை யில் உள்ள சிறு துவாரத்திலிரு ந்து வெளிவரும் நரம்புகள் பாதிப்புக்கு உள் ளாகும்.  

மேலும் இடுப்பையும், கழுத்தையும் சுற்றி இருக்கிற தசைப் பகுதி தான், இடு ப்புப் பகுதியிலுள்ள 5 பெரிய எலும்புக ளுக்கும், கழுத்துப் பகுதியிலுள்ள 7 எலும்புகளுக்கும் பக்க பலமாக இருக்கி றது. இந்த இரண்டு பகுதிகளும் உறுதியாக இருந்தாலே வாகனம் ஓட்டுவ தால் ஏற்படக்கூடிய 70 சத விகிதப் பிரச்னைகளைத் தவிர் த்துவிட முடியும்” என்றவர், வலிகளைக் தடுக்கும் வழி முறை களையும் விளக்கினார்.

”இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவர் களுக்கு இருவிதமான வலிகள் வர லாம். ஒன்று, தசை வலி; மன் றொன்று, முதுகு எலும்புகளிலு ள்ள இணைப்புகள் தொடர்பானது. வலி ஏற்படும் போது, அது தசை வலியா அல்லது எலும்பு இணைப்புகள் தொடர்பான வலியா என்பதை நா மே எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

நம் கட்டை விரலைத் தவிர, மற்ற நான்கு விரல்களின் நுனிப் பகு தி தசையை அழுத்திப் பார்க்கவும். அதில் வலி ஏற்பட்டால் அது தசை வலி. அப்படி இல்லாமல் கைகள் மரத்துப் போனது போன்று தோன் றினால், கழுத்துப் பகுதியில் உள்ள ஏதோ ஒரு நரம்பு பாதிக்கப்ப ட்டுள்ளது என்று தெரிந்து கொ ள்ளலாம். இதேபோல், இடுப்பு முத ல் பாதம் வரை வலியோ அல்லது மரத்துப் போனது போன்ற உணர் வோ இருந்தால், இடுப்புப் பகுதியி லுள்ள நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

தசை வலியாக இருந்தால், சுடு தண்ணீரால், வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தே தசை வலி யைச் சரி செய்து விடமுடியும். அதுவே மூட்டுகளில் வலியாக இருந்தால், பிசியோதெரபிஸ்டை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்” என்றவர், வாகனம் ஓட் டுகிற முறையையும் விரிவாகக் கூறினார்.

”இன்றைய கல்லூரி மாணவர்கள் பைக் டேங்க் நோக்கி சாய்ந்த வண்ண ம் ஓட்டுவது மாதிரியான பைக்குக ளைத்தான் அதிகம் விரும்புகின்ற னர். பைக்குகளும் ஸ்போர்ட்ஸ் மாட லிலேயே தயாரிக்கப்பட்டு வருகின் றன. பைக்கினுடைய பவரையும், சிசி அளவையும் கவனிப்பவர்கள், வாக னத்தின் இருக்கையின் அமைப்பு தங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்பதைப் பார்க்க மறந்து விடுகின் றனர். குறிப்பாக, வயது அதிகமுள்ள வர்கள் முதுகை வளைத்து, சாய்ந்த வாக்கில் ஓட்டுவது என்பது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயம். அதே போல், பைக் இருக் கையின் மிக முன்பாகவோ அல்லது மிகவும் பின்னாலோ அமர்ந்து ஓட்டுவதைத் தவிர் க்க வேண்டும். தினமும் கழு த்து மற்றும் இடு ப்புப் பகுதி க்கான பிரத்யேக உடற் பயிற்சி களைச் செய்வதன் மூலம் உட ல் வலிப் பிரச்னைகளிலி ருந்து விடுபடலாம்” என்றவர், அதற் கான உடற்பயிற்சிகளையும் கூறினார்.

* வெறும் தரையில் நேராக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பிற கு, இரண்டு முழங்காலையும் மடக்கி நெ ஞ்சோடு சில விநாடிகள் சேர்த்து வை த்துக் கொள்ள வேண்டும். பின்பு, காலை மடக்கியவாறே தரையில் வைக்கவும். இப்படி தினமும் பத்து முறை செய்து வந் தால், உடலின் பின் பக்கத்தசைகள் விரி வடைந்து, ரத்த ஓட்டமும் சீராகும்.

* குப்புறப் படுத்துக்கொண்டு இரண்டு கை களையும் நெற்றிக்குக் கீழாக வைத்துக் கொள்ளவும். பின்பு, ஒரு காலை மட்டும் நீட்டிக் கொண்டு, மற்றொரு காலைத் தூக்க வேண்டும். இதேபோல், அடுத்த காலையும் தூக்கி நீட்டவும். இப்படிச் செய்வதன் மூலம், இடுப்புப் பகுதியிலு ள்ள தசைகள் வலுவாகும்.

*  சேரில் அமர்ந்தபடியே, இரண்டு தோள் பட்டைக ளையும், மேலே உயர்த்தி, சில விநாடிகள் கழி த்துக் கீழே இறக்கவும். தினமும் இந் தப் பயிற்சி யை பத்து முறை செய்து வந்தால், கழுத்து தொடர் பான வலிகளை எளிதில் தவிர்க்க முடியும்” என் றார் பிசியோதெர பிஸ்ட் பிரேம்குமார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: