Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காவியப் பாடல்கள் பல பாடிய இசைப்பேரரசி கே.பி. சுந்திராம்பாள் – வீடியோ

ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ரூ.30 லட்சம் செலவில் பிரமா ண்டமாகத் தயாரித்த “அவ்வையார்” படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டினார், கே.பி. சுந்தரா ம்பாள். 
“சந்திரலேகா”வை பிரமாண்டமாக எடுத்து மகத்தான வெற்றி பெற்றி ருந்த “ஜெமினி” எஸ்.எஸ்.வாசன், அவ்வையார் படத்தை பெரிய பட் ஜெட்டில் சிறந்த முறையில் தயா ரிக்க விரும்பி அவ்வையாராக நடி க்கும்படி சுந்தராம்பாளை கேட்டுக் கொண்டார். நீண்ட யோசனைக்குப் பிறகு சுந்தராம்பாள் ஒப்புக் கொண் டார்.
 
படத்தயாரிப்பு சுமார் ஐந்தாண்டுகள் நீடித்தது. படம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக பணத்தை தண்ணீராகச் செலவழி த்தார், வாசன். உழைப்பும், திறமையும், செலவும் வீண் போக வில்லை. 1953_ல் வெளிவந்த “அவ்வையார்”, ஒரு உன்னத காவி யமாக அமைந்தது. அவ்வையாராகவே வாழ்ந்தார் சுந்தராம்பாள்.
 
அவருடைய பாடல்களும், நடிப்பும் ரசிகர்களின் இதயங்களைத் தொட்டன. சுருக்கமாகச் சொன் னால் கறுப்பு_ வெள்ளையில் தயாரான மிகச் சிறந்த 10 படங்களை இன்று தேர்ந்தெடுத்தால், அதில் அவ்வையாருக்கு நிச்சயம் இடம் உண்டு. இப்படத்தை கொத்தமங்கலம் சுப்பு டைரக்ட் செய் திருந்தார்.
பிறகு கலைஞர் கருணாநிதி தயாரித்த ” பூம்புகார்” படத்தில் (1964) கவுந்தியடிகளாகவும், ஏ.பி.நாகராஜன் தயாரித்த “திருவிளையாடல்” படத்தில் (1965) அவ்வையாராகவும் கே.பி.எஸ். நடித்தார். திருவிளையாடல் மகத் தான வெற்றிப்படம். அந்த வெற்றிக்கு கே.பி.எஸ். பாடிய பாடல் கள் பக்கபலமாக இருந்தன.
பிறகு மகாகவி காளிதாஸ் (1966), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), சின்னப்ப தேவரின் துணைவன் (1969), காரைக் கால் அம்மையார் (1973), திருமலைத்தெய்வம் (1973) ஆகிய படங்களில் நடி த்தார். அதன்பின் டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர். ராம ண்ணா தயாரித்த “சக்திலீலை” என்ற படத்தில் நடித் தார்.
 
அவர் நடித்த கடைசி படம் இது. 1980_ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தராம்பாளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு, இருதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட் டிருந்த போதிலும் மருந்து சாப் பிட மறுத்து வந்தார்.
அவர் மயக்க நிலையில் இரு ந்தபோது மருந்து செலுத்தப் பட்டது. செப்டம்பர் 19_ந்தேதி அவர் உடல்நிலை மிகவும் மோசம் அடை ந்தது. அதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனி யார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் எவ்வ ளவோ முயன்றும் சுந்தராம்பாளைக் காப்பாற்ற முடியவில்லை.
 
இரவு 9_30 மணிக்கு இசையரசி மறைந்தார். அப்போது வளர்ப்பு மகள் ராமதிலகம், மருமகன் ரத்தினசபாபதி, தம்பி கே.பி. கனக சபாபதி ஆகி யோர் அருகே இருந்தனர். அந்த சமயத்தில் எம். ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார். “கே.பி. எஸ். தேசிய நடிகை அவர் உடலை நடிகர் சங்கத் தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டு ம்.
அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப் படும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதை சுந்த ராம்பாள் உறவினர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன்படி, நடிகர் சங்கத்துக்கு சுந்தராம்பாள் உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயி ரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
 
முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பட்வாரி, அமைச்சர்கள், தி.மு.கழக தலைவர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் _ நடிகைகள், பிரமுகர்கள் திரளாக வ ந்து அஞ்சலி செலுத்தினர். அன்று மா லை நடந்த இறுதி ஊர்வலத்தில் பெருந் திரளாக மக்கள் கலந்து கொண்டனர். உடல் கண்ணம்மாபேட்டை மயானத் தில் தகனம் செய்யப்பட்டது.
“சிதை”க்கு சுந்தராம்பாளின் தம்பி கே. பி.கனகசபாபதி தீ மூட்டினார். சுந்தரா ம்பாள் நாடக மேடைகளிலும் சினி மாப் படங்களிலும் தனியாகவும் பாடிய 200 க்கு மேற்பட்ட பாடல்கள் இசைத் தட்டு களாக வெளிவந்துள்ளன.
 
சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்ற பாடலையும் “தனித்திருந்து வாழும் தவமணியே” என்ற பாட லையும் காலத்தால் அழியா வண்ணம் அற்புதமாகப் பாடியு ள்ளார், கே.பி.எஸ்.   தேசியவா தியான அவர், பண்டித நேரு வின் தந்தை மோதிலால் நேரு இறந்தபோது “பண்டித மோதி லால் நேருவை பறி கொடுத் தோமே” என்ற பாடலையும், கஸ்தூரிபாய் காலமான போது “உன்னை மறந்திடப்போமா” என்ற பாடலையும், காந்தி மறைந்தபோது “உத்தமராம் காந்தியை” என்ற பாடலையும் தனி இசைத்தட்டாக உள்ளம் உருகப் பாடினார்.
 
மகாத்மா காந்தியை சுந்தராம்பாள் இரண்டு முறை சந்தித்து இரு க்கிறார். 1937_ல் காந்தி ஈரோடு வட்டா ரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போ து சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டின்படி கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டில் உணவருந்தினார்.
மகாத்மாவுக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பறிமாறினார் கே.பி. எஸ். “எனக்குச் சாப் பாடு மட்டும்தானா? தட்டு கிடையாதா? “என்று காந்தி சிரித்துக்கொண்டே கேட்க, விருந்து முடிந்ததும் தங்கத் தட்டை காந்தி யிடம் வழங்கினார் கே.பி.எஸ். காந்தி அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, பணத் தை கட்சி நிதியில் சேர்த்துவிட்டார்.
 
1958_ல் காமராஜர் முதல்_அமைச்சராக இருந்தபோது, கே.பி.எஸ். தமிழக மேல்_சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு “பத்மபூஷன்” விருது வழங்கி கவுரவித்தது. தருமபுரம் ஆதினம் “ஏழிசை வல்லபி” என்ற பட்டத்தையும், தமிழிசைச் சங்கம் “இசைப் பேரறிஞர்” பட்டத்தையும் வழங்கின.
Thanks to Malaimalar
ப‌டங்கள் மற்றும் வீடியோ தொகுப்பு – விதை2விருட்சம்
(இணையங்களில் இருந்து தொகுக்க‍ப்பட்ட‍து)

Leave a Reply