Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காவல் துறை முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணியோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள் ளது. புத்தாண்டு கொண்டாட்ட த்தை முன்னிட்டு காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை 

இரவு விடியவிடிய போக்குவ ரத்து சிக்னல்கள் இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. புத்தாண்டு வாழ்த்து சொ ல்லும் உணர்ச்சி வேகத்தில் இளைஞர்கள் அதிவேகமாக வாகனங் களை ஓட்டி விபத்தில் சிக்காமல் இருக்கவும், போதையில் வாகனங்களை ஓட்டி ச்சென்று விபத்தில் மாட்டி உயிர் இழப்பதை தடுக்கவும், போக்கு வரத்து போலீசார் இரவு விடிய, விடிய காவல் பணியில் இருப்பார்கள். ரோடுகளில் ஆங்காங்கே செக்போஸ்டுகள் அமைத் தும், இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்தும், போலீசார் பலகட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத் துவார்கள். 

பெண்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து சொ ல்வதுபோல் ஈவ்டீசிங் செய்தல், சாயத் தண்ணீர் அடித்தல் போன்ற களியாட் டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. வாழ் த்து சொல்வது நாகரீகமாக இருக்க வே ண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நட்சத்திர ஓட்டல் நடன நிகழ்ச்சிக்கு போலீசார் கடும் கட் டுப்பாடுகள் விதித்துள்ளனர். மது விருந்துக்கும் கட்டுப்பாடு பல மாக இருக்கும்.

முத்தம் கொடுத்து கட்டிப் பிடி த்து நடனம் ஆட தடை விதிக் கப்பட்டுள்ளது. நடன நிகழ்ச்சி க்கு ஜோடியாக வருபவர்களின் பெயர் விவரங்களை ஓட்டல் நிர்வாகம் சேகரித்து வைத்தி ருக்க கேட்டுக் கொள்ளப்பட்டு ள்ளது. பார்களில் மட்டுமே மது சப்ளை செய்ய வேண்டும். பார் களுக்கு அருகில் நடன அரங் கம் இருக்கக்கூடாது.

நீச்சல்குளத்தை அன்றையதினம் இரவு மூடிவிடவேண்டும். நீச்சல் குளம் அருகில் மதுக்கிண்ணத்துடன் போக அனுமதிக்கக் கூடாது. 

நீச்சல்குளத்தில் மேடை அமைத்து நடனமாட அனுமதி இல்லை. அதிக சத்தம் எழுப் பக்கூடாது. நடன நிகழ்ச்சி அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமை தியாக நடக்க வேண்டும். பெண் களிடம் எல்லை மீற அனுமதிக்க கூடாது.

நடனம் மற்றும் மது விருந்து நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 1 மணியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மது விருந்தில் போதை அதிகமாகி தள்ளாடும் நிலையில் இருப் பவர்களை தனியாக கார் ஓட்டிச்செல்ல ஓட்டல் நிர்வாகத்தினர் அனுமதிக்கக் கூடாது. உரிய டிரைவர்களை அமர்த்தி அவர் களை பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவத ற்கு ஏற்பாடு செய்ய வேண் டும்.

இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளோடு போலீ சார், நட்சத்தி ர ஓட்டல் விரு ந்து நிகழ்ச்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டுள்ளது. விருந்து நிகழ்ச்சி நட க்கும் நட்சத் திர ஓட்டல்கள் முன்பு இன்ஸ்பெக்டர்கள் தலைமையி ல் போலீஸ் பாதுகாப்பு போடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Thanks to Nakeeran

Leave a Reply