Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.  

இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே ‘உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு ஒருமுறை ‘உற்சாக’ மாவதை நிறுத்தினால்,  பெரும் பணம் மிச்சமாகும்.

சிகரெட், மது அளவுக்கு டீ, காபி மோசமில்லைதான் என்றாலும் நம் பணத்திற்கும் உடலுக்கும் பாதிப்பு என்பதால் முடிந்த வரை இதையும் குறைக்கலாம்.

இரு வாரத்திற்கு ஒருமுறை சினிமாவுக்குப் போவதை நிறு த்தி விட்டு, மாதத்திற்கு ஒரு முறை போவது நல்லது.  

மாதமொருமுறை குடும்பத்து டன் ஓட்டல் சென்று சாப்பிடு வதை விட்டுவிட்டு, எப்போதாவது ஒருமுறை போனால், ரசித்து சாப்பிடலாம்.

வீட்டில் மின் சாதனங்களை நன்கு பராமரித்து வருவதன் மூலம் 15-20% சதவிகித மின்சாரச் செல வைக் குறைக்கலாம். இதற்கு தேவை சோம்பேறித் தனம் பார்க்காத உடலுழைப்பு கொஞ்சமாக.

செல்போனில் ஓயாமல் பேசுவதை இன்றைக்கு பலரும் ஒரு பழக்கமாகவே ஆக்கிக் கொண்டிரு க்கிறார்கள். இதனால் நம் பணம் அநியாயமாக செலவாகிறது. அடிக்கடி பேசுவதைவிட இடை வெளி விட்டு பேசினால் உறவும் பலப்படும்; காசும் மிச்சமாகும்.

பள்ளியிலிருந்து குழந்தைகள் ஆட்டோவில் வருவதைவிட நாமே டூவீலரில் போய் அழை த்து வந்தால் ஆட்டோ காசு மிச் சமாகும். (ஒருவர் மட்டுமே வேலைக்குச் செல்லும் குடும்ப ங்களில் இது சாத்தியம்.)  அதே போலவே மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு நாமே பாடம் சொல்லித் தந்தால் டியூஷன் செலவும் மிச்சம்.

கிரெடிட் கார்டு கடன்களை தவிர்ப்பது அவசியத்திலும் அவசியம். நிதிச்சிக்கலில் இருப்பவர்க ள் கண்டிப்பாக ஷாப்பிங் செ ல்லும்போது கிரெடிட் கார்டு களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.

தேவை இருக்கிறதோ, இல் லையோ, பலர் வாரம் தோ றும் பொழுது போக்காக ஷா ப்பிங் செல்கிறார்கள். அப்படி செல்லும் போது, கண்ணில் படுவதை எல்லாம் வாங்கி வீட்டை யும் குப்பையாக்கி, காசையும் கரைத்து விடுகிறார்கள்.

பெட்ரோல் விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் அத்தி யாவசிய, அவசரத் தேவைக ளுக்கு மட்டும் கார், பைக்கு களை பயன் படுத்தலாம். மற் றநேரங்களில் பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத் து வசதிகளைப் பயன்படுத் துவது நல்லது.  

இதில் சிலவற்றை நீங்கள் கடைபிடித்தாலே போதும், உங்கள் பணம் மிச்சமாவதோடு, மருத்துவச் செலவும் கணிச மாகக் குறை ந்து, நிம்மதியாக இருக்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: