Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாசத்தைக் கொண்டே ஒருவரின் ஆளுமையைக் கண்டுபிடிக்க . . .

ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அறிய வேண்டுமா? அவரது வாசத்தைக் கொஞ்சம் மோப்பம் பிடித்தாலே போதும் என்கிறார் கள் ஆய்வாளர்கள்.

இதுதொடர்பான ஆய்வை போலந்து நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்கள் தங் கள் ஆய்வுக்கு உதவிய தன்னார் வலர்களிடம், சிலரின் ஆடை மணத்தை மோப்பம் பிடிக்கச் செய்து, அதன்மூலம் அவர்க ளைப் பற்றிக் கணிக்கச் செய்தனர்.

அப்போது அவர்களின் கணிப்பு முழுக்க முழுக்கச் சரியாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் பொருந்துவதாக இருந்தது. நமக்கு ஒருவரைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தை ஏற்படுத் துவதில், காணும், கேட்கும் விஷயங்களுடன், அவரது `வாசமும்’ முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறார்கள் போலந்து ஆய்வாளர்கள்.

“நாம் ஒவ்வொருவரும் நமது தோற் றத்தின் மூலம் மட்டு மின்றி, வாசத் தின் மூலமாகவும் நம்மை வெளிப் படுத்துகிறோம்” என்று இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான, வுரோகிளாவ் பல்கலைக்கழகத்தின் அக்னீஷ்கா சொரோகோவ்ஸ்கா கூறுகிறார்.

இந்த ஆய்வுக்காக ஆய் வாளர்கள் 30 ஆண்க ளையும், 30 பெண்களை யும் தொடர்ந்து 3 நாள் இரவு வெள்ளை காட்ட ன் டீ-ஷர்ட்களை அணியு ம்படி கேட்டுக்கொண் டனர். அவர்கள் எந்த வாசனைத் திரவியங் களையும் பயன்படுத்தக் கூடாது, சோப் கூட உபயோகிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டது.

இந்த `வாசனை தானக் காரர்களிடம்’ இருந்து பெறப்பட்ட டீ- ஷர்ட்க ளை 100 ஆண்களும், 100 பெண்களும் மோப் பம் பிடி த்துக் கருத்துக் கூறுமாறு கேட்கப்ப ட்டது. பின்னர் அந்தக் கருத்துகளை, டீ- ஷர் ட்களை அணிந்தவர்க ளிடம் தெரிவித்து, எதெல்லாம் சரி என்று கேட்கப்பட்டது. அப் போது, சில கணிப் புகள் பொருந்தவில்லை என்றபோதும், சில கணிப்புகள் மிகப் பொருத்த மாக இருந்தன. வாசத்தைக் கொண்டே ஒருவரின் ஆளு மையைக் குறிப்பிடத்தக்க அளவு கண்டுபிடித்துவிட லாம் என்பது புதுமையான விஷயமாகக் கருதப்படு கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: