Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஞ்ஞானத்தை விஞ்சும் அதிசயங்கள்

 தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. தினந்தோறும் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சியினா ல் சுயமாக சிந்திக்கும் திறனில் இருந்து எழுபது விழுக்காடு, மனித ர்களாகிய நாம் பின்தங்கி இருப்ப தாக ஒரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது.

உண்மைதான் ஒரு காலத்தில் எந்த அறிவியல் வளர்ச்சியும் இன்றி யே இன்று நிகழும் அற்புதங்களை விட பல மடங்கு சாதனைகளை செய்த மனிதன் இன்று தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்குக் கூட இயந்திர ங்களை எதிர்நோக்கும் நிலைக்கு இன்றைய மனிதர்கள் தள்ளப் பட்டுவிட்டனர்.

ஒரு காலத்தில் கடிகாரம் என்றால் என்னவென்றேத் தெரியாமல் இருந்த மனிதன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நேர த்தை அள க்கவும் கண்காணி க்கவும் கருவிகள் பயன்படுத் தப்பட்டுள்ளன. தற்போதைய அறுபதற்குரிய முறை நேர அளவீடானது சும ரில் ஏறத்தாழ கி.மு 2000 ஆண் டு காலத்தைச் சேர்ந்ததாகும். புராதன எகிப்தியர்கள் ஒரு நாளை இரண்டு 12-மணிநேர காலங்களாகப் பிரித்து, சூரிய னின் நகர்வைத் தடமறிவதற்கு பெரிய சதுரத்தூபிகளைப் பயன் படுத்தினார்கள். அவர்கள் நீர்க் கடிகாரங்களையும் உருவாக்கி னார்கள்.இது முதன் முதலில் அநேகமாக அமுன்-ரி எல் லை ப்பகு தியில் (Precinct of Amun-Re) பயன்படுத்தப்பட்டு, பின்னர் எகிப்து க்கு வெளியேயும் பயன்படுத்தப்பட்டது. புராதன கிரேக்கர்கள் இவற் றை பெரும்பாலும் பயன்படுத் தினார்கள்.

இன்று கடிகாரம் என்பதை நேரம் பார்ப்பதற்காக என்பதை மறந்து அதை ஒரு அழுகுப் பொருளாகவே மாற்றி அணிந்துகொள்ளத் தொடங் கிவிட்டன. காலையில் உதிக்கும் சூரியனின் ஒவ்வொரு அசைவிலும் நேரத்தை துல்லிய மாக கணக் கிட்டு தங்களின் தினசரி வேலைகளை செய்துவந்த மனிதர்கள். இன்று ஆயிரம் அதி நவீன வசதிகள் இருந்தும் தங்களின் நேரங்களை சரியாக பயன் படுத்த மறந்து தடுமாறும் நிலையில் இருக்கிறார்கள் என்பது மட்டும் யாரும் மறு க்க இயலாத உண்மை. சரி இவை ஒரு பக்கம் இருக்க ட்டும் இனி நாம் தகவலுக்கு வருவோம்.

இப்படித்தான் ஒரு முறை ஷாங் மன்னர் பரம்பரையானது நீர் வழிந்தோடும் கடிகாரத்தைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இக் கடிகாரங்கள் கி.மு 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசபோ டோமியாவிலிருந்து அறிமுகப்படு த்தப்பட்ட கருவிகளாகும். பிற புர தான காலங்காட்டும் கருவிகளில் சீனா, ஜப்பான், இங்கிலாந்து மற் றும் ஈராக் ஆகிய நாடுகளில் பயன் படுத்தப்பட்ட மெழுகுவர்த்தி கடி காரம், இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலும் ஐரோப்பா வின் சில பகுதிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டைம் ஸ்டிக் (timestick) மற்றும் நீர்க் கடிகாரம் போல இயங்கிய மணல் சொரி ந்து காலங்காட்டும் கருவி ஆகியவை உள்ளடங்கும்.

அந்தக் காலத்தின் சூரியனின் தோற்றம் மற்றும் சூரியனின் மறை வை வைத்து மட்டும்தான் நேரத்தைக் கணித்தார்களா நமது முன் னோர்கள் என்று பார்த்தால் அதையும் கடந்து பலப் பறவை இனங்கள் எழுப்பும் ஒலிகளைப் பயன்படுத்தியும் நேரத்தை துல்லியமாக கணித்திருக்கிறார்கள். நம க்கு தெரிந்த நமது முன்னோர்கள் சேவல் கூவும் சத்தத்தை வைத்து விடியலின் நேரத்தைக் கணக்கி டுவார்கள் என்பதை இன்றும் கிராமப்புறங்களில் பயன்படுத் தி வருகிறோம். ஆனால் இந்த சேவல் அல்லாது மற்ற எந்தப் பறவை மனிதனின் நேர கணக்கீட்டிற்கு உதவியது என்ப தையும் பார்த்து விட லாம்.

கடிகாரம் பயன்படுத்தத் தொடங்கிய ஆர ம்பகால கடிகாரங்கள் சூரியன் ஏற்படுத்துகின்ற நிழல்களைச் சார் ந்திருந்தன. ஆகவே மேக மூட்டமான வானிலையில் அல்லது இர வில் இவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. மேலும், பருவ கா லம் மாறும்போது மீண்டும் அளவு த்திருத்தம் செய்ய வேண்டியும் இரு ந்தது. சுழற்சி ஆற்றலை விட்டு விட்டு நிகழும் அசைவுகளாக மாற் றிய, நீரினால் இயங்கும் ஒழுங் படுத்தும் இயந்திர அமைப்பு பொறி முறையுடன் ஆரம்ப காலத்திலிரு ந்த கடிகாரமானது, கி.மு மூன் றாம் நூற்றாண்டு புராதன கிரீஸ் காலத் துக்குரியதாகும்.

பின்னர் சீனப் பொறியாளர்கள் பாதரசத்தினால் இயங்கும் ஒழுங்கு படுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறைகள் ஒன்றாய் சேர்ந்திரு க்கின்ற கடிகாரங்களை பத்தாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தனர். இதையடுத்து 11 ஆம் நூற்றாண் டில் பற்சக்கர அமைப்புகள் மற் றும் பாரங்கள் ஆகியவற்றால் இயக்கப்படும் நீர்க் கடிகாரங்க ளை அரபிய பொறியாளர்கள் கண்டு பிடித்தனர்.அதற்குப்பின் ஏற்பட்ட அறிவியலின் வளர்ச்சி யால் இன்று கடிகாரத்தில் வள ர்ச்சி பற்றி தான் நமக்கு நன் றாகத் தெரியுமே…!!

பின் வரும் பறவைகளின் சத்தங்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் காலையில் வேலை க்கு செல்வதற்கு நேரத்தை கணக்கிட மிகவும் உதவியாக இன்றும் பயன்படுகிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

கரிச்சான் குருவி சத்தமிடும் நேரம் < > 3 மணி.

செம்போத்து .சத்தமிடும் நேரம் < > 3-30 மணி

குயில் கூவும் நேரம் < > 4-00 மணி.

சேவல் கூவும் நேரம் < > 4-30 மணி.

காகம் கரையும் நேரம் < > 5-00 மணி.

மீன் கொத்தி.சத்தமிடும் நேரம் < > 6-00 மணி.

இனி கிராமப் புறங்களில் வசிக்கும் ஒவ்வொருவரும் மேலே குறிப் பிட்டு இருக்கும் பறவைகளில் ஏதேனும் ஒன்றின் சத்தத்தை காலை நேரத்தில் நீங்கள் கேட்க நேர்ந்தால் நேர த்தை ஒரு முறை சரி பார்த்துக்கொள்ளு ங்கள். ஆயிரம் அறி வியல் வளர்ச்சி வந்தாலும் இதுபோன்ற யதார்த்தங் களுக்கு நிகர் இந்த யதார்த்தங்களே என்பது மட் டும் திண்ணம்.

— **** —

10,000 ஆண்டு கடிகாரம்

மனித குலத்தின் இறந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தினை பறைசாற்றும் வண்ணம், the Long Now Foundation ஆல் கலை, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பின் சங்கமிப்பில் A multi- millennial mechanical monument எனப்படும் ஓர் 10,000 ஆண்டு கடிகாரம் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Danny Hillis என்ற கணிப்பொறி விஞ் ஞானியின் மிக நீண்ட கால சிந்தனை யோட்டத்தில் உருவாகிக் கொண்டிருப்பதே 10,000 ஆண்டு கடி காரம். இத்திட்டமானது 1997ல் ஆரம்பிக்கப்பட்டு, மிகுந்த கால அளவை உள்வாங்கி உருவாக்கப் படுகின்றது. அதிக படியான காலப் பயன்பாடானது இத்தகைய ஒரு திட்டத்தில் சிறந்த சிந்தனைகள் உருவாக வழிவகுக்கும் என்பது இத்திட்டத்தில் வேலைசெய்யும் அனைத்து விட்பனர்களதும் கரு த்தாகும்.

தன்னுடைய சொந்த சக்தியிலேயே இயங்கப்போகும் இக்கடிகாரம் கலை, விஞ்ஞான மற்றும் பொறியியற்றுறையிலே மிகச் சிறந்த எடு த்துக்காட்டாகும். ஆறு கடிகார முகங்களைக் கொண்ட இக் கடிகாரம், ஆண்டு, நூற் றாண்டு, சந்திர நிலை (lunar phase), தொடுவானம் (horizons) மற்றும் இரவு வானின் நட்சத் திரங்கள் என்பவற்றை 10 000 ஆண்டுகளுக்கு காண்பிக்கும்.

இதன் சிக்கலான வடிவமைப்புக்கேற்ப, இதனை அழகாக கட்டடக் கலை அம்சத்துடன் செதுக்கி, பல தலைமுறைகள், பரிணாமங்கள் தாண்டி நிலைத்து நிற்கும் கலைநயம் படைத்த சின்னமாக அமைக் கப்பட்டுக்கொண்டிருக் கின்றது.

நன்கு அடர்த்தியான, மிகவும் கடி னமான தங்குதன் (Tungsten) உலேகத்தினால் ஆன 22 பவுண் அளவுள்ள சிறிய கோளமே இதில் பெண்டுலங்களாக பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதன் மிகை அடர்த்தி காரணமாக மிகச் சிறிய இடத்தில் அதிக அளவு பாரத்தை அடக்கிவிட முடிவதால், சக்தி விர யத்தையும் காற்றினால் ஏற்படுத்ப்படும் திசைமாற்றத்தையும் கூடு மானவரை கட்டுப்படுத்த முடி யும். மற்றைய உலோகங்களில் வெப்ப மாற்றம், நீராவி மற்றும் காற்ற ழுத்தம் என்பவற்றால் ஏற் படும் நிமிட வேறுபாடு கூட இக் கடிகா ரத்தில் தங்குதன் (Tungsten) பயன் படுத்து வதால் தவிர்க்கப் படுகின்றது.

26 நகரும் நெம்புகோல்களை (movable bit levers) கொண்ட கடி காரம் ஈரியல் எண் குறியிய லைப் (binary notation) பயன்படுத்தி பெ ண்டுலத்தின் ஒவ்வொரு இயக்கத் தையும் கடிகாரத்தில் அசைவாக மாற்றுகின்றது. இன்னும் இக்க டிகார திட்டத்தின் முடிவுத் திகதி அறிவிக்கப்படாத நிலையில், இல ண்டனில் உள்ள விஞ்ஞான அருங் காட்சியகத்தில் இதன் மூல -முன்மாதிரி (prototype) காட்சி க்கு வைக் கப்பட்டுள்ளது.

இதில் பயன்படுத்தப்படும் bit serial adder system ( தமிழ் தெரியாது 🙁 ) கணிப்பொறியைப் போன்று மிகவும் துல்லியமாகவும் குறைந்த உராய்வினையும் ஏற்படுத்து வதா ல் கடிகாரத்தின் நீண்ட ஆயுற் கா லத்துக்கு பயன்படுகின்றது.

முன்நோக்கு நெறிமுறை (progressive algorithm) பயன் படுத்தப் படுவதால், கடிகாரத்தின் மையப்பகுதியில் காணப்படும் நட் ச்சத்திர வடிவ தட் டுகள் ( ஜெனீவா சக்கரங்கள் – Geneva Wheels) முன்னோக்கி சுழன்று 10 000 ஆண்டுகளும், ஒவ் வொரு நாளும் வித்தியாசமான ஒலியினை எழுப் பிக் கொண்டி ருக்கும்.

இதில் உள்ள கடத்தியில் சூரிய ஒளிபடுவதன் மூலம், சூரிய ஒத் தியக்கி ( solar synchronizer) கடி காரத்தில் ஏற்படும் நிமிட வேறுபா டு களையும் சீராக்கி, பெண்டு லத்தை சரிசெய்கின்றது.

இது இக் கடிகாரத்தின் ஓர் மாதிரி வடிவம். இதைபோன்ற ஆனால் 60 அடி உயரமான கடிகாரமே உண்மையான திட்டத்தின் நோக்கமாகும்.

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து முடிந்தால் ஒலி எழுப்பியின் மூலம் எழுப்பபடும் ஒலியானது சுமார் 75 மைல் தூரத்துக்கு கேட் டும் என கூறப்படுகின்றது.

இந்த முயற்சி வெற்றி பெற்ற‍தா என்ற தகவல் எனக்கு கிடைக்க‍ வில்லை உங்களுக்கு கிடைத்திருந்தால், கருத்துக்களின் வாயி லாக எங்களுக்கு தெரியப்படுத்த‍வும்.

***********

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: