Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்ட்ராய்ட் கைபேசி (தமிழில் தட்டச்சு செய்ய & கணினிகளில் சாத்தியமா?)

ஆண்ட்ராய்ட் வகை கைபேசியில் தமிழில் எப்படி தட்டச்சு செய்ய…

1) உங்கள் அலைபேசியில் செயலிக ளை விற்பனை செய்ய ஒரு செயலி யை உங்கள் அலைபேசி நிறுவனமே நிறுவியிருக்கும். அதாவது சாம்சங் அப்ளிகேஷன்ஸ்.கூகுள் ஸ்டோர்ஸ் போன்றவை. அதை திறக்கவும்.அது இல்லாவிட்டால் MARKET,APPBRAIN செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

2) அந்த செயலியில் உள்ள தேடுதல் பெட்டியில் tamil என எழுதி தேடுதல் பொத்தானை அழுத்தவும்.

3) தமிழ் தொடர்புடைய செயலிகள் (அகர முதலி, தட்டச்சு) பட்டியல் வரும்.அதில் உங்களுக்கு பிடித்த தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்து பதிவிறக்கவும்.நான் தேர் வு செய்தவை தமிழ் விசை, பணி ணி, கே.எம் தமிழ் கீபோர்ட், தமிழ் கீபோர்ட். இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதுமானது.

4) உதாரணத்திற்கு சாம்சங் கை பேசியில் தமிழ் விசையை எடுத்து க் கொள்வோம்.இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கைபேசியில் நிறுவிக் கொள்ளவும்.

5) உங்கள் கைபேசியின் மெனுவை திறந்து SETTINGS  பகுதிக்கு செல்லவும்.

6) SETTINGS ல் உள்ள LOCALE AND TEXT என்னும் தேர்வை திறக்கவும்.அதன் உள்ளே நீங்கள் பதிவிறக்கம் செய்த தமிழ்விசை செயலி பட்டியலிடப்பட்டிருக்கும்.அதனை தேர்வு செய்துவிட்டு மாற்றங்களை சேமிக் கவும்.

7) SETTINGS லிருந்து வெளியேறி புதிய குறுந்தகவலை தட்டச்சு செய்யத் தொடங் கவும். வார்த்தைப் பெட்டியில் (TEXT BOX)  விரலை வைத்து அழுத்திப் பிடித்தால் IN PUT MODE என்னும் தேர்வு திரை யில் வரும் அதை திறக்கவும். அதன் உள்ளே SAMSUNG KEYPAD, TAMIL VISAI ஆகியவை இருக்கும்.தமிழ் விசையை தேர்வுசெய்யவும். தமிழ் தட்டச்சுப் பலகை தோன்றும். மகிழ்ச்சியுடன் தமிழில் தட்டச்சு செய்து தமிழை பரப்புங்கள்.

FOLLOW THIS INSTRUCTIONS TO SEE TAMIL FONTS IN ANY MOBILE

1) DOWNLOAD OPERA MINI IN YOUR MOBILE
2) TYPE “about:config” WITHOUT QUOTATION IN WEB ADDRESS TAB.
3) POWER SETTINGS PAGE WILL OPEN
4) YOU WILL FIND AN OPTION WHICH SAYS “USE BITMAP TO SEE COMPLEX FONTS” IN THAT PAGE
5) GIVE YES IN THAT OPTION AND SAVE THE SETTINGS
6) RESTART OPERA MINI.

***

ஆண்ட்ராய்ட், மேசைக் கணினிகளில்  சாத்தியமா?

தற்போது ஸ்மார்ட் போன்கள் என ஆப்பிள், விண்டோஸ், ஆண் ட்ராய்ட் இயங்குதளக் கைபேசி கள் குறிப்பிடப்படுகின்றன. அதே போல இதே இயங்குதளங்கள் நிறுவப்பட்ட டேப்ளட் பிசி எனப் படும் பல கைக்கணினிகளும்  பயன்பாட்டில் உள்ளன. இக் கை யடக்க சாதனங்கள் மூலம் கணி னிக்கு இணையான பயன்பாடு கள் இன்று சாத்தியமாகியுள்ளன.

இச்சாதனங்களின் திறனை மேம்படுத்தி புதிய புதிய வசதிகள் தொ டர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையில் முன்னணி யில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ -போன் சாதனமாகும், அடுத்ததாக கூகுள் சார்பு அமைப்பான ஒன் அலையன்ஸின் ஓப்பன் சோர்ஸ் முறையிலான ஆண்ட்ராய்ட் இயங் குதளம் இரண்டாவதாக உள்ளது. அடுத்ததாக இருப்பது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண் டோஸ் 7 இயங்குதளம் ஆகும்.

இதில் ஆப்பிளும், விண்டோசும் மேசைக் கணினியிலிருந்து கை பேசிக்கு மாற்றியமைக்கப்பட்ட இயங்கு தளங்களாகும். ஆனால் ஆண்ட்ராய்ட் செல்பேசி மற்றும் டேப்ளட் பிசிக்களுக்காக வடிவ மைக்கப்பட்ட மென்பொருளா கும். தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வெளியிடப்படும் இம் மென்பொருளின் புதிய பதிப்பு அடுத்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பதிப்பிற்கு ஐஸ் கிரீம் சாண்ட்விச் (Ice Cream Sandwich) என்று பெயரிடப் பட்டுள்ளது.

இந்த இயங்குதளம் முப்பரிமாண (3D) தொழில்நுட்பம் பயன் படுத்த ப்பட்டுள்ளது. இதன்மூலம் உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு இயங்க அனுமதிக் கும் வசதி சாத்தியமாகியுள் ளது. அது மட்டு மல்லாமல் கார், பைக், வீட்டிலுள்ள மின் விசிறி, விளக்கு ஆகிய மூன்றாம் தர சாதனங்களை புளூடூத் தொழில் நுட்பம் மூலமாக கட்டுப்படுத்தும் வசதி இதில் ஏற்படுத்தப்பட் டுள்ளது.

கடைசியாக வந்த ஆண்ட்ராய்ட் பதிப்பு தோஷிபா ஏடி 200 சாதனத் தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பதிப்பு மேசைக் கணினிகளுக்கு ஏற்புடையதாக இல்லை.

ஆனால், ஐஸ்கிரீம் ஸாண்ட்விச் ஆண்ட்ராய்ட் பதிப்பு இன்டெல் மற் றும் ஏஎம்டி பிராசசர்களில் வே லை செய்யும் திறனுள்ளது. இது மேசைக் கணினிகளுக்கு இணை யானது என தொழில்நுட்ப வல்லு னர்களால் பார்க்கப்படுகிறது.

இதனால், கூகுளின் அடுத்த இல க்கு மேசைக்  கணினிகளுக்கான ஆண்ட்ராய்ட் இயங்கு தளமாக இருக்கலாம் என்றும் நம்பப்படு கிறது. ஏற்கனவே கூகுள் குரோம் (Google Chrome OS) இயங்கு தள த்தை அறிமுகம் செய்திருந்தாலும் அது பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

தற்போதுள்ள மேசைக் கணி னிகளில் மைக்ரோசாப்ட் விண்டோசின் ஆதிக்கமே பெரும்பாலும் உள்ள நிலை யில், ஸ்மார்ட் போன் களில் 50 சதவீதத்திற்குமேல் இடம் பிடித்துவிட்ட கூகுள் ஆண்ட் ராய்ட் எளிதாக மேசைக் கணினிக்கு மாறும் சாத்தியம் உள்ளது.

எதையும் செய்து பார்க்கும் கூகுள் இதையும் செய்யும் என்றும், ஐஸ் கிரீம் ஸான்ட்விச் பதிப்பிற்கு பிறகு இது நிகழலாம் என்றும் கணினி உலகில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: