Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எறும்பைக் கண்டதும் அஞ்சி நடுங்கும் விசித்திர மனிதர்

பாம்பு கடித்து மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வோரை பார்த்திரு க்கிறோம். ஆனால், எறும்பு கடித்ததாலே மருத்துவம னைக்கு செல்லக்கூடிய நப ரை கேள்விப்பட்டிருக்கி றோமா? கேரள மாநிலம், பெரும்பாவூர் மாரம்பிள் ளையில், பியூட்டி பார்லர் நடத்தி வருபவர் அப்துல் கா தர். இவர், 12 ஆண்டு சவூதி அரேபியாவில் பணி யாற்றி னார். அங்கு, 1998ம் ஆண்டு, எறும்பு கடித்து இவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. அதனா ல், உடலெங்கும் தடிப்புக்கள் தோன்றி, மயக்கம் அடைந் தார்.

இவரது நண்பர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென் றனர். ஒரு வார சிகிச்சைக்குப் பின், உடல் நலம் தேறிய காதர், மீண்டும் பணிக்குச் சென்று வந்தார். அதன்பின், எறும்பு கடித்தபோ தெல்லாம், இதேபோல் அலர்ஜி ஏற்பட்டு மயக்கமடைந்தார். விர க்தி அடைந்த காதர், இந்தியாவுக்கு திரும்பினார். எறும்பு கடித்த சில மணி நேரங்களில் சிகிச்சை அளிக்காவிட்டால், அவ ரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என டாக்டர்கள் கூறியதால், காத ரின் மனைவியும், குழந்தைகளும் அவரை பாதுகாத்து வருகின்ற னர். எறும்பு கடித்தால், தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக காதர், எப்போதும் மருந்துகளையும், மூன்று சிரிஞ்சுகளையும், தன் னுடன் வைத்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் அலர்ஜியில் இருந்து அவரை குணப்படுத்த, ஐயாயிரம் செலவாவதால், அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். இந்த அபூர்வ நோய்க்கு காரணம் என்ன என்பது மருத் துவ ரீதியாக தெரியவில்லை என்றாலும், எறும்பு கடிக்காமல் பாது காப்பது தான் ஒரே வழி என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையின் போது, காதர் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான ஆலப்புழாவிற்கு சென்றார்.

அங்கு, அவரது கால் கட்டை விரலில் எறும்பு கடித்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை அளிக்கப் பட்ட பின்னரே அவர் குணமடைந்தார்.

2009 ஆம் ஆண்டில் வெளியான‌ நாளிதழில் இணையம் வழியாக கண்டெடுக்க‍ப்பட்ட‍ செய்தி

Leave a Reply