01. காதலி பானி பிரானுக்கு ஆங்கிலக்கவிஞர் ஐர்ன்கீட்ஸின் கடிதம்
என் இனிய காதலியே!
உலகத்தில் எந்தப் பொருளுக்கும் உனது காதல் கடித்ததுக்கு உள்ள சக்தி கிடையாது என்றே நினைக்கிறேன். எனது நெஞ்சிலே உனது வடிவம்தான் நிரம்பி நிற்கிறது உனது அதரங்களிலே நான் சுவை ப்பது காதல்.உனது நடையழகிலே நான் சொக்கி நிற்கிறேன்.
நீ எனக்கு ஓராயிரம் முத்தம் வழங்கி இருக்கின்றாய்,இன்னும் ஒரு முத்தம் தரமாட்டாயா? நீ உனது காதல் கரங்க ளில் என்னை அணை த்துக் கொள்ளா விட்டால்,என் தலையில் இடி விழுந்து நான் சிதறிப் போவதே நலம்!
02. மனைவி யென்னிக்கு கார்ல் மார்க்ஸின் கடிதம்;
வேதங்களோ கிறிஸ்துவர்களின் புனர்வாழ்வுத் தத்துவமோ எனக் குத் தேவையில்லை. என் அன்பே! உனக்கும் குழந்தைகளுக்கும் ஆயிரம், ஆயிரம் முத்தங்கள்.
03. ருசியக் கதாசிரியர் டால்ஸ்டாப் தன் காதலிக்கு……..
கடந்ந மூன்று வாரங்களாக ஒவ் வொரு நாளும் நான் பேசிவிட வே ண்டும் என்று தீர்மானிக்கின்றேன் ,நான் ஏன் அதைப் பேச வில்லை; என்ன பேசுவது,எப்படிப் பேசுவது என்பவற்றையெல்லாம் சிந்திக்கின் றேன்.
இந்தக் கடிதத்தை என்னிடமே வை த்துக்கொண்டு,மறு முறையும் என க்கு பேசத் துணிவில்லை எனில் இதைக் கொடுத்துவிட வேண் டும் என்று எண்ணுகின்றேன். உண்மையாக்க கூறு நீ எனது மனைவி யாக விரும்புகிறாயா? உனது பதில் நெஞ்சின் ஆழத்திலிருந்து வர வேண்டும். தீர்க்கமாக சிந்தித்து விடை கொடு.உன்னை நான் நேசி
க்கும் அளவுக்கு நான் கணவன் என்ற முறையில் உன்னால் நேசிக்கப் படா விட்டால்,அது மிக வும் கொடியது.
04. நெப்போலியன் தன் காதலி யோசபினுக்கு எழுதிய காதல் கடிதம்
அன்பே!
நேற்று போர்களத்தில் கடுமையான வேலை,கொஞ்சம் கூட ஓய் வில்லை.உணவோ,உறக்கமோ இன்றி ஓரு வாரமாக இருந்தும், நான் சுறுசுறுப்பாக வேலை செய்வது கண்டு எங்கள் குழுவினர்
அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.
அது என்னால் எப்படி சாத்தியப்படு கிறது என்று எல்லோரும் திகைத்த னர். என்ன?…..உனக்கு ஏதாவது புரி கிறதா? நீ எழுதும் கடிதங்கள் என் சட்டைப்பையிலேயே இருப்பது வழக்கம் சோர்வு ஏற்படும்போது நான் உன் கடிதங்களை எடுத்துப் படிப் பேன்.
அவ்வளவுதான் சோர்வு பறந்துவிடு ம் புத்துணர்ச்சி உடலெல்லாம் பரவும். அப்புறம் பசியாவது தாகமா வது! ஒரு விஷயம் என் துயரங்களைக் கண்டு நீ மனதை அலட்டிக் கொள்ளக்கூடாது.
அன்புள்ள
நெப்போலியன்
கெஐட் பத்திரிகையின் ஆசி ரியர் பதவியை ஏற்றுக் கொ ண்டேன்.இப்படி ஒரு பதவி யில் அமர்ந்து நிர்வாகம் செ ய்வதே எனக்குப் பிடிக்காத விஷயம்.இப்படி ஒரு பிடி க்காத விஷயத்தில் நான் ஈடு பட்டதற்குக் காரணம் நீ தான்.என் பிரிவு உன்னை எவ்வளவு தூரம் வாட்டுடுகிறதென்று எனக்குத் தெரியும்.
வாழ்கை நடத்துவதற்கு ஏற்ற பொருளாதாரச் சூழ்நிலையை ஏற் படுத்திக் கொண்ட பிறகுதான் உன்னை மணப்பதென்பது என் தீர் மானம்.என்பது உனக்குத் தெரியும். உன்னை மணக்க வேண்டும் என்ற நினைவு பலமாக உந்தியதால் தான் கெஐட் பத்திரிகையின்
ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். என் பொருட்டு பல இன்னல்களை அனுபவிக் கின்றாய் எனக்கேள்விப்பட்டே ன். வருத்தப்படவில்லை, மகிழ் ச்சி அடைந்தேன்.இதுதான் உண்மை வாழ்க்கை.பிறர் பரிகாசம் செய்கிறார்களே என் று அஞ்சாதே,உன் மனதை உறு திப்படுத்திக் கொள்.
உன் நினைவில் இருக்கும்
காரல் மார்க்ஸ்
அன்புள்ள ஓல்கா!
உனக்கு கடிதம் எழுதவேண்டும் என்ற ஆசை என் மனத்தில் எழும் போது கூடவே கொஞ்சம் வேத னையும் எழுகிறது,உனக்குப் படிக் கத் தெரியாது. என் அன்புக் கடிதத்தைப்புரிந்து கொள்ள நீ வேறு யாருடைய உதவியாவது நாடவேண்டும் இந்தத் தடங்கலின் கார ணமாக என் இதய உணர்ச்சிகளை அடக்கிக் கடிதம் எழுத வேண்டியிருக்கிறது உனக்கு இயற்கையாகவே அமைந்து ள்ள அழகு மாதிரி கல்வியும் இருக்கக்கூடாதா,என்று என் மனம்
ஏங்குகிறது. ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னி டம் கல்வி இருக்கிறது,உன்னிடம் அழகு இருக்கிறது இரண்டும் ஒன்று சேர்ந்தால் அதுவே ஓர் ஒப்பற்ற சக் தியாகத் திகழும்.உன் நீலநிறக் கண் களில் வீசும் இன்ப ஒளி கல்வியை விட உயர்ந்த்து என்பது என் கருத்து.
அன்புள்ள
கார்க்கி
07. மார்சல் டிலெக்லூர் எழுதிய காதல் கடிதம்
அந்தக் கடிதத்தை நீங்கள் படித்துமுடிக்க வெகு காலமாகும். அவ்வ
ளவு பெரிய அந்தக் கடிதத்தில் இரு க்கும் மொத்த வார்த்தைகள் எவ்வ ளவு தெரியுமா?56,25,000 அதாவது இவ்வளவு வார்த்தைகளில்70 நாவ ல்கள் எழுதிமுடித்து விடலாம்.
இந்தக் கடிதத்தை எழுத ஒரு குமஸ் தாவை சம்பளம் கொடுத்து வைத்தி ருந்தார். மாலிக்டி வில்லடோ என்ற மங்கைக்காகத்தான் இந்தக் காதல் கடிதம் எழுதப்பட்டது. நான் உன் னைக் காதலிக்கிறேன் என்ற மூன்று வார்த்தையை மட்டும் 18,75,000 இடங்களில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் வேடிக்கையான காதல் கடிதம்தான்.
– On Chandru’s Page
அருமை