Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

2012-ல் கணிணியும், இணையமும்

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் 2012ல் பல புதிய சாதனங்கள் தகவல் தொழில்நுட்ப சந்தை யில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை 2011 ஆண்டில் அறிமுகமான, பேசப் படும் சாதனங்கள் உறுதி செய்கி ன்றன.

நிச்சயமாய் மாற்றங்களை ஏற் படுத்தப்போகும் இவற்றைப் பற் றி இங்கு காணலாம்.

1. விண்டோஸ் 8: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 இயங்குதளம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமைகளைக் கொண்டு வர இருக்கிறது.

பெர்சனல் கணிணி மற்றும் டேப்ளட் கணிணிகளுக்கிடை யே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில் இரண் டையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வர உள் ளது.

இதனால் பெர்சனல் கணணி சந்தையின் இயக்கம் குறைந்து நோட் புக் கணணிகளுக்கும், டேப்ளட் கணணிகளுக்கும் உள்ள வேறுபாடு மறைய உள்ளது. குறிப்பாக தொடுதிரை பயன்பாடு இரண்டிலும் இந்த இயங்குதளங்களிலும் மூலம் ஒரே மாதிரியாக பயன்படுத்தப் பட இருக்கிறது.

2. குரல் வழி கட்டளை: தற்போது ஐ- போன் 4 எஸ், ஸ்மார்ட் போன் களில் இணைந்து கிடைக்கும் சிரி(Siri) இயக்க தொழில் நுட்பத்தின் வெற்றி, இன்று பல ரை குரல் வழி கட்டளைக்கு தயார்படுத்தியுள் ளது.

இந்த மென்பொருள் தொழில்நுட்பத்தின் மூலம் குரல்வழி கட்டளை களைக் கொடுத்து மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளை வரிசைப் படுத்தி ஏற்படுத்தலாம், சந்திப்புக ளை அமைக்கலாம்.

நீங்கள் சாதாரணமாகப் பேசி இதனைப் பக்குவப்படுத்தி, பின் னர் கட்டளைகளை போகிற போ க்கில் அளிக்கலாம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.

கைபேசியில் மைக் ஐகான் ஒன் றைத் தட்டி, செய்தியை குரல் வழிச்செய்தியாகத்தரலாம். அனை த்தும் தந்து முடித்தவுடன் உங்கள் செய்தி டெக்ஸ்ட்டாக மாற்றப்பட்டு, பின்னர் உங்கள் அனுமதி பெற்று அனுப்பப்படும்.

பெர்சனல் கணணியில் இது பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலை வில் இல்லை என்றே கூறலாம். இந்த தொழில்நுட்பம் எங்கு இயங்காது என்று தற்போது எண்ணப்படுகிறதோ, அங்கு இது சோதனை செய்து பார்க்கப்பட்டு நிச் சயம் கணணியிலும் பிற சாதனங்களி லும் கிடைக்கும். இணைய தளங்களி லும் சிரி இயக்க இன்டர்பேஸ் போல அமைக்கப்படலாம்

இதன் மூலம் நாம் அதில் சென்று வருவது எளிதாக்கப்படலாம். பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் சீனாவில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. குறையும் மின்னஞ்சல் பயன் பாடு: இது பல ஆண்டுகளாக வே பேசப்பட்டு வருகிறது. இனி மின்னஞ்சல் புரோகிராம்கள் தேவைப்படாது. 1992 ஆண்டுக் குப் பின் ஹாட்மெயில் அல்ல து மின்னஞ்சல் சேவை தரத் தொடங்கிய நிறுவனங்களில், மின்னஞ்சல் கணக்கு ஒன்றை வைத்துக் கொண்டு அதனைப் பெருமையாகப் பேசுவது ஒரு டிஜிட்டல் ஸ்டேட்டஸ் அடையாள மாக இருந்து வந்தது.

ஆனால் இப்போது வளர்ந்து வரும் சிறுவர்கள் மின்னஞ்சல் கணக்கு எல்லாம் வைத்துக் கொள்வது இல் லை. சமுதாய இணையத்தளங்க ளில் தங்களைப் பதிவு செய்து கொ ண்டு செயல்படுகின்றனர். தங்கள் குழுக்களோடு பதிவுகளைத் தொடர் ந்து ஏற்படுத்தி வருகின் றனர்.

4. தொலைக்காட்சிகளில் மாற்றம்: தொலைக்காட்சி பெட்டிகள் கணி ணியின் பயன்பாட்டினை மேற்கொ ள்ளும் காலம் வந்துவிட்டது. இ ணைய பயன்பாடு கொண்ட டிவி க்கள் வரத் தொடங்கி விட்டன.

திரைப்படங்களையும், தேவைப்படும் காட்சிகளையும், கேம்ஸ்க ளையும், விளையாட்டுப் போட்டிகளையும் கேட்டு வாங்கிப் பார்ப் பது, இந்த டிவிக்கள் மூலம் வளர்ச்சி அடையும். இத்தகைய சாதன ங்கள், இனி கணணி மற்றும் இணையப் பயன்பாட்டினையே முதன் மையாகக் கொண்டு இயங்கும். அவற்றுடன் டிவி சேனல்களை யும் காட்டும்.

5. டிஜிட்டல் ஸ்டோர்கள்: இனி அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகு ப்புகளையோ, வேறு இயங்கு தளங்களையோ நாம் வெளியே வாங்க வேண்டியதிருக்காது. அந்தந்த நிறுவனங்களின் அப்ளி கேஷன் ஸ்டோர்களிலிருந்து இணையம் வழியாக நம்பிக்கையுடன் வாங் கிக் கொள்ளலாம்.

ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இந்த வழி யில் நிலையான தங்கள் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு வருகி ன்றன.

6. தடிமன் குறையும்: டிஜிட்டல் சாதனங்களின் தடிமனைக் குறை த்து பாக்கெட்களில் வைத்து இயக் கும் அளவிற்கு, ஒவ்வொரு நிறுவ னமும் தங்கள் சாதனங்களின் தடி மனைக் குறைத்து வருகின்றன.

இதற்கு முதலில் வழி வகுத்தது ஐ -பேட் மற்றும் அல்ட்ரா புக் கணணி களே. கணணி மட்டுமின்றி, மொ பைல் போன்கள், ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் பிசிக்கள், டிவிக்க ளும் தங்கள் தடிமன் குறைந்த பதிப்புகளை வெளியிட்டு வருகி ன்றன. வரும் 2012ல் இவை மட் டுமே விற்பனையாகும்.

7. அனைத்திலும் டேப்ளட் பிசி: சாம்சங் நிறுவனம் டேப்ளட் பிசி இணைந்த ரெப்ரிஜிரேட்டர் ஒன்றை வடிவ மைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதனை மற்ற சாதனங்கள் வடிவமைக்கும் நிறுவனங்களும், ரெப்ரிஜிரேட்டர் தயாரி க்கும் நிறுவனங்களும் பின்பற்றலாம். கார்களின் டேஷ் போர்டில், டேப்ளட் பிசி க்கள் இணைந்து கிடைப்பது இனி கார் ஒன்றின் அம்சமாகக் கருதப்படும்.

8. ஒருவரோடு ஒருவர்: இனி ஓன்லைன் கேம்ஸ் எல்லாம் தேவைப் படாது. ஸ்மார்ட் போன்கள் வழி யாக இருவர் தனி நபர் விளை யாட்டுப்போட்டியில் ஈடுபடலா ம். இதற்கு நெட்வொர்க் தேவை ப்படாது. இரண்டு போன்கள் தங்களுக்குள் நெட்வொர்க் உத வியின்றி பேசிக்கொள்ள முடி யும். இந்த வசதி வலுப்படுத்தப் பட்டு, பல வகையான தொட ர்புகளை ஏற்படுத்தித் தரு ம்.

எனவே வரும் ஆண்டில் டிஜிட்டல் சாதனங்களின் தடிமன் மிக மிகக் குறைவாக இருக்கும், சமுதாய இணைப்பு தருவதாக இயங்கும், ஒருவருக்கொருவர் இணைப்பு கொள்வது, பேசுவதும், விளையாடு வதும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் மிக மிக எளிதாக அமையும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: