Tuesday, November 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெயமாகட்டும். . !

ஜ‌னவரி 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

2012 ஆம் ஆண்டு சில நம்பிக்கை கீற்றுகளுடன் ஒளி வீசப் பிறந்துள்ள‍து. அதை வரவேற்போம்.

“அமுல் பாலையும்”, “டினோ பாலை” யும் மட்டுமே தெரிந்த கடைக்கோ டி கிராம மக்க‍ளுக்கு கூட “லோக் பால்” என்ன‍வென்று தெரிந்திருக் கிறது. கறுப்புப் பணத்தை எப்ப‍ டியும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை கூடி வருகிறது. நீதித் துறையின் அதிரடி முடிவு களால் ஆட்சி யாளர்களின் ஆர்ப்பாட்ட‍ம் குறைந்து வருகிறது.

தனி மனிதன் தேசப் பற்றுடனும், தியாக உணர்வுடனும் புறப் பட்டால் . . . தேசமும் அவன் பின் திரண்டு எழும் என்பதற்கு ஹசாரே போன்றவர்களை கடந்த ஆண்டு அடையாளம் காட்டி யிருக்கிறது.

கூடங்குளமாகட்டும். . . முல்லைப்பெரியாறாகட்டும். . மக்க‍ளை மீறி எதுவும் செய்ய‍ முடி யாது என்ற மகத்தான மந்திரம் ஆட்சியாளர்க ளைக் கட்டிப்போட்டுள் ள‍து. தென் மாவட்ட‍ ங்களில் எழுந்து ள்ள‍ போராட்ட‍ங்களை உணர வேண்டிய உண்மை உணர்த்த‍ப் பட்டுள்ள‍து.

தமிழகத்தைப் பொறுத்த‍வரை ஆக்ஷன் – த்ரில்ல‍ர் படங்களை மிஞ்சும் அதிரடிகளால் கொஞ்சம் கவலை – கொஞ்சம் மகிழ்ச்சி இருப்பினும் கல்விக் கூடங்க ளில் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, அதற்கான செல வுகளை அரசே ஏற்பது மூத்த‍ தமிழறிர் களுக்கு, ஓய்வூதிய உயர்வு, புதிதாய் பேரூந்து வா ங்குதல், பேருந்துகளை தின மும் சுத்த‍ம் செய்ய பணியா ளர்கள் தேர்வு போன்ற அறிவிப் புகள் ஆரோக்கியமானதாய் தெரி கின்றன•

நிர்வாகத்தில் அறிவிப்புகள் குறுக்கீடு கூடாது. . . அதைவிட அரசியல் கைக்கூலிகளின் ஆதிக்க‍ம் அறவே கூடாது என்ற துணி ச்சலான முடிவை எடுக்க‍ நெஞ்சுர மும் தன்ன‍ம்பிக்கையும் கொண் ட தலைவர்களால் மட்டுமே முடி யும். காமராசர் எம்.ஜி.ஆர். க்கு பிறகு அப்ப‍டி ஒரு தலைவரை தற்போதைய முதல்வர் வடிவில் தரிசிப்ப‍தாக பலரும் பெருமைப் படுகின்றனர்.

நாடா? நட்பா? . . . மக்க‍ளா? தன் மக்க‍ளா? . .. என்ற கேள்விக்கு தெளிவான பதில் தந்து கட்சியிலும் அரசியல் விமர்சகர் மத்தி யிலும் ஜாக்பாட் அடித்த‍ வெற் றியாளராய்த் தெரிகிறது.

பகைவனுக்கு அருளி, ஆபத் தான அடிவருடிகளை அப்புற ப்படுத்தி விசுவாசிகளை அரு கே அமர்த்திக்கொண்டால், முதல் வரின் மரியாதை இன்னும் கூடும்.

ஜெயா மாறட்டும்!. . . தமிழ் மக்க‍ளின் கனவுகள் ஜெயமாகட்டும்.

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply