Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறிவு ஆலயங்களுக்கா இந்த அவல நிலை?

அறிவு வளர்ச்சிக்கான அடையாளமே புத்தகங்கள். அந்தப் புத்தகப் பூக்கள் பூத்துக் குலுங்கும் சோ லையே நூலகமாகும். இது மனி த நாகரிகத்தின் தொட்டில்; சிந்த னையாளர்களின் சீரிய பாசறை; அடுத்த தலைமுறையை ஆளா க்கும் குருகுலம்; இதைப் போற் றிப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அரசாங்கத்தின் கடமை மட்டு மல்ல, அனைவரின் கடமையு மாகும்.

 அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் நோக்கில் புதிய கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா. நூற்றாண்டு நூலகத் தை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக் ககத் தின் வளாகத்துக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட் டது.

புதிதாகக் கட்டப்பட்ட தலை மைச் செயலகத்தை சர்வதேச மருத்து வமனையாக ஆக்கப் போவதாக அறிவித்ததுபோலவே அண்ணா நூற்றாண்டு நூல கத்தை குழந்தைகள் மருத்துவமனை மற்றும் அதன் ஆய்வுக்கான மருத்துவமனையாகப் பயன்படுத்தப் போவ தாகவும், இப்போ துள்ள நூலகத்தை டிபிஐ வளாகத்துக்கு மாற்று வதாகவும் புதிய அரசு அறிவித்தது.

இதை தமிழ் இயக்கங்களும், எழுத்தாளர் மன்றங்களும், தன்னார்வ த் தொண்டு அமைப்புகளும், கல்வியாளர்களும், அறிவாள ர்களும் கண்டித்துள்ளனர்; எதிர் த்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தி யுள்ளனர். அந்த நூலகம் எந்த நோக்கத்துக்காகக் கட்டப்பட்ட தோ அதே நோக் கத்துக்காகவே பயன்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக் கையாகும் .

இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தமிழக அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது; இதுபற்றி விள க்கமும் கூறும்படி தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள து.

கிராமப்புறமாகட்டும், நகர்ப் புறமா கட்டும் பத்திரிகைகள் மற்றும் புத் தகங்கள் வாசிப்புக்காகப் பெரும் பான்மையான மக்கள் இப்போ தும், எப்போதும் நூலகங்களையே நம்பி யிருக்கின்றனர். நகரமோ, கிராம மோ நூலகப்பயன்பாடு என்பது வெ றும் பொழுதுபோக்கு என்ற நிலை யைக் கடந்துவிட்டது.

தேர்வுக்கான தயாரிப்பு, ஆய்வுக் கான தேவை, சுயதொழில் வழி காட்டுதல், தன் முன்னேற்றம் என நூலகத்தின் தேவை விரிவடை ந்து வருகிறது. பள்ளிதோறும், வகுப்பறைதோறும் என்ற நிலை யைத் தாண்டி வீடுதோறும் நூலகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று முழங்க வேண்டிய இந்தக் கால கட்டத்தில் தமிழ்நாட்டில் நூல் நிலையங்களின் நிலை எப்படி இருக் கிறது?

தமிழகத்தின் அனைத்து ஊராட்சியி லும் ஏற்படுத்தப்பட்ட ஊர்ப்புற நூல கங்கள் ஆதரிப்பார் இல்லாத அநா தைகளாகச் செயல் இழந்து கிடக்கி ன்றன. இருக்க இடம் இல்லாமல் அடுக்கி வைக்க அலமாரி இல் லாமல் அலங்கோலமாகக் கிடக்கும் நூல்கள் அழமுடியாமல் தவிக்கின்றன. அறிவு ஆலயங்களுக்கா இந்த அவல நிலை?

கிராமப்புற மக்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க வே ண்டும் என்ற நோக்கத்தில் 2000-ம் ஆண் டில் திருவள்ளுவர் நா ளான ஜனவரி 16-ம் நாள் 6.5 கோடி மதிப்பீட்டில் 12,700 நூல கங்கள் ஏற்படுத்தப்பட்டன. அய்யன் திரு வள்ளுவன் பெயரில் அமைந்த இந்த நூல கங்கள் ஒவ்வொன்றுக்கும் 75 நூல்கள் வீதம் 10 லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட் டன.

இவ்வாறு ஒரே நாளில் ஆயிரக்கணக் கான நூலகங்களைத் திறந்த அரசின் சாத னையைப் புத்தக விரும்பிகள் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர். இந்த அய்யன் திரு வள்ளுவர் நூல் நிலையங்கள் ஊராட்சி அலுவலகங்களின் ஒரு பகுதியில் செயல் படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இப்போது மாவட்டத்துக்கு ஒருசில ஊராட்சிகளில் மட்டும் இந்த நூல் நிலையங்கள் ஓரளவு செயல்படுகின்றன. அறிவொளி இயக்க த்தினர், தன்னார்வத் தொண்டு அமைப்பினர், பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மூலம் இந்த நூலகங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த நூல் நிலை யங்கள் இருந்தும், இல்லாத நிலையிலேயே இருக்கின்றன.

இதுதான் இப்படியிருக்கிறது என்றால் பொது நூலகத்துறை நூலகங் களைப் பற் றிக் கேட்க வேண்டுமா? தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 700-க்கும் அதிகமான நூலகங் கள் செயல்படுகின்றன.

இவை அனைத்தும் பொது நூலகத்துறை யின் நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. இவ ற்றுக்குத் தேவையான புத்தகங்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு பொதுநூலகத் துறையிடம் தரப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வீட்டு வரி யுடன் சேர்த்து நூலக வரியாக வசூலிக்கப் படும் கோடிக்கணக்கான நிதியும், கொல் கத்தா ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை அளிக்கும் நிதியும் பொது நூலகத் துறைக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிதி ஆதார ங்களை பொது நூலகத் துறை எப்படிச் செலவிடுகிறது என்பதுதான் இப்போது விவாதப் பொருளா கியுள்ளது.

அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு சென்னையில் உலக அளவில் ஒரு பெரிய நூலகம் அமைக்கப்படும் என் றும், பொது நூலகங்களு க்கு வாங்கப் படும் நூல்களின் எண்ணிக்கை 1,000 படிகளாக அதிகரிக்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் அறிவித்தார்.

 ஆனால், அதற்கேற்ப அரசு நிர்வாகம் செயல்படவில்லை. மாறாக, பொது நூலகத்துறையின் வரிப்பணம் அண் ணா நூற்றாண்டு நூலகத்துக்குத் திருப் பிவிடப்பட்டுள்ளது. அதனால் 2009-ம் ஆண்டு முதல் இன்றுவரை நூலகங்களுக்கான நூல்களை பொது நூலகத் துறை வாங்கவில்லை என்பது பதிப்பகங்களுக்கும், எழுத் தாளர் களுக்கும் வெளியிட முடியாத மனவருத்தமாகும்.

இனியாவது தாமதமில்லாமல் ஆண்டுக்காண்டு நூல்கள் வாங்கு வதை புதிய அரசு உறுதி செய்ய வேண்டும்; நடுநிலையான தேர்வு க் குழுவை அமைத்து நூல்களைத் தேர்வு செய்ய வேண்டும்; வெளிப் படையான தெளிவான நூலகக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

புதிய உலகத்தைப் படைப்பத ற்கும், புரட்சிப் பாதையைக் காட்டுவ தற்கும் போர்க்களத் தைவிட புத்தகக்களமே வெற் றியைத் தேடித்தந்திருக்கிறது . அதனால்தான் வாளின் வலி மையைவிட எழுது கோலின் வலிமையே பெரிது என்பதை நெப்போலியன் போன்ற மாவீ ரர்களே ஒத்துக் கொண்டனர்; “நாம் எழுத்தால் புத்தகத்தால் சண்டை போடுகிறோம்’ என்று ஷேக் ஸ்பியர் கூறியதும் அதனால் தான்.

 1789-ம் ஆண்டு உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த பிரெஞ்சுப் புரட்சி தொடங்கியது. அதற்கான சிந்தனைகளை அடி மைப்பட்டுக் கிடந்த மக்களிடம் விதைத்து விட்டுப் போன மாபெ ரும் எழுத்துலகச் சிற்பிகள் வால் டேரும், ரூசோவும் என்பதைக் காலம் மறக் குமா? ரூசோவின் “சமுதாய ஒப்ப ந்தம்’ என்னும் நூலில் உள்ள வாசகங்களே பிரெஞ் சுப் புரட்சியின் சுதந்திரப் பிரகடனத்திலும், அமெ ரிக்க சுதந்திரப் பிரகடனத்திலும் இடம்பெற்றன.

மானிட சமுதாயம் ஏற்றத்தாழ்வ ற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற வெறியோடும், நெறியோடும் கார்ல்மார்க்ஸ் படைத்தளித்த “காபிடல்’ என்னும் மூலதனம் இன் றுவரை உலகில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. 1883-ல் அவர் சிந்திப்பதை நிறுத்தும்வரை எழுதிக் கொண்டிருந்தார்.

டால்ஸ்டாயும், ரஸ்கினும் உருவாக்கிய புத்தக ங்கள் காந்தியை “மகாத்மா’வாக்கியது; காந்தியாரி ன் சுயசரிதை பலரை மனிதர்களாக்கியது. எளிமை யும், இரக்கமும் கொள்ளச் செய்தது. நேருவின் “உலக சரித்திரம்’ பலருக்குப் பாடமானது. இராம கிருஷ்ண ரும், விவேகானந்தரும் ஆன்மிகப் படை ப்புகளால் மக்களை ஆட் கொண்டனர்.

இவ்வாறு நூல்கள் ஆக்கப்பணிகளுக்கு வழிகாட்டுமானால் வர வேற்க வேண்டியதுதான். ஆனால், அழிவுப் பணிகளுக்கும் பயன் படும் நூல்களைக் கண்டறிந்து விலக்க வேண்டும். ஐரோப்பாவின் சர்ச்சைக்குரிய படைப்பான மாக்கியவல்லியின் “இளவரசன்’ என் னும் நூல் ஹிட்லரை உருவாக்கியது. “தனக்கு ஊக்கம் தந்த நூல்’ என்று அவன் அதைப் பாராட்டினான். அவன் எழுதிய “மெயின் காம்ப்’ என்னும் நூல் ஜெர்மனியில் போர்வெறியை ஏற்படுத்தியது; ஓர் உலகப்போரையே உருவாக்கியது. எனவே, நூல்கள் ஆக்கவும், அழிக்கவும் வல்ல ஆற்றல் படைத்தவை.

புத்தகங்கள் இல்லாத வீடு, சாள ரங்கள் இல்லாத அறை போன் றது என அறிஞர்கள் கருதினர். “எந்த வீட்டில் புத்தகசாலை இருக்கிறதோ அந்த வீட்டில் தான் ஆத்மா இருக்கிறது’ என் று பிளேட் டோவும் கூறினார்.

உலகம் தோன்றிய பிறகு நாக ரிகமற்ற மக்களை நெறிப்ப டுத்த சமயங்கள் உயிர்த்தெழு ந்தபோது மறைநூல்களும் தோன்றின. இன்றும் அவை வாழ்ந்து வழிகாட்டுகின்றன. நாகரிகம் பெற்ற மக் கள் நெறிபிறழாமல் நடக்க அறநூல்கள் உருவாக்கப்பட்டன. மனித நாகரிகத்தின் அடையாள மாக இலக்கியங்கள், காவியங்கள் படைக் கப்பட்டன. புராணம், இதிகாசங்களும் இப்படித்தான். சங்க இலக்கியங்களும் தமிழ் மக்களின் பொற்கால வாழ்வின் புதிய விடியல்க ளாகத் திகழ்ந்தன.

இந்த பூமி எத்தனையோ அழிவுகளைச் சந்தித்துவிட்டது. எனினும், சாகாத இலக்கியங்கள் இன்னும் வாழ்கின்றன. அவை நம்மோடு பேசுகின்றன. கை குலுக்குகின்றன. வழியைக் காட்டுகி ன்றன. “வாழ்க’ என்று வாழ்த்து கூறுகி ன்றன. அவை வெறும் காகிதங்கள் அல்ல, ஆயுதங்கள்.

 “”இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த சான்றோர் களுடன் உறவு கொள்வதற்கும் நூல் உதவி செய்கிறது. திருவள் ளுவர் காலம் வேறு; ஆயினும் காலத்தின் இந்தத் தடையைக் கடந்து ஆசிரியருடன் உறவு கொ ள்ள வைக்கிறது திருக்குறள். அறிவியலால் முடியாத அரிய பெரிய பயனை நல்ல நூலால் பெற்று மகிழ்கின்றோம்” என்று டாக்டர் மு.வ. கூறுவதும் இந்த இலக்கிய உறவைத்தான்.

இவ்வாறு காலங்களையும், தேசங்களையும் கடந்து வாழ்ந்து வரு ம் புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கப்படுகிறது; இத ற்கு “புத்தகக் கண்காட்சி’ என்று பெயர். மனித சமுதாயத்து க்காகச் சிந்தித்தவர்களை நாமும் நன்றியோடு நினைத்துப் பார் க்கும் நேரம் இது.

“எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்’ என்று பாடிய பாரதி உண்மையான எழுத்துக்கு உதாரணமாக வாழ்ந்தவர். இப்படி ப்பட்ட எழுத்தாளர் பொன்னுக்கும், பொருளுக்கும் மட்டுமல்ல, புகழுக்கும்கூட எழுதுகிறவன் அல்ல.

உலகம் உய்ய வேண்டும் என்பதைத் தவிர, வேறு நோக்கம் இல் லை. அவன் படைப்புகள் காலம் கடந்து வாழ்கிறபோது அவனும் வாழ்கிறான்; அவனால் மனித சமுதாயமும் வாழ்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply