விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!
கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநிலையில் இல்லை.
ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம்
தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல் லை. தற்போதைய காலகட்ட த்தில் விவாகரத்து என்பது எளிதாக கிடைத்து விடும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் விவா கரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமை யானது. அதைப் பற்றி யாரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோ பாவ த்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் அது உண்மை யில்லை என்பதை உணரும்போது, வாழ்க்கையே முடிந்து போய் இருக்கும்.
தவறுகளே செய்யாத மனிதர்கள் இல்லை. அதை திருத்திக் கொள்
ளும் முயற்சி தான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன் செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்து க்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன் னொரு வர் வந்துவிடுகிறார்.
திருமணத்துக்கு முன்பு- திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது
விவாகரத்துக்கு முன்பு- பின்பு என்று பிரித்துப் பார் க்கிறார்கள். அதில் பிந் தைய காலம் அனேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.
ஆண்களும் விவாகரத்து க்கு பிறகு அதிகமான மன நெருக்கடிக்கு உள்ளாகி விடு கிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப் படைகி றது. `தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக் கொள்வார்
களோ!’ என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டார த்தை குறைக் கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிய வடிவ த்தில் தன் கண்முன்னே வந்து நிற்கும். அந்த நேரத்தில் தன் மீதே தனக்கு கோபமும், டென் ஷனும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். இதனால் காரை வேகமாக ஓட்டி தாறுமாறாக செல்வது, மது அருந்துவது, உறவு களை புறக்கணிப்பது என்று முரண்பாடான பாதையில் பயணிக்க தொடங்கிவிடுவார்கள்.
விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! என்னதான்
மனதளவில் அவள் தைரிய மான பெண்ணாக இருந்தா லும், அவளுடைய சமூக அந்தஸ்து குறைந்து விடும். அதற்கு தக்கபடி அவள் தன் மனதை பக்குவப்படுத்திக் கொ ள்ளாவிட்டால், மனதளவில் உடை ந்து போவாள். அப்போது தனக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தனக்கு பின் னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர் வாள்.
உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, `நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?’ என்ற கேள்வி!
அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர் காலம் என்ன ஆகுமோ என்ற கேள்வி க்குறியும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ் க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும்.
அப்போது அவர்கள் தங்கள் பலத்தை எல்லாம் இழந்து விடுகிறார் கள். சுற்றி இருப்பவர் களிடம் மூர்க்கத் தனமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களது வாழ்க்கையில் தேவையற்ற டென்ஷனும், கோபமுமே மிஞ்சும். மனதில் பரவியிருக்கும் வெறுமை வார்த்தை களில் வெறு ப்பாக வெளிவரும். அது மற்றவர்களை புண்படுத்தி அவர்களையும்
விலகச் செய்யும்.
கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டால், அந்த நேரத்தில் பேச்சை குறைத்துக் கொள்ளவேண்டும். தேவை யற்ற பேச்சு பிரச்சி னையை அதிகமாக்கும். அமைதியாக தெளிவான சிந்தனையோடு, சிக்கல்களை முடிவுக்கு கொ ண்டுவர வேண்டும். விவகாரத் துக்கு முன் நிறைய யோசிக்க வேண்டும். முக்கியமாக அதற்கு பின்னால் வாழப்போகும் வாழ்க்கையை பற்றி யோசிக்க வேண்டும்.
`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’ என்று கேட்கும் பெண்களுக்கான ஆலோசனை:
விவாகரத்தான பெண்கள் முதலில் குடும்ப உறவுகளை மேம்படுத்த வே ண்டும். குடும்ப உறவுகள் மேம்பாடு அடையும்போது ஓரளவு மகிழ்ச்சி நிரந்தரமாகும். அதன் பின்பு அவர் கள் சமூக உறவை மேம்படுத்த வே ண்டும்.
சமூக உறவை நீங்கள்தான் வளர்க்க வேண்டும். அதற்கு ஆரோக்கியமா ன சிந்தனையும், மகிழ்ச்சியும், புன் னகையும், தைரியமும் அவசியம். உங்களுடைய பழைய சோக கதைகளை கேட்க யாருமே விரும்ப மாட்டார்கள். உங்களை சுற்றி யிருக்கும் சமூகத்துக்கு உங்களால் முடிந்த நன்மைகளை செய்து
அவர்களை அனுசரித்து நடந் தால் அது ஒரு நல்ல சூழலை உங்களு க்கு ஏற்படுத்தி தரும். அதன் மூலம் உங்கள் மனதில் இருக்கும் வெறுமை அகலும்.