Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நக்கீரன் தாக்கப்பட்டதும் சரிதானா..? எழுதியதும் சரிதானா..?

உண்மைத் தமிழன் என்ற வலைப்பூவில் நேற்று வெளி வந்த கட்டுரை

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பகையாளிகள் எப்போதும் ஒரு வர் மாற்றியொருவர் முறைத்த படியேதான் இருந்து வருகிறார் கள். எந்த நேரத்தில் யார், யா ரைத் தாக் குவார்கள் என்பது தெரியாமலேயே இருவரின் முனைப்புகள் மட்டும் அந்த நோக்கில்தான் இருந்து வருகி ன்றன. நக்கீரன் கோபால் என்றா லே ஆத்தாவுக்கு கசப்பு. ஆத்தா என்றாலே நக்கீர னுக்குக் கசப்பு. இந்தக் கசப்புணர்வை சென்ற 5 ஆண்டு கால ஆட்சி யில் தனது பத்திரிகையில் சகல வழிகளி லும் காட்டியிருந்தது நக்கீரன். ஆட்சி மாற்றத்தை அவர்களே எதிர்பார்த்துதான் உடனடியாக யுத்தம் 2-ம் பாகத்தைத் துவக் கினார்கள்..!

ஆத்தா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, தி.மு.க. கூடாரத்தில் மாறன் களைத் தவிர மற்ற அனைவரையும் இப்போதுவரையிலும் தாங்கிப் பிடித்து வருகிறது நக்கீரன். அவரவர் பட்ட பாடு அப்படியென்று ‘நடு நிலைமை’யோடு சொல்லிவிட்டுப் போகலாம். தனி மனிதர்களெ னில் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால் ‘மூன்றாவது கண்’ என போற்றப்படும் பத்திரிகையை கையில் வைத்திருக்கும்போது தங்களது விருப்பு, வெறுப்புக்கு இடமளிக்காமல் எழுதுவதும், செயல்படுவதும்தான் பத்திரிகைகளுக்கு அழகு..!
இன்று வெளிவந்திருக்கும் நக்கீரனின் போஸ்டரை காலையில் பார்த்தவுடனேயே எனக்குப் பகீரென்றது..! ஆத்தாவைப் பிடிக்காத எனக்கே இப்படியென்றால், ஆத்தாவை, நிஜ ஆத்தாவாக பாவிக்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு எப்படியிருந்திருக்கும்..? ஆள் பலம், படை பலம் மிக்க சக்திகள் என்ன செய்வார்களோ அதைத்தான் இன்று காலையில் செய்திரு க்கிறார்கள் அதிமுகவின ர். ஆத்தாவின் உத்தரவும், ஆசியும் இல்லாமல் இத னை அவர்கள் செய்திருக் கவே மாட் டார்கள் என்று உறுதியுடன் நம்புகி றேன்.

கல்வீச்சுக்களில் நக்கீரன் அலுவலகத்தின் கண் ணாடி ஜன்னல்கள் சேதப் படுத்தப்பட்டுள்ளன. நிறு த்தப்பட்டிருந்த கார்களும் தாக்கப்பட்டுள்ளன. இன் னமும் அலுவலகத்தின் முன்பாக மறியல் தொட ர்ந்து நடந்து வருகிறதாம். தமிழகம் முழுவதுமே இன்றைய நக்கீரன் இத ழை நடுரோட்டில் கொளு த்தும் போராட்டங்கள் நடந்துதான் வருகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு தாக்குதலுக்குத் தகுந்த உத்தரவுகளை பிறப்பித்ததாக ஸ்பாட்டில் இருந்த பத்திரிகை யாளர்கள் சொல்கிறார்கள்.

அப்படியென்னதான் எழுதியிருக்கிறது நக்கீரன்..? ‘மயிலாப்பூர் மாபி யாவா’ என்ற துணைத் தலைப்புடன் எழுதப்பட்டிருப்பதை நீங்களே படியுங்கள்..!
மயிலாப்பூர் மாஃபியாவா?

ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது. அதை விரும்பாத ஜெ., “அதைப் பற்றி பேசாதீங்க. நான் தவறான விதையை விதைச்சிட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்…” என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார். “இவங்க இரண்டு பேரும், என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம்.. என் கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம். இந்த விமர்சனம் எம்.ஜி.ஆர். காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது. அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா..?” என்று தன் முன்னே இருந்தவர்களைக் கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.

“நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்,  ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்குப் போட்டியா ஜானகியை கொண்டு வர முடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே., எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு, “நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது’ன்னு சொன்னார். அப்ப எம்.ஜி.ஆர். “நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு, குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக் கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக் கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க’ன்னு சொன்னார். இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க” என்றபடி சிரித்திருக்கிறார்.
இவ்வளவுதான் தலைப்புப் பற்றிய செய்தி இந்தக் கட்டுரையில் உள்ளது..!

ஜெயலலிதா மாட்டுக் கறி சாப்பிடுவார். சமைக்கவும் தெரியும் என்பதெல்லாம் எந்த அளவுக்கு அவரைப் பாதிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதே சமயம் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்களே..? ஒன்று போலவே எதிர்க்கருத்து க்களை தாங்கிக் கொள்ள மாட்டார்களே..? இப் போது என்னை குடிகாரன் என்று தவறாகச் சொன் னால், “தப்பாச் சொல் றாங்க. சொல்லிட்டுப் போறாங்க..” என்று போ ய்க் கொண்டேயிருப் பேன். இப்போது ஆத்தா வால் இதனைத்தான் தாங்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.

எதிர்க்கருத்தாக பத்திரி கை அலுவலகங்களைத் தாக்குவது என்பது கட்சி களுக்குப் புதிதல்ல. மதுரை தினகரன் அலுவலகத்தைத் தி.மு.க. வினர் தாக்கினார்கள். மக்கள் டிவி அலுவலகத்தை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கினார்கள். பதிலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தை பாட்டாளி மக்கள் கட்சியினர் தாக்கினார்கள். தினமலர் அலுவ லகத்தை பல கட்சியினரும், பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்கி யிருக்கிறார்கள். ஆத்தாவின் முதல் பொற்கால ஆட்சியில் தினம் தோறும் தாக்கு தல்கள் பல்வேறு இடங்களில் நடந்தது..! இதெல் லாம் அரசியல் வியாதிகளின் எதிர்க்கருத்து கலாச்சாரம் என்ற போதிலும், ஆத்தா வின் இன்றைய ஆட்சிக் காலத்தில் இது முதல் சம்பவம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது..!
நக்கீரனின் அலுவலகத் தைத் தாக்கியது சரிதானா என்கிற கேள்வி அனை வருக்குள்ளும் எழும் போது, நக்கீரன் எழுதியது மட்டும் சரிதானா என்ற எதிர்க் கேள்வியும் எழு கிறது. நாளைய ‘நமது எம்.ஜி.ஆரி.’ல் இதற்குப் பதில் சொல்லிவிட்டால் போகிறது.. எதற்கு இந்த ரவுடித்தனம்..? இது போ ன்ற செயல்களே அரசியல் வியாதிகளுக்கு ரவுடித் தனமான தன்னம்பிக் கையை ஊட்டி விடுகிறது.
இன்றைக்கு ஒரு முதல மைச்சரை தாக்கி எழு தியதற்காக.. நாளை ஒரு நகரத்தில் அமைச்சரு க்காக.. சிறிய ஊர்களில் கட்சியின் செயலாளர் களுக்காக.. இப்படி அனைவருமே ரவுண்டு கட்டி தாக்குதல் நடத் தினால் பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என் னாவது..? 

நக்கீரன் எழுதியிருப்பது தவறெனில் ஜெயலலிதா பிரஸ் கவுன் சிலில் புகார் கொடுக்கலாம். நீதிமன்றத்தை நாடலாம். காவல் துறையில் புகார் கொடுக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு வீட்டுக்குள் உட் கார்ந்து கொண்டு அம்பு களை ஏவிவிட்டு அமைதி காப்ப தெல்லாம் அவரு டைய எதிர் காலத்துக் கும்,  தமிழக பத்திரி கை யுலகத்துக்கும் நல்ல தல்ல..!

News:

http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_3286.html

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: