Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா?

தத்தெடுத்தல் என்பது உணர்வு பூர்வமான முடிவு மட்டுமல்ல வாழ்வு முழுமைக்குமான பிணைப்பு… 

நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா?

ஆமாம் எனில்; கீழே வரி சை ப் படுத்தப்பட்டிருக்கு ம் மருத்துவத் தகவல் களை எல்லாம் ஒரு முறை சரிபார்த்துக் கொள் வது உங்களுக்கும் குழந்தைக்கும் நல் லது.

· தத்துக் கொடுக்கும் குடும்பத்தின் ஒட்டு மொத்த மெடிகல் பின்னணி .

· தத்தெடுத்துக் கொள்ளப் போகும் குழந் தையின் உடன்பிறந்த மற்ற குழந்தை களின் உடல் நலம்.

· கர்ப்பிணியாய் இருக்கும் போது குழந்தையின் அம்மாவுக்கு ஏதேனும் நோய்கள் வந்து அதற்கு ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ளப் பட்டதா எனும் தகவல். 

· குழந்தையின் அம்மா  கர்ப்ப காலத்தில் மருத்துவர் அனுமதியின்றி தன்னிச்சை யாக ஏதேனும் மருந்துகள் உட்கொண்டாரா எனும் தகவல். 

· குழந்தையை பாதிக்கும் அளவுக்கு அதன் அம்மாவுக்கு பால்வினை நோய்கள் ஏதா வது இருந்திருந்தால் அதைப் பற்றிய தக வல்கள். 

· கர்ப்ப காலத்தில் தாய்க்குக் கிடைத்த போ ஷாக்கு பற்றிய விவரங்கள். 

· கர்ப்ப காலத்தில் எடுக்கப்பட்ட மருத்துவ  சோதனைகள் பற்றிய தகவல்கள்.

· பிரசவ காலத்திலோ, குழந்தை பிறப்பிலோ ஏதாவது தடங்கல் ஏற்பட்டிருந்தால் அதைப் பற்றிய தகவல்கள்.  

· குழந்தை பிறக்கும்போது இருந்த அதன் சரிவிகித எடை உயரம் பற்றிய தகவல்கள். 

· குழந்தை பிறந்த பின் செய்யப்பட்ட அனைத்து மருத்துவச் சோதனைகளுக்கான சான்றுகள் 

· வளர்ந்த குழந்தையை தத்தெடுப்பது என்றால் அந்தக் குழந்தை முதல் முறையாக தவழ ஆரம்பி த்த நாள், உட்காரப் பழகிய நாள், நடக்க ஆரம்பித்த  நாள் என்பது போன்ற தகவல்கள். 

· குழந்தை பிற குழந்தைகளுடன் பழகும் திறன் மற்றும் அதன் செயல் பாடுகள்.

· பிறந்த நாள் முதல் குழந்தையின் ஹெல்த் தொடர்பான முழுமை யான தகவல்கள். 

· உடல் ரீதியாகவோ, உணர்வு ரீதி யாகவோ குழந்தைக்கு பாலியல் துஷ்பிரயோகங்கள் இருந்திருப்பின் அதைப் பற்றிய தகவல். 

இந்தத் தகவல்களை எல்லாம் அவற் றிற்கு உரிய ஆவணங்களுடன் முழு மையாகத் தெரிந்து வைத்துக் கொள் வது தத்துக்குழந்தைக்கும் தத்துப் பெற்றோருக்கும் எல்லா  வகை யிலும் பயனுள்ளதாக இருக்கக் கூடும். 

சில வருடங்களுக்கு முன்பு இந்தியா டுடே  வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் தாமத மாய் திருமணம் செய்து கொள்ளும்   தம்பதிகளில் சிலர்  40  வயது க்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது சிரமம் என்று கருதி சொந் தமாய் குழந்தை பெற்றுக் கொ ள்ளும் வாய்ப்பைத் தவிர்த்து விட்டு  காப்பகங்களில் அல்ல து ஆதரவற்றோர் இல்லங்க ளில் இருந்து அதிகாரபூர்வமாக தங்களது வாரிசாக ஒரு குழந் தையை தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள் எனும்  செய் தியை கள ஆய்வுச் சான்றுக ளோடு  குறிப்பிட்டிருந்தார்கள்.

இவர்களைப் போல அல்லாது சில தம்பதிகளுக்கு மரபியல் காரண ங்கள், விபத்து, அல்லது நோய் காரணமாக குழந்தைப் பேறற்ற   சூழல் இருக்கக் கூடும். இவர்களுக்கு  ஒரு குழந்தைக்குப் பெற்றோ ராகும் ஆசை இருந்தால் அதற்கான வாய்ப்பு – தத்தெடுத்தல் மூலம் மட்டுமே கிடைக்கக் கூடு ம். 

.ஒரு குழந்தையை நமக்கே நம க்கென்று தத்தெடுத்து வளர்ப் பது என்பது சினிமாக்களிலும், மெகா சீரியல்களிலும் போகிற போக்கில் காண்பிப்பது போல அத்தனை எளிதான  காரியமி ல்லை. அதற்கான சட்டங்கள் முன்னெப்போதையும் விட இப்போது சற்று கடுமையாக்கப் பட்டிருக்கிறது .

சமீபத்திய வருடங்களில் ஆதரவற்ற குழந்தைகள் மட்டுமல்லாது பிறந்த குழந்தை முதல் 15 வயது வரை யிலான குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைக்  கணக்கில் கொண்டு அரசு இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டங்களை 2010-ம்  ஆண் டில் முன்னெப்போதையும் விட மேலும் கடுமையாக்கி இருக்கிறது. இந்த  சட்ட த்திற்கு உட்பட்டு நடைபெறும் தத்தெ டுப்பே முறையான தத்தெடுத்தல் என உயர் நீதிமன்றம் அங்கீக ரிக்கும் என்பதால் இந்த இதழில் ‘குமுதம் ஹெல்த்’ வாசகர்களுக்கு  தத்தெடுத்த லைப் பற்றிய எளிய அறிமுகம் மற்றும் அரசின் அங்கீகாரம் பெற்ற தத்தெடுத்தல் மையங்கள் பற்றிய தகவல்களை அளிக் கிறோம். 

தத்தெடுத்தல் என்றால் என்ன? 

சட்டப்படி குழந்தையை தத்துக் கொடுப்பதன் மூலம் அந்தக் குழந்தை அதன் தத்துப் பெற்றோரு க்கு அதிகார பூர்வ வாரிசா கிறது. தத்துக் கொடுக்கப் பட்ட பிறகு குழந்தை  அதன் ரத்தத் தொடர்புடை ய பெற்றோருக்கு உரிமை யானதல்ல. குழந்தை மீதா ன உரிமை அதன் தத்துப் பெற்றோர்களுக்கே முழுமையாக அளி க்கப் படுகிறது. இதனால் குழந்தை வளர்ந்த பிறகு தனது வளர்ப்புப் பெற்றோர்களின் சொத்துகளோடு சொந்தப் பெற்றோர்களிடம் சென்று விடக்கூடும் எனும் சந்தேகத்திற்கு இடமில்லை. தத்தெடு ப்பது   தத்துக் குழந்தை மற்றும் தத்துப் பெற்றோர் இருவருக்கும் பரஸ்பர நன்மை தரக்கூடிய விஷயமாக இருக்க வேண்டுமென் பதற்கு ஏற்ப சட்ட விதிகள் தற்போது திருத்தப்ப ட்டுள்ளன.

யாரெல்லாம் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறார் கள்? 

· பல வருடங்களாக குழந்தைப் பேறு இல்லாதவர்கள். 

· விபத்தாலோ மருத்துவ காரணங் களாலோ தம்பதிகளில் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை இழந்தவர்கள் .

· திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ  விரும்பும் பெண் களும் ஆண்களும்.

· சொந்தக் குழந்தைகள் இருந்தாலும் கூட தங்களது சுய விருப்ப த்தின் பேரில் அநாதரவாக இருக்கும் குழந்தைகளுக்கு வாழ் வளிக்க விரும்பும் சேவை  மனப்பான்மை கொண்ட நபர்கள். 

· குழந்தை பெற்றுக் கொள்ளும் வயது கடந்த பிறகு தாமதமாக திருமணம் செய்து கொள் வோர்.

· சொந்தக் குழந்தைகள் இருந்தாலும் கூட தங்களது புகழ் மற்றும் பணத்தின் மூலம் தத்துக் குழந்தைகளுக்கும் குடும்ப அமை ப்பை  உருவாக்கித் தர  இயலும் என்ற சமூக ஆர்வம் கொண்ட பிரபல ங்கள்  போன்றோர் தத்தெடுத்தலில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

யாரெல்லாம் தத்துக் கொடுக்கப்படுகிறார்கள்? 

· சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீரழிவுகள் மற்றும் மதக் கலவரங்களால்  அநாதரவாக்கப்பட்ட குழந்தைகள்.  

·முறையற்ற வழியில் பிறந்து அரசின் தொட் டில் குழந்தை காப் பகங்களில் அடைக்கலமான குழந்தைகள்.

· தாய், தந்தையரை இழந்து உறவினர்களாலும் புறக்கணிக்கப் பட்ட குழந்தைகள். 

· வறுமை மற்றும் ஏழ்மையால் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் சொந்தப் பெற்றோர்களால் தத்துக் கொடுக்கப்படும் குழந் தைகள் போன்றோர்  அரசின் பதிவு பெற்ற சேவை மையங்கள் மற்றும் காப்ப கங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின் றனர். 

உதாரணங்கள் … 

தத்தெடுத்தல் அல்லது தத்துக் கொடு த்தல் என்பது தமிழ்க் கலாச்சாரத்தி ற்கு புதிய விஷயம் ஒன்றுமில்லை. நகரத்தார் வழக்கங்களில் தொ ன்று தொட்டு நடந்து வரும் ஒரு  சம்பிரதாய முறைதான். காரை க்குடி நகரத்தார் பாரம்பரியப்படி திருமண வயதில் இருக்கும் பெண்ணையோ ஆணையோ கூட தத்துக் கொடுத்தலும் தத்தெடுத் தலும்  அவர்களது சமுதாய  முறைப்படி  அங்கீகரிக்கப்பட்ட விஷ யமே.

இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கவிஞர் கண்ணதாசனைக் கூறலாம் . 

 நமது இந்தியாவில்  புராண காலம் தொ ட்டே தத்தெடுத்தலும் தத்துக் கொடுத்தலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. 

இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்;

· கிருஷ்ணனும் 

· கர்ணனும் 

கிருஷ்ணனை கம்சன் கொன்று விடுவான் என்று அஞ்சி அவனது அப்பா வசுதேவர் கோகுலத்தின் அரசன் நந்தகோபனுக்கு தத்துக் கொடுக்கிறார். மகாபாரதத்தின் இறுதி  வரை கிருஷ்ணன் நந்த கோபனின் சொத்தான  துவாரகைக்கு மன்னனாக வே அறியப்படுகிறான். தேவகிக்கோ, வசு தேவ னுக்கோ இருக்கும் உரிமையைக் காட்டிலும்  யசோ தைக்கும் நந்தகோபனுக்கும் கிருஷ்ணன் மீதிரு க்கும் உரிமை அதிகாரபூர்வமானது.

இந்துக்களின்  தத்தெடுத்தலை, அதன் விதிகளை, சட்டங்களை மிக எளிதாக உணர்த்திச் சொல்லும் இதிகாசக் கதை இது.

கிருஷ்ணனைப் போலவே கர்ணனையும் சொல்லலாம். கர்ணன் பாண்டவர்களின் அன்னையான குந்தியின் மூத்த மகன். ஆனால் அவன் குந்தியின் மகனாக ஒரு நாளும்  அடையாளம் காணப்படவில் லை. குந்தி அவனை ஆற்றில் விட்டத னால் அவனை கண்டெடுத்து வளர்த்த தேரோட்டியே கர்ணனின் அதிகாரபூர்வ அப்பா வாகிறார். 

ஆக புராண காலத்திலும் கூட இந்து சட்ட ங்களின்படி ஒரு குழந்தை அதிகார பூர்வ மாக தத்துக் கொடுக்கப்பட்டால் அதன் ரத்த உறவு கொண்ட பெற்றோர் அந்தக் குழந்தையின் மீதான உரிமைகளை இழக்கிறார்கள்.தத்துக் கொடு த்த பின் குழந்தையின் மீதான முழு உரிமையும் தத்தெடுத்துக் கொண்ட பெற்றோர்களுக்கு என் றாகிறது .

இந்து – திருமணம் ஆன தம்பதிகள் அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழும் ஆணோ, பெண்ணோ  ஒரு குழந்தை யை தத்தெடுத்து வளர்க்க விரும்பினால் அதற்கான  சட்ட விதிமுறைகள் என்ன என்று சென்னை உயர்நீதி மன்ற வழக் கறிஞர்  அஜிதாவிடம் கேட் டோம். அவர் கூறிய சட்ட விதி முறைகள் கீழே;

ஆண்களுக்கென்று மேலே சொ ன்ன விதிமுறைகள் அனைத்து ம் இப்போது பெண்களுக்கும் பொருந்துமாறு 2010ஆம் ஆண்டில் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதே விதிமுறைகள் இப்போது தத்தெடுக்க விரும்பும் பெண்ணுக்கும் பொருந்தும்.

இன்று தத்தெடுக்க விரும்புபவர்கள்  எவராயினும் இந்து தத்தெ டுப்பு மற்றும் பராமரிப்புச் சட்ட விதியின்படி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க தங்களு க்கு சட்ட  விதிகளுக்குட்பட்டு தகுதி உள்ளதா எனத் தெரிந்து கொண்டு  அவர்கள் அரசின் பதி வு பெற்ற  காப்பகங்கள் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவன ங்களில் குழந்தைக்காகப் பதிவு செய்து வைத்துக் கொள்ள வே ண்டும். இங்கே பதிவு செய்து வைத்தாலும் அரசின் சமூக நலத்துறையின்கீழ் இயங்கும் பெண் கள் மற்றும் குழந்தைகள்  நல காப்பகத் துறையின் ஒப்புதல் பெற்ற பிறகே, தமிழகத்தின் எந்தக் காப்பகங்களில் இருந்தும் இனி குழந்தைகளை தத்தெடுக்க முடியு ம் எனும் வகையில் தத் தெடுத் தல் சட்டம் இப்போது சற்றே இறுக்கப் பட்டிருக்கிறது. தேவையற்ற முறைகேடுகளை தவிர்க்கவே  இந்த திருத்தம் கொண்டு வரப் பட்டிருக்கிறதாம்.

தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் களுக்கு அவர்களது  விருப்பத்திற் கேற்ற வயதில் குழந்தை கிடை க்கும் பட்சத்தில் அந்த நிறுவன ங்களில் இருந்து அழைப்பு வரும். அதன்  பின் அவர்கள் கேட்கும் தகவல்களை எல்லாம் அளித்து ஊர்ஜிதம் செய்து சட்டப்படி குழந் தையை தத்தெடுத்துக் கொள்ளும் ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும்.  இதன் பிறகு உயர் நீதி மன்ற ஆணையின்பின் தத் தெடுத்தல் செல்லுபடியாகும்.

தத்தெடுப்பதன் மூலம் அந்தக் குழந் தைக்கு ஒரு அன்பான  குடு ம்பம் அமை யும் என்பதோடு தத்துப் பெற்றோர்களு க்கும் ஒரு குழந்தைக்கு அதிகாரபூர்வ பெற்றோராகும்  ஆசை நிறைவேறும். ஆக தத்தெடுத்தல் என்பது  தத்துக் குழந் தை மற்றும் தத்துப் பெற்றோர் என இருபுறமும் பரஸ்பர நலம் நாடும் செயல் என்பதால், தயக்கமின்றி   நண்பர்கள் மற்றும் உறவி னர் வட்டத்தில் குழந்தைகளற்றோர் இருப்பின் தத்தெடுத் தலை ஊக்குவிப்போம்.

தத்துக் குழந்தைகளோடு வாழும் வி.ஐ.பி.கள்

கடந்த மாதம் யாகூ இணைய தளம் தத்துக் குழந்தைகளோ டு வாழும்  பிரபலங்களின் புகைப்படங்களையும் தகவல் களையும் வெளியிட்டிருந் தது . இதோ உங்களுக்காக  அந்தத் தகவல் இங்கே … 

மிஸ் யூனிவர்ஸ் சுஷ்மிதா சென்

1994  ஆம் வருடம் மிஸ் யூனிவர்ஸ் ஆக தேர்ந் தெடுக்கப்பட்ட சுஷ்மிதா சென் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வதோடு இரண்டு பெண் குழந்தைகளைத்  தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

பாப் ஸ்டார் மடோனா 

பாப் இசை உலகின் கனவுக்கன்னி மடோனா, ஏற்கெனவே சொந்தக் குழந் தைகள்  2 இருந்தபோதும் மே லும் இர ண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர் க்கிறார் .

நிகோல் கிட்மேன் & டாம் குரூயிஸ் ஜோடி 

ஆங்கிலப் படம் பார்ப்பவர்கள் எனில் இவர்களைத் தெரியாமலிரு க்க முடியாது. பிரபல  ஹாலிவுட் தம்பதிகளான இவர்களுக்கு இர ண்டு தத்துக் குழந்தைகள் உண்டு.  இவர்களின் விவாகர த்துக்குப் பின்பு குழந்தைகள் இருவரும் டாம் குரூயிஸுடன் வாழ்கிறார்கள் .

நடிகை ஷோபனா 

தேசிய விருது பெற்ற நடிகை ஷோபனா திருமணம் செய்து கொள்ளாமலே வாழ் ந்து வரும் சூழலில் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து அனந்த நாரா யணி  என்று பெயர் சூட்டி வளர்த்து வரு கிறார். 

நடிகை லக்ஷ்மி 

 ஏற்கெனவே மகள் ஐஸ்வர்யா இருந்த போதும் இரண்டாவதாக ஒரு குழந்தை யை தத்தெடுத்து வளர்க்கிறார்.

நடிகை சீதா 

இயக்குநர் & நடிகர் பார்த்திபனுக்கும் சீதாவுக்குமான விவாகரத்தின் முன்  இரண்டு பெண் குழந்தைகள் இருந்த போதும் இவர்கள் இருவரால் தத்தெ டுக்கப்பட்ட ஆண்  குழந்தை ராக்கி என்ற ராதாகிருஷ்ணன். இவர் இப் போது வசிப்பது அவரது அம்மா சீதா வுடன் என்பதாக செய்தி.

இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின்படி;

ஒரு ஆண் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினால்

 அந்த ஆண் மனநிலை சரியான வராக இருக்க வேண்டும். 

தத்தெடுப்பவருக்கும் தத்தெடு க்கப்படுபவருக்கும் இடையே 15  ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்க வேண்டும். 

கணவனும் மனைவியும் இணைந்து மனமொத்து தத்தெ டுக்க முன் வர வேண்டும். இரு வரில் ஒருவருக்கு சம்மதம் இல்லை யென் றாலும் தத்தெடுக்க  இயலாது.

தத்தெடுக்க விரும்பும் ஆணி ன் மனைவி, மனநிலை சரி யில்லா தவராக இருந்தா லோ, துறவறம் மேற்கொண் டு கணவரை விட்டுப் பிரி ந்திருந்தாலோ கூட  முறை யாக அரசுப் பதிவு பெற்ற சமூக நல வாரியங்களின்  உரிய விசாரணைகளின் பின் இந்த ஆணுக்கு தத்தெடுக்கும் உரிமை வழங்கப்படுகிறது.

· முன்பு, திருமணமாகாத ஆண் பெண் குழந்தையை தத்தெடுக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால் 2010ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சில சட் டத்  திருத்தங்களின் பின் இந்து தத்தெடுத் தல் மற்றும் பராமரிப்புச் சட்ட விதிக ளின்படி திருமணம் ஆகாத பிரம்மச்சாரி ஆண் தனக்கென வாரிசை தத்தெடுத்துக் கொள் ள  முடியும். தத்தெடுத்த பின் அவர் திருமணம் செய்து கொள்ளும் சூழல் வந்தால் அவர் மண ந்து கொள்ளும் பெண் வளர்ப்புக் குழந்தைக்கு அம்மாவாக சட் டத்தில் இடமில்லை. அவர் மாற்றாந்தாய் என்றே அடையாளப்படுத்தப் படுவார். 

· தத்தெடுக்க விரும்பும் பெற் றோருக்கு முதல் குழந்தை ஆணாக இருக்கும்பட்சத்தில் அடுத்த குழந்தையை தத்தெடுக்க விரும் பினால், ஆண் குழந்தையை  தத்தெடு க்க சட்டத்தில் இடமில்லை. அவர்கள் ஒரு பெண் குழந் தையையே தத்தெடுக்கலாம் . இதே விதமாக முதல் குழந்தை பெண் குழந்தை எனில் அடுத்த குழந்தையை  தத்தெடுக்க விரும்பினால் அது ஆண் குழந் தையாக இருக்க வேண்டும். பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

  • S Vasu Iyer

    Very nice article…I wish adopt a child. Please help me in this by giving the contact details. I am in Tirupur.. – Vasu

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: