இன்றைய இளைய தலைமுறையினர் எப்பொழுதும் ஹெட் போன் களுடன் தான் வலம் வருகின்றனர். இதனால் என்ன பாதிப்பு என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. சாதாரணமாக ஹெட் போன்களில் இருந்து வரும் சத்தமானது, நேரடியாக செவிப் பறையை அடைகிறது. அத னால் தான் நமக்கு ஸ்டீரியோ, நுட்பமான இசை என்று துல்லி யமாக கேட்க முடிகிறது. இதனால் நேரடியாக காதின் உட்புறமானது பாதிக்கப்படுகி றது என்பதை நாம் உணர்வதே யில்லை. நாளடைவில் இதனால் பாதிப்பு ஏற்படலாம்.
இதைத் தவிர்க்கும் வகையில் தற்போது புதிய ரக ஹெட் போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காது நேரடியாக பாதிக்கப்படு வதில்லை. இதில் இருந்து வரும் சத்தமானது நேரடியாக செவிப் பறை எலும்புகளை அடைந்து, அதில் இருந்து உட்புறமான காதிற்கு கடத்தப்படுகிறது. இந்த வகையில் தயாரிக்கப்பட்ட ஹெட்போன்க ளை அணி வதும் சுலபம் தான். இதை அணிந்து கொண்டு ஆடலாம், ஒடலாம், நடக்கலாம்.