முதலீடு என்றால் உங்களுக்கு தெரியும் .இடம், பொருள், நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்துவிட்டு அது முதல் பெருக்கியதும் நாம் திரும்ப பெறுவோம்.
இடம் என்றால் காலி மனை யோ,கட்டிடம் நிறைந்த இட மோ விவசாய நிலமோ ஏதே னும் ஒன்றில் முதலீடு செய் வோம்.
பொருள் என்றால் தங்கம் ,வெள்ளி,மற்ற தானியங்கள் போன்ற வை. நிறுவனம் என்றால் போஸ்ட் ஆஃபிஸ், பேங்க், மியூச்சுவல் ஃபண்ட், பாண்ட் முதலீடு போன்றவை.
முதலீடாக இருந்தாலும் சரி ,வியாபாரமாக இருந்தாலும் சரி நாம் கவனிக்க போவது மூன்று விஷ யங்கள் தான்
1.முதலுக்கு பாதுகாப்பு (SAFETY)
2.முதலுக்கான வருமானம் (RETURNS)
3.அவசர தேவைக்கு முத்தலீட்டை திரும்ப பெறுதல் (LIQUDITY)
இந்த மூன்றையும் நாம் பார்க்க வேண் டும்
முதல் பாயின்டான பாதுகாப்பு என்பது நாம் செய்யும்
முதலீடானது குறையாமல் இருக்க வேண்டும் .குறிப்பாக
சொல்ல வேண்டும் என்றால் முதலுக்கே மோசமாகிவிடக் கூடாது.
இரண்டாவது பாயிண்ட் வருமானம் ,நாம் செய்யும் முதலீட்டால் நமக்கு கிடைக்கும் வருமானம். அதாவது நாம் முதலீடு செய்து திரும்ப பணம் எடுக்கும்பொழுது அது எவ்வளவு வருமானத்தை நம க்கு ஈட்டு தருகிறது என்றும் பார்க்க வேண்டும்.
மூன்றாவதாக நமக்கு பணம் தேவைப்படும்பொழுது உடனே திரும்ப பெற வழிவகைகள் இருக்க வேண்டும்.
நாம் எதில் எதில் முதலீடு செய்கி றோம் என்று மேலே பார்த்தோம். அசையும் சொத்து ,அசையா சொத்து .இவைகளில் .
நாம் முதலீடு செய்வது அசையா சொத்து என்றால் மேலே சொன்ன மூன்று பாயிண்ட்களை பார்ப்போம்
முதல் பாயிண்ட்டான பாதுகாப்பு இதில் உள்ளது .கட்டிடங்களோ காலி மனையோ எதாக இருந்தாலும் முதலீடு பாதுகாப்பு .
இரண்டாவது பாயிண்ட்டான வருமானம் கட்டிடங்களை வாடகைக்கு விட்டாலோ நிலங்களில் விவசாயம் செய்தோ நமக்கு வருமானம் கிடைக் கிறது என்று வைத்து கொள்வோம்
.
மூன்றாவது பாயிண்ட்டான நினைத்த நேரத்தில் முதலீட்டை திரும்ப பெறுதல். அது சற்று சிரமம் தான் .நினைத்த நேரத்தில் இதனை விற்க முடியாது . நாட்களாகும் .அது நமக்கே தெரியும் .
சரி இரண்டாவதாக தங்கம், வெள்ளி இவைகளை பார்த்தோம் இதில் முதல் குறையாது. நினைத்த நேரத்தில் விற்றும் எடுக்கலாம் . ஆனால் போதி ய வருமானம் குறைவுதான். மேலும் தங்கமோ வெள்ளியோ வீட்டில் வாங்கி வைக்க முடியாது .
மூன்றாவதாக நிறுவனங்கள் முத லீடு,இதில் நிறுவனங்கள் என்றால் தொழில் நிறுவனம் சொல்ல வில்லை .அசையும் அசையா இவை இரண்டும் போக பாண்ட் முதலீட்டை பற்றி சொல்கிறேன். அதாவது இதன் வகை களை வகைபடுத்துகிறேன் பாருங்கள்.
வைப்புகள் (DEPOSITS)
போஸ்ட் ஆஃபிஸ் ரெக்கொயரிங் டெபோசிட்
வங்கிகளில் ஃபிக்சட் டெபோசிட்
நிறுவனங்களில் ஃபிக்சட் டெபோசிட்
அரசு திட்டங்கள்
தேசிய சிறுசேமிப்பு திட்டம் (NSC)
பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (PPF)
கிசான் விகாஸ் பத்திரம் (KVP)
கடன் பத்திரங்கள் (DEBT INSTRUMENTS)
பப்ளிக் செக்டார் பாண்டுகள்
கவர்ன்மென்ட் செக்க்யுரிடிகள்
டிரஷரி பில்ஸ்
மாநில அரசின் பாண்ட்டுகள்
நிறுவங்கள் வழங்கும் டிபின்ச்சர்கள்
நிதி நிறுவனங்களின் பாண்டுகள்
கமர்சியல் பேப்பர்கள்
பரஸ்பர நிதிகள் (MUTUAL FUNDS )
பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவை
வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவை
இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவை
DERIVATIVE PRODUCTS
ஃ பியுச்சர்ஸ் (FUTURES )
ஆப்ஷன்ஸ் (OPTIONS )
பார்வார்ட்ஸ் (FORWARDS )
வாரன்ட்ஸ்(WARRANTS )
ஸ்வாப்ஸ் (SWAPS)
பங்குகள் (SHARES)
ஈக்வட்டி ஷேர்ஸ் (EQUITY SHARES)
பிரிஃபரன்ஸ் ஷேர்ஸ் (PREFERENCE SHARES )
இத்தனை வகைகள் உண்டு .இதைப் பற்றி நமக்கு முன்பே தெரிந் திருக்கும் இவற்றில் எதில் வேண்டும் என்றாலும் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம்.
நாம் பார்க்க போகும் பங்கு மார்கெட்டுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று பார் த்தால் அசையும் ,அசையா சொத்துகளில் முதலீடு செய் வது போகமீதம் உள்ளது மே லே குறிப்பிட்டவை.
இதில் பணம் போட்டு பணம் எடுக்கிறோம் .இதற்கு மற்ற இரண்டை
போல (இடம் ,பொருள்) நாம் செய்யும் முதலீட்டிற்கு நம் கையில் பொருளாகவோ ,இடமாகவோ இருக்கும் .
ஆனால் மேலே குறிப்பிட்ட வகைகள் பணம் போட்டு பணம் எடுக்கும் பொழுது நமக்கு அதன் அத்தாட்சிகள் பேப்பர் ஸ் . இது போலத்தான் ஷேர் மார்கெட் .
சரி இவை இரண்டுக்கும் உள் ள வித்தியாசம் என்ன ?
நன்றி– எம் .ஆர்