Thursday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முட்டைகளில் அடங்கிய அரியத் தகவல்கள்

கோழி முட்டை

தன்மை: சூடும் , கொழுமை யும் ஆகும்

நன்மை : விந்து விளையும் , தாது விருத்தி அதிகரிக்கும்.
உடல் தழைக்கும் , இரத்தம் அதிகரிக்கும், சூட்டைப்பற்றி ய பீனிசத்தை மாற்றும், கோழி முட்டையை அரை வரிசை வேகவைக்கும் பொழுது இந்த குணங்களை காட்டும்.

நோய் : அதிகமாக வெந்தால் காற்று அதிகரிக்கும் ,மந்தப்படும்

மாற்று : சூட்டு உடலுக்கு நாட்டுக்காடி, குளிர்ச்சி உடலுக்கு குல்கந்து

வாத்து முட்டை

தன்மை : குளிர்ச்சியும் ,சிலிர்ப்புமாகும்

நன்மை : உடல் வலிமை ஏற்படும் , உடல் பருக்கும்

நோய் : மந்திக்கும் , வயிறு வலிக்கும் , காற்று அதிகரிக்கும்

மாற்று : இஞ்சி , சீரகம் , கொத்தமல்லி

புறா முட்டை

தன்மை : சூடும் ,கொழுமையும் ஆகும்

ன்மை : ஜீரணப்படும், நீர் சம்பந்தமாக நோய்களைக் கண்டிக்கும், உடல் தழைக்கும் , தாது அதிகரிக்கும், விந்து விளையும்

நோய் : சூடு , உண்டாகும்

மாற்று : பசுவின் நெய்யில் பொரித்துக் கொள்ளவும்

மயில் முட்டை

தன்மை : சூடும் , வறட்சியும் ஆகும்

நன்மை: பிடிப்புகளை மாற்றும் ,  கடிகளை நீக்கும் , வலிமை உண்டாக்கும் , ஜீரணப்படும்

நோய் : சூடு , உண்டாக்கும்

மாற்று : கொத்தமல்லிக் கீரை ,வெங்காயச் சாறு

காக்கா முட்டை

தன்மை: சூடும், வறட்சியும் ஆகும்

நன்மை : மண்ணீரலுக்கு வலிமை தரும் , காமாலை , பித்தம்
பாண்டு , சோகை , இவைகளை நீக்கும் , ஜீரணமாகும் ,
கண்ணொளி அதிகப்படும்

நோய்: சூட்டு உடம்புக்கு பயன் படாது

மாற்று : வெங்காயச்சாறு , கொத்தமல்லி கீரை

ஆமை முட்டை

தன்மை: குளிர்ச்சியும், வறட்சியுமாகும்

நன்மை : வலிமை தரும் , உடல் தணியும்,அதிசார பேதிகளை கட்டி விடும், குடலுக்கு வலிமை உண்டா கும்

நோய் : நெஞ்சு கரிக்கும

மாற்று : ஏலம் , சீரகம்

மீன் முட்டை

தன்மை : சூடும் , குளிர்ச்சியும் ஆகும்

நன்மை: உடல் தழைக்கும், பலம் ஏற்படும்,அதிசார பேதி களை நிறுத்தும் .

நோய் : வயிற்றில் களிம்பு கட்டும்

மாற்று : மிளகு , கடுகு , சீரகம்

thanks to thulithuliyai

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply