Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறிவுரைகளை சொல்வதை விட யோசனைகளை சொல்வது புதிய ஊக்க‍த்தை கொடுக்கும்

குழந்தைகளுக்கு நாம் அதிகம் தரு வது அட்வைஸ். அது எளிமையான து.யார் வேண்டுமானாலும் கொடு க்கலாம். வாழ்க்கையில் முன்னேற ஐடியா கொடுக்கத்தான் ஆளில்லை. குழந்தைகளை வாழ்ககையில் வெற்றிபெறச் செய்ய பெற்றோர் கள் முக்கிய மாகத் தர வேண்டியது ஐடியா… ஐடியா… ஐடியா மட்டுமே.
ஒரு குழந்தை தனது ரிப்போர்ட்டில் 4 நூறுகளுடனும்,ஒரு 50 மதிப் பெண்களுடனும் வீட்டிற்கு வந்தால்,பெற்றோர் கேட்கும் முதல் கேள்வியே ஏன்? இந்த பாடத் தில் மட்டும் 50 மதிப்பெண் என்பதாக த்தான் இருக்கும். ஆனால் குழந்தையின் எதிர்பார்ப்பு என்ன? மற்ற பாடங்களில் தான் பெற்ற 100 மதிப்பெண்களுக்கான பாராட்டாகத் தான் இருக்கும். அந்த பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற என்ன காரணம்? அதை எவ்வாறு களைவது? இந்த ஐடியாவை பெற்றோர்கள்தான் தரவேண்டும். நாம் வெறு மனே குழந்தைகளை அதைச் செய், இதைச்செய் என்றுதான் சொல்கிறோமே தவிர அதற்கான வாய்ப்பு களை ஏற்படுத்தி தருவதில்லை.
குழந்தைகளைப் பாரட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். பாராட்டுக்கு மயங்காதவர்கள் யார்தான் இருக்கி றார்கள். சின்னச் சின்ன செயல் களைக்கூட பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். இது அனைவ ருக்கும் பொருந்தும். மனைவிகூட பாராட்டைத்தான் எதிபார்க்கிறாள். நாம்தான் அதைச் செய்வதில்லை.
சில குழந்தைகள் சுமாராகத்தான் படிக்கும். ஆனால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியடையும். கீழே யுள்ள மதிப்பெண்களைப் பாருங்க ள்.
ஆங்கிலம் – 200க்கு 39, கணக்கு – 175 க்கு 59, அறிவியல் 100 க்கு 45, புவியியல் – 75 க்கு 34, வரலாறு – 75 க்கு 20.
இவ்வளவு சுமாரான மதிப்பெண் வாங்கிய அந்த மாணவன் யார்? இந்திய விடுதலைக்காக இறுதி வரை போராடிய மகாத்மா காந்தி தான் அவர். (நன்றி : சிபி.கே. சாலமன்)
ஷிவ்கெரோ சொன்னது: வெற்றி யாளர்கள் வித்தியாசமான செயல் களைச் செய்வதில்லை.அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தி யாசமாகச் செய்கிறார்கள்.
அனுபவத்தின் மூலம் சிலர் முன்னேறியுள்ளனர். நிறைய அறிவியல் அறிஞர்கள் பள்ளிப் படிப்பைக்கூட முடித்திருக்கவில் லை. அதேபோல் அக்பருக்கு எழுதப் படிக்க தெரியாது. ஆனால் சிறந்த நிர்வாகத்திறன் உடையவர். காமராசர் தொடக்கக் கல்வி யே முடிக்கவில்லை. ஆனால் தொலை நோக்குப்பார்வையுடன் தமிழகத்தை முன்னேற்றியவர். பள்ளிக் கூடத்தில் வெறும் ஐந்தா ண்டுகள் மட்டுமே படித்த பெர் னாட்ஷா உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். ஆனால் இவர்களெல் லாம் வாழ்க்கையில் முன்னேறு வதற்கான ஐடியாவைக் கற்றிருந் தார்கள்.
குழந்தைகளுக்கு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், இணைந்து கொள்ளுதல், பாராட்டும் எண்ணம் போன்ற பண்புகளை வளர்க்க வேண்டும்.
வெற்றி பெறும் மனநிலையைப் பெற முயற்சி செய்ய வேண்டும். அதற்கு வளர்ப்பு முறை மிக முக்கியம். இதற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்கள் உதவி செய்ய வேண்டும். எதிர்காலக் கனவுகளை வெல் லக் கற்றுக்கொடுக்க வேண் டும்.
இவையாவுமே அட்வைஸ் மூலம் வருவதில்லை. குழந் தைகளை வளர்க்கும் விதம், அவர்கள் முன்னே நாம் நடந்து கொள்ளும் விதத்தின் மூலம் வருவது. 
ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும்,பாடிக் கறக்கிற மாடை பாடித்தான் கறக்கணும்.
ஒரு மனிதனுக்கு எது ஒன்று உணவாக இருக்கிறதோ இன்னொரு வனுக்கு அது விஷமாக இருக்கலாம். என்றுமே அட்வைஷ் விஷம் தான்.
அதுவும் இன்றைய தலை முறை யினர் கேட்கும் மனநிலையிலும் இல்லை. அவர்களுக்கு என்ன தேவை என்பதை நாம்தான் உணரச் செய்ய வேண்டும். சிறு வயதிலே யே கஷ்டத்தை உணர வைத்தால் தான் அவர்களுக்கு பணத்தின் அரு மை புரியும்.சிறு வயதிலேயே பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு முன்பாகவே நாம் பெரியவர்களை அவமதித்தால் அது அவர்களின் மனதில் பதிந்துவிடும். இது நாளை நமக்கு எதிராக திரும்பவும் செய்யும் என்பதை மறக்காதீர்கள். அறிவியல் சிந்தனைகளை வளர்க்க கற்றுக்கொடுங்கள். தொலைக்காட்சிகளில் தொலைந்து விடாமல் காப்பது நம் கடமை. நாம்தான் தொலைந்து கிடக்கி றோம்.  குழந்தைகள் மீது பழி போடுகிறோம்.
பல சமயங்களில் நம்முடைய விருப்பத்தைதான் குழந்தைகள் மீது திணிக்கிறோம். அவர்களின் விருப்பங்கள், தேடல்களுக்கு முக் கிய த்துவம் தருவதேயில்லை.
துரியோதனன், தர்மர் இரண்டுபே ரும் பார்த்தவற்றை கர்ணன் கேட்கும்பொழுது துரியோதனன் தீய செயல்களையும் ,தர்மர் தான் பார்த்த நல்ல செயல்களையும் சொல்லுவார்கள். நாம் எப்படியோ அப்படித்தான் நம்மைச் சுற்றி யுள்ளவையும் இருக்கும்.
குழந்தைகள் செய்யும் சிறு தவறுகளை பொருட்படுத் தாமல் விட்டு விடலாம் அல்லது அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளச் செய்ய லாம்.
குழந்தைகளுடன் கலந்து பேச நாம்தான் கற்றுக்கொள்ள வேண் டும். ஆனால் அதைவிடுத்து விவாதம் செய்துகொண்டு இருக்கி றோம். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளைப் பொறுமையாகக் கேளுங்கள், அவர்களுடன் சண்டை புரியாதீர்கள், அல்பமான விசயங்களைப் பெரிதுபடுத்தாதீர் கள்.குழந்தைகளைத் தூண்டுவதன் மூலம் வெற்றியாளர் களாக மாற்ற முடியும்.அது செயல்பாடு களைச்செய்வதற்கான தூண்டு தலாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஏர்ல் நைடிங்கேல் சொல்வது போல் ஒரு மதிப்புமிக்க இலக்கை படிப்படியாக அடைதலே வெற்றி என்பதாகும். அதை நாம் குழந்தைகளை அடையச்செய்வது நம் கடமையாகும்.
இணையத்தில் இருந்ததை இதமுடனே இணைத்திட்டோம்.
தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க‍ வேண்டுகிறோம். 
நீங்கள் படித்த‍து, பார்த்த‍து, பிடித்திருந்தால், உங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

One Comment

Leave a Reply