Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களின் பருவ உடல் மாற்றம் (விரிவான மருத்துவ அலசல்…!!)

வ‌ளர் இளம் பருவ ஆண்கள் தங்களது உடலில் ஏற்படும் சாதாரண பாலியல் மாற்ற‍ங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், போலி மருத்துவர்க‌ளின் தவறான வழிகாட்டுதலாலும், நண்பர்களின் தவறான ஆலோசனைகளாலும் தனக்கு ஏதோ ஒரு பெரிய குறை (அ) வியாதி என்று நினைத்துக்கொண்டு பாதை மாறி செல்பவர்களுக்கான மருத்துவக் கட்டுரையே! இதில் வேறு எந்தவித உள்நோக்கும் இல்லை.

எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது?

உடலில் ஏற்படும் மாற்றங்களை பத்து வயது முதல் பதின்னான்கு வயது வரை அவதானிப்பீர்கள். சராசரியாக பன்னிரண்டு வயதில் சிலவேளைகளில் பத்து வயதிற்கு முன்பும் பதின்னான்கு வயதிற்குப் பின்பும் எனவும் கூறலாம்.

ஆனால், உடலுக்கு உள்ளே ஏற்படும் மாற்ற ங்கள் ஏழு வயதிலேயே ஆரம்பமாகிறது. மூளையின் ஒரு பகுதியான உபதலமஸ் ஹார்மோன்களைத் தயாரிக்க ஆரம்பிக்கு ம்போது பருவம் ஆகும்நிலை ஏற்படுகிறது.

ஹார்மோன்கள் என்றால் என்ன?

ஹார்மோன்கள் உடலிலிருந்து சுரந்து பருவம் ஆகி வளர்ச்சியுற்று சிறுபிள்ளை நிலையிலிருந்து மனிதனா கச் செய்கின்றன. ஹார் மோன்கள் உங்கள் இன விருத்திக்கான அமைப்பை உருவாக்கி பிள்ளைகளைத் தோற்றுவிக்க உதவு கின்றன. அதாவது பருவமாகி தந்தை நிலை அடையச் செய்கிறது.

ஹார்மோன்கள் எப்படிச் செயல் படுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமாயின் ஒரு பையனுக்குக் கூடுதலான பெண்ணுக்குரிய ஹார்மோ னான எஸ்ரஜினைச் செலுத்தி னோமாயின் அவனுக்கு மார்பக ங்கள் ஏற்பட்டு வளர்ச்சியுற்று தாடி உரோமங்கள் அகல ஆர ம்பிக்கும். அதேபோல பெண் ணொருத்திக்கு ஆண்களுக் குரிய ஹார்மோனான அன்ட்றொஜன் கூடுதலாகச் செலுத்துவோ மாயின் அவள் மார்பகங்களை இழந்து முகத்தில் உரோமங்கள் தோன்றி குரலும் கறகறப்பாகிவிடும்.

காணப்படும் முதல் மாற்றம் என்ன?

பருவமானவர் என்பதைக் காட்ட விதைகள் வளர்ச்சியுற்று, பெருத்து சற்று கீழ் இறங்கும். இரண்டில் ஒன்று சிறிது கீழ்முகமாக இறங்கித் தொங்கத் தொடங்கு ம். இது சராசரி வயது பன்னிர ண்டாக இருக்கும் போது ஏற்படு கிறது. விதைகளைத் தாங்கும் விதைப்பை சற்று கருமை நிற மடைகிறது. அதேநேரம் முரட்டு த் தன்மையைப் பெறுகிறது. ஆண்குறியும் பெருத்து விடுகிறது.

விதைகள் பெருப்பதேன்?

விதை ஒவ்வொன்றிலும் இருநூற்று ஐம்பது சிற்றறைகளுண்டு. இவ ற்றில் இறுக்கமாய்;ச் சுருண்ட குழாய்களுண்டு. இவை விந்து களைத் தயாரிக்கின்றன. இவை பருவமாகின்ற போது வளர்ச்சியு றுவதனால் விதைகள் பெருக்கி ன்றன. இந்தச் சிறு குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக நீட்டிப் பிடித்தோமாயின் கிட்டத்தட்ட அரை கிலோ மீற்றர் நீளம் இரு க்கும். இந்தக் குழாய்களை வெளியே எடுத்து நீட்ட முடியாது. அப்படிச் செய்ய இயலுமாயின் பருவமான ஆண்கள் தம்முடை யவை மற்றவரைக் காட்டிலும் ஏன் நீண்டுள்ளது என்று போட்டி போடத் தொடங்கிவிடுவார்கள். உங்கள் விதைகள் பருவம் ஆனபின் அநேக காரியங்களைச் செய்ய வேண்டி உள்ளன. அவை ஹார் மோன்களைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்து கொண்டு ஆண்களாக த் தொடர்ந்து இருக்க செயல்பட வேண்டும். அதோடு உங்களுக்குத் தேவையான விந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

விந்துகள் என்றால் என்ன?

விந்து என்பது மிக நுண்ணிய கலங்களை உரியன. சகல உயிரியல் தகவல்களையும் தம க்குள் அடக்கி உள்ளன. இதன் காரணமாகத்தான் உரியவனின் பிரதியைப் பெற முடிகிறது. விந்து பெண்ணின் கருமுட் டையோடு கருக்கட்டும் போது குழந்தை உருவாகிறது. பெண் கர்ப்பிணியாகிறாள்.

விதைகள் கீழ்முகமாக இறங்குவதேன்?

உடல் வெப்பநிலை கூடுதலாக இருப்பதனால் அந்த வெப்ப நிலை யில் விந்துகள் தயாரிக்க இயலாது. அதன் காரணம் அவை சற்று இறங்கித் தொங்க வேண்டியுள்ளன. அப்பொழுது ஓரளவு குளிர்ச்சி யாக இருக்கின்றன. விந்து உருவாகின்றன. குளிர்காலங்களிலும் பயந்து நடுங்கும் போதும் விதைகள் உடலை நோக்கிச் சரிகின்றன. சூழல் வெப்பநிலை அதிகரிக்கும்போது ம் உடல் வெப்பநிலை அதிகரித்து சுக வீனம் உற்று இருக்கும் போதும் வெந் நீரில் குளித்து இருக்கும் போதும் விதை கள் உடலிலிருந்து விலகித் தொங்கும். அவற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக் கவே இவ்வாறு ஏற்படுகிறது.

ஒருவன் காய்ச்சலாய் இருக்கும்போது தற்காலிகமாக விந்தற்றவர்கள் ஆகி விடுவர். அந்நேரங்களில் பெண்களைக் கர்ப்பிணிகளாக்க முடியாதிருப்பர். இதனை நன்கு அறிந்த பழங்குடியினர் பாலுறவு வைத்துக் கொள்ளுமுன் விதைகளை சுடுநீரில் நீண்ட நேரம் ஊறவிடுவர். இதனால் கர்ப்பம் தரிப்பது தடைப்படும்.

ஏன் ஒரு விதை மற்றதைக் காட்டிலும் கீழ்முகமாகத் தொங்கு கிறது?

இதற்குக் காரணம் இடப் பிரச்சினையே. இரண்டும் இரண்டு கால் களுக்கு இடைப்பட்ட இடத்தைப் பங்கு போடும்போது பாது காப்புக்கருதி ஒரே வரிசையில் இராது சற்று மேலும் கீழுமாக அமை ந்து உள்ளன. இதனால் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.

ஆண்குறி பலமுறை புடைத்து எழ ஆரம்பிப்பது எப்போது?

புடைத்து எழுவது முள்ளந் தண்டின் கீழ்ப்பகுதியிலுள்ள நரம்புத் தொகுதி செய்திகளை அனுப்ப ஆண் குறியிலுள்ள இரத்தக் கொள் கலன்களில் இரத்தம் வேகமாக உந்த ப்படுகிறது. இரத்தம் நிரம்பி யதும் ஆண்குறிக்கு கீழே உள்ள தசைகள் இறுக்கம் அடைகின்றன. இதனால் மேலதிக இரத்தம் திரும்பிப் போகின்றது. இரத்தம் நிரம்பி விடுவதால் ஆண்குறி பெரிதாகி புடைத்து எழுகின்றது. உடலுக்கு வெளிப்புறமாக புடைத்து எழுந்து நிற்கின்றது. செங்குத்திற்கு மேலாக நிற்கும். அதே சமயம் சற்று கருமை நிறத்தையும் அடைகின்றது.

பலவிதமான தூண்டுதல்களும் கூட புடைத்தெழச் செய்கின்றன. கால்சட்டையோடு ஆண்குறி உராயும் போதும், பாலியல் எண்ண ங்கள் ஏற்படும் போதும் புடைத்தெழுகிறது.

காரணம் எதுவுமின்றியும் புடைத்தெழுகிறது

இது திடீர் புடை எழுதலாகும். இயற்கை முன்கூட்டியே பயிற்சி ஒன் றை அளிக்கிறது. உங்களுக்கு பயங்கரமான அனுபவம் உண் டாகிறது. நேரம் கெட்ட நேரத் திலும் ஏற்படுகிறது. உங்களு க்கு பாலியல் வெறி ஏற்பட்டு விட்டதோ என்று பயப்பட வேண்டாம். இப்படியான புடை த்து எழுவதனால் எவ்வித தீமைக்கும் இடம் இல்லை. உங்களுக்கு புடைத்து நிற்கும் நிலை ஏற்படவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள்.

இத்தகைய திடீர் புடைப்புகள் ஏற்படும் போது பையன்கள்தான் சங்கடப்படுகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் புடைத்து எழுவதைப் பற்றிப் பெண்களுக்கு ஒன் றுமே தெரியாது. துருவித் துருவிப் பார்க் கின்ற பெண்களுக்குக் கூட இது பற்றித் தெரியாது.

பையன்களுக்கு எப்போது திடீர் வளர் ச்சி ஏற்படுகிறது?

சுமார் பதின் மூன்று வயதாயுள்ளபோது அதாவது விதைகள் வளர்ச்சியுறத் தொ டங்கும்போது பையன்களுக்கு பெண்க ளை விட வேறுபட்டு இத்திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது. பையன்கள் மிகவும் உயரமாக வளர்ந்துவிடு கிறார்கள். ஆண்களின் உடல்கள் பெண்களைக் காட்டிலும் வளர்ச்சி ஹார்மோன்களைச் சுரக்கின்றன. ஆண்க ளுக்கான ஹார்மோன்கள் மற்றைய மாற்றங்களுக்குத் தேவைப் படுகின்றன. வளர்ச்சி ஹார்மோன்கள் பையன்களின் தோள்களை அகலப்படுத்தி தொண்டைக் கருகிலுள்ள சுவாசக் குழாயையும் விசா லப்படுத்தி குரலைக் கடுமையாக்குகிறது. தசைகளை வளரச்செய்து, முகத்தில் ரோமத்தை வளர்க் கிறது. பையன் வளர்ந்து மனிதனாக மாறி விடுகிறான். இந்தத் திடீர் வளர்ச்சியின் போது முகத்தில் மூக்கு பெரிதாக வளர் கிறது. உடல் மெலிந்து விடுகிறது. கால் களும் பெருத்து விடுகின்றன. கவலைப்பட வேண்டாம். மற்றைய அவையங்களும் கால கதியில் வளர்ச்சியுறும். ஒரே நேரத்தில் அனைத்தும் ஏற்படுவது எந்திரங்க ளுக்கு மட்டுமே. இயற்கை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிப்பதில்லை. இந்தத் திடீர் வளர்ச்சியின்போது ஒன்றை அவதானித்திருப்பீர்கள். உங்களுக்கு சற்று கூடுதலான நித்திரை தேவைப்படும். பாடசாலைக்குப் போக வேண் டாத நாட்களிலும் பாடசாலையிலிருந்து திரும்பி வந்ததும் உறங்க வேண்டும் போலவிருக்கும். ஏனெனில் வளர்ச்சி ஹார்மோன்கள் உற ங்கும் நேரத்தில்தான் கூடுதலா கச் செயல்படு கின்றன.

உங்களுக்குப் பயங்கரமான உணவுப் பிரியம் ஏற்பட்டிருப்ப தை உங்கள் தாயார் குறிப்பிடு வார். சிறுவயதைவிடவும் இப் போது புதியதும் நிறமானது மான காய்கறிகளை விரும்புவ தைக் காணலாம். ஏனெனில் நீங்கள் தற்போது வளர்ந்துள்ளீர்கள். உங்கள் உடல் காய்கறிகளிலுள்ள இயற்கையான நச்சுத்தன்மையை நடுநிலைமை ஆக்கக் கூடிய னவாகி விட்டது. காய்கறிகளும் உயிருள்ளவையே. தம்மை மற்றவர்கள் விரும்பி உண்பதை அவை விரும்புவதில்லை. அதனால் அவை நச்சுப் பொருள்களை உருவாக்கி விரும்பி உண்ண விடாது செய்கின்றன. இதனால் சிறு பிள்ளைகள் அவற்றை விரும்புவ தில்லை.

உடல் வளர்ச்சிக்குக் காரணமான அதே ஓமோன்கள் தான் வளர்ச் சிக்கும் முற்றுவைக்கின்றன. முடிவு என்றால் என்புகள் பூரண வளர் ச்சியை அடைந்து விட்டன. மேலும் நீண்டு விட இடமில்லை. பீங்கான்கள் எரிய10ட்டிய பிறகு மேற் கொண்டு வளராது உள்ளது போன்றே தான் உடல் வளர்ச்சியும் என்புகளின் வளர்ச் சியும் முற்றுப் பெறுகிறது. இறுதியா ன உருவத்தை அடைந்து விடுகி ன்றன.

அநேக உருவொத்த காகிதங்களைக் கொண்டு பந்து போன்ற உருவங்க ளைச் செய்வதாகக் கொள்வோம். உருவம் அமைக்கும் போது முதலில் பந்தை விரிவாக்கி நடுமையப்பகுதியை அடைகிறோம். அதே உருவ த்தை அடைய பந்து சுருங்கிக் கொண்டே வந்து மறுமுனையில் முடி வுற்று வட்டவடிவமாகிறது. இதே போன்று இயற்கையும் அப்படியே செயல்படுகிறது. அதே ஹார்மோன் இரண்டு மாறுபட்ட காரியங் களைச் செய்கிறது. மாற்றம் முன்கூட்டியே ஏற்படும். பையன்க ளுக்கு முன் கூட்டியே முடிவுறுகின்றது. அது போலவே காலம் தாழ்ந்து ஆரம்பிப்பவர்களுக்கு மெதுவாகவே வளர்ச்சி ஏற்பட்டு காலம் தாழ்த்தியே முடிவுறுகிறது. ஆகவே பெண்களுக்குப் பிறகே ஆண்கள் தமக்கு வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்று நினைப்பது சரியான முடிவு அல்ல.

அடுத்த கட்டம் என்ன?

விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் ஆண்குறி சற்று பெருத்து விரிவடைகிறது. விதைகள் பெருக்கின்றன. ஆண்குறியின் தோலும் விதைப்பையும் கருநிறம் அடை ய ஆரம்பிக்கின்றன.

இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். ஆனால், வைத்தியர்கள் இதனைக் கட்டங்கள் என்பார்கள். ஏனெனில் அவர்கள் விரைவாக பையன் பருவம் ஆன நிலையை அறிந்து கொள்ள இயலும். பருவம் ஆவதை வயதெனக் குறிப்பிடலாம். பருவம் ஆனதென்று கொள்ள விரும்புகின்றனர். ஏனெனில் எல்லாப் பையன்களும் ஒரே வயதில் பருவம் ஆவதில்லை.

அதன் பின்பு ????

ஒரு சுவாரஸ்யமான மாறுதல். நினைவில் கொள்ளுங்கள். பிள்ளை கள் கூட சிறிதளவு பெண்களுக்கான ஓமோனான எஸ்ரோஜன் என்பதைச் சுரக்கின்றார்கள். இந்த ஹார்மோன் செய்வது என்ன வென்றால், ஆண் பிள்ளைகளுக்கும் முலைக்காம்பு கள் மலர்கின்றன. சிலவேளைகளில் வளர்ச்சி உறுவதும் அவ்விடம் சற்று வீங்கி இருப்பதும் ஆகும். சில ஆண் பிள்ளைகளுக்கு ஒன்று மட்டுமே தோற்றம் அளிக்கும்.

சில பையன்களுக்கு இந்நிலைமை ஏற்படுவதே இல்லை. ஏனெனில், அது தேவையற்றது. கூர்ப்பு முறையில்: ஆனால் கூர்ப்பு என்பது எது தேவை என்று தீர்மானிப் பதில்லை. எந்த உருவம் எளிதாக அமையக் கூடியதோ அதனைச் செய்கிறது. ஆண் பிள்ளை யையும் பெண் பிள்ளையையும் ஒரே சீராக அமைத்து விட்டு அதன் பின் மாற்றி அமைப்பது சுலபமானது. கைக ளையும் கால்களையும் பெருவிரல் களோடு முதலில் அமைத்து விடு கிறது. ஆனால் அவை அடிப்படை யான உருவமைப்பே.

முலைக்காம்புகள் சில மாதங்களுக்கு உறுதிக் கொண்டும் மிருது வாகவும் இருக்கும். சட்டைகள் அழுந்தும் போது சிறிது நோகிறது. ஆனால், சில காலங்களுக்குப் பின் இல்லாது போகிறது.

இதற்குப் பிறகு. . . . . .

இந்தக் கட்டத்தில்தான் பூப்புமயிர் தோன்றுகிறது. இது ஆண் குறி யின் அடிப்பகுதியிலும் விதைப் பையின் மீதும் பூப்பு மயிர் முளை க்கின்றது. இவை முன்பு அங்கிருந்தவை போலவே தோன்றினும் நீண்டும் கறுத்தும் இருக்கும்.

சில ஆண்பிள்ளைகளுக்கு தோற்றம் அளிப்பது பூப்பு மயிர்தான். இத னைக் கண்;டதுந்தான் தாம் பருவம் அடைந்து விட்டதாக நினைக்கின்றனர். விதைகள் வளர்ச்சியடைந்த பிறகே பூப்பு மயிர் முளைக்கத் தொடங்குகிறது.

பூப்பு மயிர் முளைத்து ஓராண்டு கழிந்த பிறகே கை அக்கிள் அடி உரோமம் நீளவும் கருமையடையவும் ஆரம்பிக்கும்.

சகல புதிய அவையங்களும் எப்போது செயல்பட ஆரம்பிக்கின்றன?

இந்தக் கட்டத்தில்தான் மாற்றங் கள் துரிதகதியில் நடைபெற ஆர ம்பி க்கின்றன. இதே வேளையில் முதல் வெளியேற்றம் இடம் பெறு கிறது. வெளியேற்றம் என்பது விரு ம்பியே நடைபெறுவது. நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இது நடைபெறும் ஒன்று. வெளி யேற்றத்தை ‘வந்துவிட்டது’ என் பர்.

பாலியல் உறவின் உச்சக் கட்டத்தின் போது ஆண்குறியின் தசை களின் சுருக்கம் விந்தை ஆண்குறியிலிருந்து வெளியேற்றுகிறது. ஆண்குறியிலிருந்து சிறுநீர்போக்குப் பாதைய10டாக வெளி வருகி றது. இதே வழியாக வெளிவரும் சிறுநீர் வெளிவராமல் வால்வுகள் செயல்பட விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது. இத்த கைய பாலியல் உறவின் உச்சக் கட்டத்தை உறவின் உச்சக் கட்டம் என்பர். இந்த உச்சக்கட்டம் மன எழுச்சி – இன்ப அதிர்ச்சி ஆகியவை யில் மட்டுமின்றி உடலெங்கும் வியாபி த்து விடுகிறது. விந்து வெளியே றியபின் அனைத்தும் முடிந்து விட்ட உணர்வு ஏற்படுகிற து. ஒவ்வொரு முறையும் இத் தகைய அனைத்தையும் எதிர் பார்க்க முடியாது. சில வேளை களில் உணர்வின் உச்சக் கட்டம் மிகவும் குறைந்ததாகவே இருக் கும்.

இயற்கை குழந்தையை உருவாக்க பெரிய உந்துசக்தியை வழங்கி யுள்ளது.

விந்து என்றால் என்ன?

விந்து என்பது உங்கள் விதைகளில் தயாரிக்கப்படும் தடித்த வெள் ளை நிறப் பாய்பொருள். இந்தப் பாய்பொருள் விந்துகளை பெண் ணின் கருமுட்டைகளோடு மோதப் பாய்ந்தோடுகின் றன. புறஸ் ரேட் சுரப்பிகள் வழியாக வரும்போது கூடு தலான திரவம் ஆண்குறி யை அடையுமுன் சேர்கிற து. விந்துகளுக்கு இந்தத் திரவமெல்லாம் எதற்கு? மீன் அசைந்து இடம் பெயர் ந்து திரிய நீர் தேவை. அது போலவே விந்துகளும் திரிய திரவம் தேவைப் படுகிறது. விந்துத் திரவம் வெறும் திரவம் மட்டுமல்ல. பலவிதமான ஊட்டச் சத்துக் களும் கொண்டிருக்கும். விந்துகளுக்குத் தேவை யான ஊட்டச் சத்தை வழங்குகின்றன. ஆண்குழந்தைக்கான விந்து ஒரு நாள் மட்டும் உயிர்வாழும். ஆனால், பெண்குழந்தைக்கான விந்து மூன்று நாட்கள் வரை உயிர் வாழும்.

ஒவ்வொரு விந்து வெளியேற்றத்தின் போதும் எத்தனை விந்துக ளை வெளி யேற்றுகிறது?

சராசரி 409,000,000. அதாவது நானூறு மில்லியன்; ஆகும். ஒவ்வொரு முறை விந்து வெளியேற்றத்தின் போதும் வெளி யாகும் விந்தின் தொகை இந்தியாவின் சனத்தொகையின் பாதியை உருவாக்கப் போதுமானது. விதைகளில் உருவாகும் விந்துகள் முதிர்ச்சி அடைய ஆறு கிழ மைக் காலம் எடுக்கும். ஆரோக்கிய மான விந்துகளே விந்து வெளியேற்றத்தின் போது வெளிவருகின்றன. நன்கு பழுக்கா தவை மரணிக்கின்றன. அவை விந்து வெளி யேற்றத்தின் போது வெளிவருவதில்லை. பயனுள்ள விந்துகளை வீணாக்குகிறோம் என்று நாம் கவலைப்படும் போது இயற்கை யானது எவ்வளவு விந்துகளை உங்களுக்குத் தந்து உதவுகிறது எனச் சிந்திக்கலாம்.

திடீரென ஏன் விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது?

முதல் தரம் எப்போதும் ஆச்சரியமான தே.

சில பையன்கள் தாமாகவே தமது விந் தை வெளியேற்ற முயலும் போதும் தமது ஆண்குறியைத் தட்டி எழுப்பும் போதும். அநேக ஆண்பிள்ளைகள் இளைஞராக உள்ளபோதே இவ்வாறு செய்யத் தொடங்கிவிடுகின்றனர். உண ர்வின் உச்சக் கட்டத்தில் விந்து வெளி ப்படுகிறது.

சில பையன்களுக்கு நித்திரை செய்து கொண்டிருக்கையில் விந்து வெளிப்படுகிறது. இதற்குக் காம வெறியோடு கூடிய கனவு தோன்றும் போது, அக் காம உணர்வில் உச்சக் கட்டம் அடைந்து விந்து வெளிவருகிறது. நித்திரை கலைந்த பின் ஆடையிலோ படுக்கை விரிப்பிலோ விந்து படிந்திரு க்கும். இதனை ஈரக்கனவு என்பர்.

முதல் விந்து வெளியேற்றம் பெருமை யுடன் கொண்டாடக்கூடிய சம்பவம் என் பதை அறிந்து கொள்ளாத பையன்கள் விரக்தியும் வேதனையும் அடைவார் கள். பாலியல் பற்றிய நல்ல யோசனை யை அறியமாட்டார்கள்.

அடுத்த கட்டம் என்ன?

அடுத்த கட்டம் பதின்னாலரை வயதாய் உள்ள போது ஆண்குறி பெரியதாகி அகலுகிறது. அதேநேரம் விதைப்பையும் பெரிதாகிறது. ஆனால் ஆண் குறியும் விதைப்பையும் வளர்ச்சியுற்ற போது போலக் கரு நிறம் அடைவதில்லை.

இதே காலக்கட்டத்தில் பூப்புமயிர் கருமையாகும் போது சுருளு கிறது.

உடல் முழுமையான வளர்ச்சி அடைந்தபின் என்ன நடைபெறு கிறது?

முக்கியதொரு திருப்புமுனை இதுதான். இந்நிலையில்தான் வேகத்தின் உச்சக் கட்டத் தை அடைகிறது. இது வரை மிக மிக வேகமான வள ர்ச்சியை அடைகிறீர்கள். இக்கட்டத்தில் திடீர் வளர் ச்சி முடிவுக்கு வருகிறது. உங்கள் சராசரி வயது பதி னைந் தரையாகும் போது வளர்ச்சி முற்றுப் பெறுகி றது. அதன் பின்பும் கூட சுமார் இரண்டு அங்குலம் உயர்வீர்கள். இத்துடன் உயரவளர்வது நின்றுவிடுகிறது. ஆனாலும் இது மிகவும் மெதுவாக நடக்கிறது.

மிகுந்து இருப்பது என்ன?

விதை தொடர்ந்து வளரும். இது பதினாறு வயதை அடையும் வரை நடைபெறுகிறது. பெரிதாகிறது. விதைப்பையும் கருமை நிறமா கிறது.

பூப்புமயிர் தடிப்பாகிக்கொண்டே இருக்கும். பதினெட்டாம் பிராயம் வரும் வரை அது தடிப்படைந்து வயிற்றின் கீழப் பகுதி தொப்புள் வரை பரவும் வரை வளர்ச்சி தொடர்ந்து நடைபெறும். சில நேரங்களில் தொடைப் பகுதியி லும் நடைபெறும்.

அநேக பையன்களுக்கு அவர்க ளின் கால்களிலும், கை அக்கிளிலும், தோள்களிலும் முதுகுகளி லும் தடித்த கருமையான உரோம வளர்ச்சி காணப்படும். ஆசிய நாடு களில் உள்ள சில இனங்களுக்கு எவ்வித உரோமமும் முளைப்ப திலலை.

பையன்களின் முகங்களில் எப்பொழுது உரோமம் தோன்றத் தொடங்குகிறது?

சராசரி வயது பதின்னான்கைக் கடந்த பிறகே முதலில் மேலுதட்டின் ஓரங்க ளிலும் பின்பு கன்னப் பகுதியிலும் மீசை யின் பிறபகுதியிலும் இறுதியாக நாடி ப்பகுதியிலும் வளரத்தொடங்குகிறது.

ஆசிய நாட்டுச் சில இனங்களிடையே முகத்தில் மயிர் வளருவதேயில்லை.

பதினாறு பதினேழு வயதை அடைந்த பிற கும் கூட பருவம் ஆகாவிட்டால் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு இத்தகைய திடீர் வளர்ச்சி காணப்படாவிட்டால் நீங்கள் காலம் தாழ்ந்த நேரசூசிக்கு இடப் பட்டீர்கள் என்று கருதலாம். இதனை உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஓ கதிர் மூலம் என்பு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராயு ங்கள். எடுக்கப்பட்ட ஓ கதிர்ப் படத்தை ஒரு குழந்தை வைத்தியரிடமோ என்பு வைத்தியரிடமோ காட்டுவது நல்லது. எல்லா வைத்தியர்களாலும் என்பு வளர்ச்சியை அடையாளம் காண இயலாது.

நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. பொறுத்திருந்தால் போதும். நீங்கள் கவலைப்படுவதாயின் ஒரு குழந்தை வைத்தியரை அணுகுங்கள். ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்று ஆலோ சனை பெறுவது சிறந்தது. உங்களைப் போன்ற பல் பிணியினரைக் கண்டிருப்பார்கள். ஆதலால் ஆச்சரியம் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு தேவையில்லை என்ற போதிலும் சில ஹார் மோன் மருந்துகளைச் சிபார்சு செய்வார்கள். ஹார் மோன்களின் செயல்பாடு இதுதான். துரித கதியில் செயல்படவைக்கும். இதனை காணக்கூடியதாய் இருக்கும். எவ்வளவு விரைவாகச் செயல்படத் தொடங்கியதோ அதேபோல விரைவாக நின்று விடும். ஒரு நடவடிக்கையும் எடுக்காமலிருந்தால் தாமாகவே செயல்படத் தொடங்கி செவ்வை யாக முற்றுப் பெறும்.

thanks to Illamai
இணையத்தில் இருந்ததை இதமுடனே இணைத்திட்டோம்.
தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க‍ வேண்டுகிறோம். 
நீங்கள் படித்த‍து, பார்த்த‍து, பிடித்திருந்தால், உங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: