Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உயிர்கொல்லி நோய்களை தடுக்க‍ உதவும் ஆணுறையை, எப்ப‍டி பயன்படுத்துவது? (விழிப்புணர்வுக்காக)

பலர் ஆணுறை அணிவதில் தவறு செய்கிறார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று பார்ப்போம்.

ஆண் உறை என்றால் என்ன?

இது லேடெக்ஸ் அல்லது இறப்பரினால் ஆன,எழுப்பிய ஆண் குறிக்கு பொருந்தக்கூடிய தாகும்.

எவ்வாறு செயற்படும்?

பெண்னின் யோனியினுள் விந்துகள் செல்வதை தடுக்கும்.

எவ்வளவு வெற்றிகரமானது?

சரியாக பாவிக்கப்பட்டால் 97%  நம்பகரமானது

நிழலான,வெப்பம் குறைந்த இடத்தில் வைக்கவும்

பிற பலன்கள் என்ன?

மிகவும் பாதுகாப்பானது

HIV/எயிட்ஸ் மற்றும் இலிங்க நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

கருக்கட்டும் ஆற்றல் நீண்டகால அளவில் பாதிக்கப்பட மாட்டாது.

இலங்கையில் எந்த மருந்தகத்திலும் மலிவாக கிடைக்கும்.

பிரச்சினைகள் என்ன?

ஒவ்வொரு உடலுறவின் போதும் புதிய ஆணுறை தேவை.

எப்போதும் இருக்க வேண்டும்.

இன்பத்தை குறைக்கலாம்.

லேடெக்ஸ்/இறப்பருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.

ஆண் உறை :

பாவிப்பது எப்படி?

முதலில் காலம் கடக்கும் திகதியை பார்க்க.

பற்கள் போன்ற பகுதியில் கிழித்து காண்டம் ஜ வெளியே எடுக்க.

இது உடலுறவின் போதே எடுக்கப்படும்.

எழுப்பிய ஆண்குறி மீது மட்டுமே போடப்படும்.

யோனியுடன் தொடர்பு கொள்ளமுன் போடப் பட வேண்டும்.

நுனியை நசுக்குவதன் மூலம், வாயுக்குழுமிகள் வருவதை தடுக்கலாம்.

காண்டம் உடன் எந்தவித கிறீம், எண்ணைகள் பாவிக்க கூடாது.

 இது ஒருமுறை மட்டுமே பாவி க்கப்படலாம்.

சுக்கில வெளியேற்றத்தின் பின்,ஆண்குறி எழுந்தவாறே வெளி எடுக் கப்பட வேண்டும்.கொண்டம் அவ்வாறே கழற்ற வேண்டும்.

பாவிக்கப்பட்ட கொண்டம், புதைக்கவோ / எரிக்கவோ பட வேண்டும். மலசல கூடத்தில் போடக்கூடாது.

காண்டம் பிழைப்பதற்கான காரணம் என்ன?

தப்பான பாவனை.

உடலறவின் போது உடைதல்,அல்லது கழறுதல்.

காண்டம் உடையக்கூடிய காரணம்

*விரல் நகத்தால்
*கடுமையான உடலுறவு
*குறை தரம்
*தவறாக போடப்படல்,வெளி எடுக்க முன் சுருங்குதல்

காண்டம் உடைந்தால் அல்லது கழன்றால் என்ன செய்வது?

*உடலுறவை நிறுத்துக.
* பாவித்த கொண்டமை அகற்றுக.
*புதிய கொண்டம் ஒன்றை போட்டு தொடருக.
*திடீர் குடும்ப கட்டுப்பாடு -72 மணி நேரத்துக்குள்.

HIV/எயிட்ஸ் மற்றும் இலிங்க நோய்கள் பற்றிய பயம் எனில் வைத் தியரை நாடவும்.

thanks to illamai

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply