Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கம்ப்யூட்டர் கேம்ஸ் – அணுகுமுறை

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது இரு பக்கம் கூர் தீட்டப்பட்ட கத்தி போல. அதில் விளையாடுவது பிரச்னை கொண்ட நம் மனதினை அமைதிப்படுத்தும். அதே நேரத்தில், கேம்ஸ் விளையாடுவதற்கு அடிமை யாகி விட்டால், நம் பொன்னான நேரம் வீணாகி, வழக்கமான பணி கள் பாதிக்கப்படும். எனவே கம்ப்யூ ட்டர் கேம்ஸ் விளையாடுவதில் கவனத்துடன் நம்மை இழக்காமல் விளையாட வேண்டும். அண்மை யில் ஒரு வாசகர், தேர்வுகள் நெருங்கும் நேரம் கேம்ஸ் குறித்த செய்திகள் வேண்டாம்; எச்சரிக்கும் விதத்தில் கட்டு ரை எழுதுங்கள் என அன்புடன் கேட்டுக் கொண் டுள்ளார். அதனால் தான் இந்த முன்னுரையுடன் கேம்ஸ் குறித்த சில தகவல் களையும் தருகிறேன்.

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது தவறில்லை. ஆனால் பள்ளி மற்றும் கல் லூரி மாணவர்கள் அதிலே யே முழு நேரமும் செலவிடு வதுதான் வருந்தத்தக்கதாயுள்ளது. ஒரு சிலர் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். என்னுடைய பேராசிரிய நண்பர் ஒருவர் அவர் ஆராய்ச்சிக்கென கம்ப்யூட்டர் ஒன்றை வாங் கிப்பயன்படுத்தத் தொடங்கி னார். பின்னர் கேம்ஸ் விளை யாடத் தொடங்கினார். தினந் தோறும் கம்ப்யூட்டரில் ஆய்வு தகவல்களை இடும் முன்னரும் இட்ட பின்னரும் கேம்ஸ் விளை யாடாமல் கம்ப்யூட்டரை ஆப் செய்திட மாட்டார். இதுவே இன் னும் வெறியாக மாறியது. இறுதியில் அவர் டாக்டர் பட்டம் பெறுவது இதனாலேயே ஒன்ற ரை ஆண்டுகள் தள்ளிப் போயிற்று என அவரே கூறினார்.

கேம்ஸ் விளையாடுவது நல்லதுதான். அது ஒரு சிறந்த பொழுது போக்கும் கூட. ஒரு சில கேம்ஸ் நம் தர்க்க ரீதியான சிந்தனையை, லாஜிக்கலாக முடிவெடுக்கும் திற னை வளர்க்கின்றன என்பதுவும் உண்மையே. அண்மைக் காலத்தில் மிக அழகான கிராபிக்ஸ் பின்ன ணியில் கேம்ஸ் வடிவமைக்கப்ப ட்டுக் கிடைக்கின்றன. இப்போது சிடி மற்றும் டிவிடியில் கேம்ஸ் பதியப் பட்டுக் கிடைத்தாலும் பலர் இன்டர் நெட்டில் கட்டணம் செலுத்தியோ, இலவசமாகவோ கிடைக்கும் கேம்ஸ்களையே விரும்பி டவுண் லோட் செய்கின்றனர். ஆன் லைனி லேயே கேம்ஸ் விளையாடும் வசதியும் நிறைய கிடைக் கிறது. முகம் தெரியாத எங்கோ இருக்கும் ஒருவருடன் இன்டர்நெட் வழியாக விளையாட விளையாட்டுக் களைத் தரும் இணைய தளங் களும் உள்ளன.

கேம்ஸ் குறித்த இணைய தளங்களை இங்கு காண லாம். அதிகமான எண்ணிக் கையில் மிகவும் ஆர்வ மூட்டும் விளையாட்டுக்க ளைத் தரும் தளங்கள் என எடுத்துக் கொண்டால் மூன்று தளங்களைக் கூறலாம். அவை: Game Daily (www.gamedaily.com) GameSpot (www.gamespot.com) மற்றும் Game Fly (www.gamefly.com) இவற் றில் முதலில் குறிப்பிட்ட Game Daily என்ற தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒன்றரைக்கோடி பேர் கேம்ஸ் பெற வருகின்றனர். விளையாட்டுக்களை விளையாடத் தேவையான பலவிதமான கன்சோல்கள், மெஷின்கள் மற்றும் டவுண்லோட் செய்யக் கூடிய கேம்ஸ், அவை குறித்த திறனா ய்வுக் கட்டுரைகள் என கேம்ஸ் குறித்து அனைத்து கோணங்களி லும் தகவல் தரும் தளமாக இது உள்ளது. பல கேம்ஸ் இலவசமாக இங்கு கிடைத்தாலும் பல புதிய கேம்ஸ் பெற கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும்.

கேம்ஸ்பாட் (GameSpot) ஒரு கிராபிக்ஸ் நிறைந்த கேம்ஸ் தளமாகும். பெர்சனல் கம்ப்யூ ட்டர், எக்ஸ் பாக்ஸ் 360, வை, பி.எஸ்.3 என அனைத்து வகை பிரபலமான கேம்ஸ் சாதனங் கள் குறித்தும் இங்கு அறிந்து கொள்ளலாம். அவ்வப் போது வெளியாகும் புதிய கேம்ஸ் குறித்து இங்கு கருத்துக் கட்டு ரைகள் வெளியாகின்றன. இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ள கேம்ஸ் தருவதுடன் கட்டணம் செலுத்திப் பெறும் கேம்ஸ்களையும் இந்த தளம் கொண்டு ள்ளது. இந்த தளத்தில் இயங்கும் குழுவில் நீங்களும் இணைந்து கேம்ஸ் குறித்த உங்கள் கருத்துக்களை மற்ற வர்களுடம் பகிர்ந்து கொள் ளலாம். இந்த தளத்தின் மேலாக உள்ள ஸ்போர்ட்ஸ் ஐகானில் கிளிக் செய்தால் நீங்கள் இன்னொரு இணைய தளத்திற்கு அழைத்துச் செல்ல ப்படுவீர்கள். இங்கு பல வகை யான வீடியோ கேம்ஸ் பட்டி யலிடப்பட்டிருப்பதனைக் காணலாம். இங்குள்ள நியூஸ் ஐகானில் கிளிக் செய்தால் வீடியோ கேம்ஸ் குறித்த அனைத்து செய்திக ளையும் பெறலாம்.

கேம் ப்ளை (GameFly) என்பது வீடியோ கேம்களுக்கான இன் னொரு அருமையான வெப் சைட். இந்த தளம் லேட்டஸ்ட் வீடியோ கேம்ஸ்களை தொடர்ந்து அப்டேட் செய்து தந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலம் ஒரு வீடியோ கேமினை அமெரிக்காவில் வாடகைக்குக் கூட பெறலாம். இதில் தற்போது 6000க்கும் அதிகமான வீடியோ கேம்ஸ் உள்ளன. பல வகையான கேம்ஸ் விளையா டும் சாதனங்களுக்கான (Play station 3, Playstation 2, PSP, XBox 360, Xbox, Wii, GameCube, Nintendo DS, Gameboy etc.) கேம்ஸ்கள் இங்கு உள்ளன. இது இந்தியாவில் உள்ள வாடிக்கை யாளர்களுக்கு வாடகைக்கு கேம்ஸ்களை வழங்குமா என்பது இனிமேல் தான் தெரியும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: