Wednesday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குறைந்த விலை வீடு: வரிச் சலுகை சாத்தியமா?

குறைவான சதுர அடி கொண்ட குறைந்த விலை வீடுகள் (Affordable home) மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளு க்கு அதிக அளவில் தேவை இருக்கிறது. இந்த புராஜெக் ட்களில் பெரிய லாபம் இருக் காது என்பதால் பல புரமோ ட்டர்கள் இதில் ஆர்வம் எதுவும் காட்டுவதில்லை.
உதாரணமாக, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 8 – 10 லட்சம் ரூபாய் வரையிலான ஃபிளாட்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. ஆனால், அங்கு கட்டப் படும் ஃபிளாட்டுகள் 15 – 30 லட்சம் ரூபாய்க் குள் இருக்கின்றன. இது போன்ற நிலையில் அஃபோர்டபிள் வீடுகளை கட்டும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு மத்திய அரசு 2011 பட்ஜெட்டில் வரிச் சலுகை அறிவித்திருந்தது. இதுகுறித்து அண்மையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டி. டி.) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. (அதன் முக்கிய அம்சங்களை பெட்டிச் செய்தியில் பார்க்க!) மத்திய அரசு இப்படி சலுகை அளி ப்பதால் ரியல் எஸ்டேட் டெவலப் பர்களுக்கும் மக்களுக்கும் என்ன லாபம் என சென்னை யின் முன் னணி ஆடிட்டர்களில் ஒருவரான N.S. ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.

”மேலோட்டமாகப் பார்த்தால், டெவலப்பர்களுக்கு வரிச் சலு கை கிடைக்கும்; அதிக எண் ணிக்கையில் பட்ஜெட் வீடுகள் கட்டப்பட்டால் எல்லோருக்கு ம் வீடு கிடைக்கும் என்பது போல் தோன்றும். இதில் நிறைய நடைமுறை சிக்கல் கள் இருக்கின்றன.

இ.டபிள்யூ.எஸ்., எல்.ஐ.ஜி. மற் றும் எம்.ஐ.ஜி. பிரிவினருக்கான வருமான வரம்பு தெளிவாகச் சொல்லப்படவில்லை. தவிர, எத்தனை டெலவப்பர்கள் இதுபோன்ற குறைந்த பட்ஜெட் வீடுகளை கட்ட முன்வருவார்கள் என் பது பெரிய கேள்விக்குறி .  மக்கள் வசிக்கப் போதுமான அளவு உள்கட்டமைப்பு வசதி கள் இல்லாத புற நகர்களில் குறைந்த விலையில் வீடுக ளைக் கட்டி விற்றாலோ, வாடகைக்கு விட்டாலோ அது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும் என்பது கேள்விக்குறியே!

சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்றதொரு திட்டம் கொண்டு வரப்பட்டது.  ஆனால், அதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்ததால் வரிச் சலுகை எதுவும் பெற முடியாமல் போனது. அது மாதிரி பிரச் னைகள் இத்திட்டத்திலும் வர வாய்ப்புண்டு. எனவே, எந்த ஒரு டெவலப்பரும் துணிச்சலாக சாதாரண மக்களுக்குத் தேவையான குறைந்த பட்ஜெட் வீடுகளை கட்டிக் கொடுக்க முன்வர மாட்டார்.

ஆனால், பெரிய நிறுவனங்கள், அவர்களின் ஊழியர்களுக்கு இது போன்ற பட்ஜெட் வீடுகளை க் கட்டி கொடுத்தாலோ அல்லது வாடகைக்கு கொடுத்தால் அதற்கான செலவை இதர வருமான த்தில் கழித்துக் கொள்ள முடியும். இந்நிலையில் பல நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களுக்கு குடியிருப் பு வசதிகளைச் செய்து கொடுக்கும் சூழ்நிலை உருவாகும். இத்திட்டத்தில் உள்ள நடை முறை மற்றும் சட்டச் சிக்கல்களை மத்திய அரசு நீக்கினால், உண்மையில் லாபகரமாக அமையும்” என்றார்.

அரசு கவனத்தில் கொள்ளுமா?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply