Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிறரை சார்ந்திராமல் வாழ, நிதி ஆலோசனை

என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, அவர்களுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்கணும். தற்போது கை வசம் இருக்கும் சொத்துக் களை பயன்படுத்தி புதுசா வீடு கட்டணும். என் ஓய்வுகாலத்துல நானும் என் மனைவியும் பிறரை சார்ந்திராமல் வாழ முதலீடு செய்யணும். இதற்கான முதலீட்டு வழிகளை நீங்கள்தான் எனக்கு சொல்லணும்” என்று நிதி ஆலோ சனை கேட்டு வந்திருந்தார் புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேசன்.  
நாற்பத்தி இரண்டு வயதான இவர் துபாயில் உள்ள தனியார் கட்ட மைப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகி றார். மாதச் சம்பளம் 30,000 ரூபாய் (இவரது தனிப்பட்ட செலவுகள், பிடித்தம் எல்லாம் போக). மனைவி பேபி பிரமிளா வீட்டு நிர்வாகத்தைக் கவனித்து வருகி றார். இந்த தம்பதிகளுக்கு சுபஷாலினி, ஹரிகிஷோர் என்ற இரு குழந்தைகள். மகள் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பும், மகன் மூன் றாம் வகுப்பும் படிக்கின்றனர். அளவான குடும்பம் என்பதால் செலவும் குறைவுதான். இவருக்கான முதலீ ட்டுத் திட்டங்களை தெளிவாக எடுத்துச் சொன்னார் நிதி ஆலோசகர் வி.சங்கர்.

”வரவுக்கு ஏற்ற செலவு என்பதால் பிரச்னை இல்லாமல் நாட்கள் நகர்கின்றன. ஆனால், எதிர்காலத் தேவைகளுக்கு இதுவரை எந்த முதலீடும் செய்யவில்லை என்ப தால் வருமானத்திலிருந்து 17,100 ரூபாய் குடும்பச் செலவு போக, மீதமிருக்கும் 12,900 ரூபாயை எதிர்காலத் தேவைகளுக்கு இன்றி லிருந்து முதலீடு செய்ய ஆரம்பி க்கலாம்” என்றவர், முதலில் எதிர்கால பாதுகாப்புக்கான வழி யைச் சொன்னார்.

இன்ஷூரன்ஸ்!

இதுவரைக்கும் தனது பெய ரிலும், மனைவி மற்றும் மகள் பெயரிலும் எக்கச்சக் கமாக யூலிப் பாலிசிகளை எடுத்து அதற்கு மூன்று ஆண் டுகள் மட்டும் பிரீமியம் கட்டி நிறுத்தியுள்ளார். தயவு செய் து இதற்கு மேல் அந்த யூலிப் பாலிசிகளுக்கு பிரீமியம் கட்ட வேண்டாம்.

அதே நேரத்தில், இப்போது அந்த பாலிசிகளை சரண்டர் செய்து வெளியேறவும் வேண்டாம். குறைந்தது இன்னும் ஏழு ஆண்டுகளா வது அந்த பாலிசிகளை தொடர்வதுதான் நல்லது.

அப்படி தொடர்ந்தால் அதில் தற்போது பிரீமியமாகச் செலுத்தி இருக் கும் 1.71 லட்சம் ரூபாய்க்கு 12% வருமானம் கிடைத்தால்கூட ஏழு ஆண்டுகள் கழித்து 3.78 லட்சம் ரூபாயாக கிடைக்க வாய்ப்பிரு க்கிறது. (யூலிப் பாலிசியை தொடர்ந்து வைத்திருக்கத் தேவையான பணத்தை நம் பாலிசியில் உள்ள யூனிட்களை விற்ப தன் மூலம் இன்ஷூரன்ஸ் நிறுவன ங்கள் எடுத்துக் கொள்ளும். இதை நான் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை.)

இது தவிர, தனது பெயரில் 2021-ல் முடிகிற மாதிரி ஒரு எண்டோவ்மென் ட் பாலிசியை எடுத்து வைத்திருக்கி றார். இதற்காக ஆறு மாதத்திற்கு 3,500 ரூபாயை பிரீமியமாக கட்டுகி றார். இந்த பாலிசியை சரண்டர் செய்து விடுவது நல்லது.

யூலிப் பாலிசி என்பதால் கவரேஜ் குறைவாக இருக்கிறது. எனவே 60 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் பிளான் எடுத்துக் கொள்வது அவசியம். இதற்கு ஆண்டுக்கு 20,000 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும். இதுதவிர, குடும்ப உறுப்பினர் கள் அனைவ ருக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூர ன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வருட பிரீமியம் 12,000 ரூபாய் கட்ட வேண்டி யிருக்கும். இன்னும் சில ஆண்டுகளு க்குப் பிறகு இந்த பாலிசியின் கவரே ஜை அதிகப் படுத்திக் கொள்வது நல்லது.

படிப்புக்கு..!

சுபஷாலினிக்கு முதுகலை கல்வி யை தரவேண்டும் என்கிறார். இதற் காக இன்றைய நிலையில் ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்கிற போது, இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து குறைந்தபட்சம் 2.3 லட்ச ரூபாயாவது தேவைப்படும். அதனா ல், இன்றிலிருந்து மாதம் 2,600 ரூபாயை 15% வருமானம் எதிர்பார் க்கக் கூடிய ஈக் விட்டி டைவர்சி ஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் முத லீடு செய்ய வேண்டும்.

ஹரிகிஷோர் நன்றாக படிப்பதால் அவனை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்கலாம் என்று நினைக்கிறார். இதற்கு இன்னும் பத்து ஆண்டு கள் இருக்கிறது. அன்றைய நிலையில் எம்.பி.பி.எஸ். படிப் புக்கு பல லட்சங்கள் செலவா கும். இதே வருமானம் தொடர்ந் தால் இவரால் அவ்வளவு பெரிய தொகையை ஈட்ட முடியாது. மகன் நன்றாக படிப்பதால் அவ னுடைய தகுதி அடிப்படையில் எம்.பி.பி.எஸ்.

சீட்டு வாங்கும்படி அவனை உற்சாகப் படுத்துவதே நல்லது. அப்படி தகுதி அடிப்படையில் சீட்டு கிடைத்தாலும் சில லட்ச ரூபாய் தேவைப்படும். அதற்கு இன்றிலி ருந்து மாதம் 2,500 ரூபாயை 15% வருமானம் எதிர் பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சி ஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் சுமார் ஏழு லட்ச ரூபாய் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதனை எம்.பி.பி.எஸ். படிக்க தேவைப் படும் இதர செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருமணத்திற்கு..!

சுபஷாலினிக்கு 24 வயதில் திருமணத்தை முடிக்க வேண்டும் என்கிறார். இதற்கு இன்னும் 12 ஆண்டுகள் இருப்பதால் இன்றிலி ருந்து மாதம் 2,100 ரூபாயை 15% வருமானம் எதிர் பார்க் கக்கூடிய ஈக்விட்டி டைவர்சி ஃபைட் மியூச்சுவல் ஃபண்டுக ளில் முதலீடு செய்ய லாம். கிடைக்கக்கூடிய தொகை 8.5 லட்சத்தைப் பயன்படுத்தி திரு மணத்தைச் சிக்கனமாக செய்து முடிக்கலாம். இன் னும் கொஞ்சம் அதிக செல வாகும் என்று நினைத்தால் வருமான வசதிக்கு ஏற்ப முதலீட்டை பெருக்கிக் கொள்வது அவசியம்.

ஹரிகிஷோருக்கு 28 வயதில்  தான் கல்யாணம் என்பதால், பணத் தேவைக்கு இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது. தவிர, மகனுக்கான திரு மணச் செலவு குறைவுதான் என்று கணே சன் சொல்வதால் இன்றிலிருந்து மாதம் 400 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க் கக்கூடிய மியூச்சுவல் ஃபண் டில் முதலீடு செய்ய வேண்டும். இப்படி கிடைக்கும் ஆறு லட்ச ரூபாயை கல்யாணத் துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலே சொன்னதுபோலவே, அன் றைய நிலையில் இந்த பணம் போ தாது என்று நினைத்தால், வருமான வசதிக்கேற்ப முதலீட்டை பெருக்க வேண்டும்.

வீடு கட்ட..!

இன்னும் ஐந்து வருடத்தில் புதுக்கோட்டையில் ஐந்து லட்சத்தில் மனை வாங்கி 15 லட்ச ரூபாய் செலவில் புது வீடு கட்ட வேண்டும் என்கிறார். இதற்கு ஏற்கெனவே இருக்கும் சொத்துக் களை விற்று அந்த பணத்தை பயன் படுத்தலாம் என்பது கணேசனின் ஐடியா.

இன்றைய நிலையில் இவரிடம் கிராம த்தில் 26 சென்ட் (தற்போதைய மதிப்பு ஒன்பது லட்சம் ரூபாய்) நிலம் இருக்கி றது என்கிறார். இது இன்னும் ஐந்து வருடத்தில் 16 லட்ச ரூபாயாக உயர வாய்ப்பு இருக்கிறது. இதே கிராமத்தில் இருக்கும் சொந்த வீட்டின் இன்றைய மதிப்பு ஏழு லட்சம் ரூபாய். இது இன்னும் ஐந்து ஆண்டு கள் கழித்து 10 லட்சம் ரூபாயாக இருக்கும். ஆக, ஐந்து ஆண்டுகள் கழித்து இருக்கும் மொத்த சொத்தின் மதிப்பு 26 லட்சம் ரூபாய்.

இதை பயன்படுத்திக் கொண்டு மீதி தேவைப்படும் தொகைக்கு யூலிப் பாலிசி களில் இருந்து கிடைக்கக் கூடிய முதிர்வுத் தொகை நான்கு லட்சம் ரூபாயை பயன்படுத்திக் கொள்ளலாம். இருக்கும் சொத்துக்களை விற்று வீடு கட்டிக் கொள்ள லாம் என்கிற மனோ பாவம் அன்றும் இருக்கு மானால் கணேசன் கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது.

ஓய்வு காலத்திற்கு..!

ஓய்வு காலத்திற்காக மேலே சொன்ன முதலீடுகள் போக மீதமி ருக்கும் 5,200 ரூபாயிலிருந்து இப்போதைக்கு 3,200 ரூபாயை மட்டும் எடுத்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய லாம். தொடர்ந்து 18 ஆண்டுகள் இந்த முதலீடு தொடர்ந்தால் முதலீடு முதிர்வின்போது கிடை க்கக் கூடிய தொகை 35.50 லட்சம் ரூபாய்.

தற்போது புதுக்கோட்டை யில் கட்டியிருக்கும் வீட்டுக்காக வாங்கி யிருக்கும் ஆறு லட்சம் ரூபாய் கடனில் பாக்கி இருக்கும் 3.5 லட்சத்திற்கு மாத இ.எம்.ஐ. 4,500 ரூபாயை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் கட்ட வேண்டும் என் கிறார். ஆறு ஆண்டுகள் கழித்து இந்த வீட்டுக் கடன் முடிந்தபிறகு இ.எம்.ஐ. கட்டி வந்த 4,500 ரூபாயை ஓய்வு காலத்திற்காக 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு 12 ஆண்டுகள் தொடர் ந்தால் கிடைக்கக்கூடிய வருமானம் 18 லட்சம் ரூபாய். சுபஷாலினி யின் கல்வித் தேவை முடிந்த பிறகு, அந்த தேவைக்காக முதலீடு செய்துவந்த 2,600 ரூபாயை ஓய்வு காலத்திற் காக தொடர்ந்தால் 13 ஆண்டு களில் கிடைக்கும் வருமா னம் 12.40 லட்சம் ரூபாயாக இருக்கும்.

ஹரிகிஷோரின் கல்வித் தேவை முடிந்தபிறகு, அதற்காக முதலீடு செய்துவந்த 2,500 ரூபா யை ஓய்வு காலத்திற்காக தொடர்ந்து எட்டு ஆண்டுகள் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம் 4.7 லட்சம் ரூபாய்.

அதேபோல் சுபஷாலினியின் திரு மணத் தேவைகள் முடிந்த பிறகு அதற்காக செய்துவந்த முதலீடு 2,100 ரூபாயை ஆறு ஆண்டுகள் தொடர்ந்தால் கிடைக்கும் வரு மானம் 2.5 லட்சம் ரூபாய். ஆக, ஓய்வு காலத்திற்கு முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய மொத்த வருமானம் 72 லட்சம் ரூபாய்.

கணேசனுக்கு ஓய்வு காலத்தில் 86.5 லட்சம் இருந்தால்தான் அன்றைய நிலையில் அதிலிருந்து மாதம் 35,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மேலே சொன்ன முதலீடுகளினால் 72 லட்சம் ரூபாய் தான் கிடைக்கிறது. அதனால் வருமானம் உயர உயர, ஓய்வு காலத் திற்கான முதலீட்டை உயர்த்திக் கொள்வது நல்லது!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: