Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை!

உங்கள் முடிவு சிறந்ததா?

முதலில் நீங்கள் எடுத்த முடிவுக்கு ஏற்ப, எதிர் காலத்தில் எத்த கைய சவால்களை சந்திக்க வேண்டியி ருக்கும் என்று உத்தேசி த்து அறிந்து அதற்கேற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். “உன்னை அறிந் தால் நீ உன்னை அறிந்தால் உலக த்தில் போரா டலாம்” என்ற கருத்து வரிகளுக்கு ஏற்ப உங்களை முதலில் மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் தேர்ந்தெடுத்த படிப்பு – வேலை உங்களுக்கு மன மகிழ்ச் சியை தருமா? அந்த வேலை அல்லது படிப்பு உங்களுக்கும், சமூகத் திற்கும் தேவையான ஒன்று தானா? மதிப்பு மிக்க பணியா? உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய பணிதானா? அதே துறையில் மேலும் பதவி உயர்வுகள் பெற்று வளரும் வாய்ப்புள்ளதா? என்பன போன்ற அடிப்படை விஷயங்களை ஆராய்ந்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

மேலே உள்ள வினாக்களுக்கு உங்கள் பதில் ஏற்புடையதாக அமை யும் போது நீங்கள் தேர்ந்தெடுத்த முடிவு சரியானது என்று கொ ள்ளலாம். அதன்பிறகு அடுத்த கட்ட செயல்களத்தில் இறங் குங்கள். இரண்டுக்கும் மேற் பட்ட காரணங்கள் எதிர்மறை யாக அமைந்தால் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண் டிய சூழல் ஏற்படலாம்.

இலக்கை நிர்ணயம் செய்யும் முன்:

இலக்கை நிர்ணயம் செய்யும்போது விருப்பத்துடன் தேர்வு செய்திருந்தால் மகிழ்ச்சியாக செயல்பட்டு வெற்றியை அடைய லாம். இங்கு ஒரு உதார ணத்தைப் பார்க்கலாம்.

ஒரு மாணவன் பள்ளியில் படிக்கும்போதே கார் ரேஸை மிக வும் விரும்பு வான். அவனுக்கு காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் கிடையாது. ஆனால் காரை எவ்வாறு வடிவமை ப்பது என்பதில் ஆர்வம் காட்டினான்.

அவனது வழிகாட்டி ஆலோசகர், கணிதம், அறிவியல் அடங்கி ய பாடங்களை பள்ளிப் பருவத்தில் படிக்கச் சொன்னார். பின் னர் பொறியியல் பட்டப்படிப்பை எந்திரப் பொறியியல்- மோட் டார் வாகனப் பொறியியல் படிப்பு படிக்க ஆலோசனை வழ ங்கினார். அது தவிர தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் வடிவ மைப்பு குறித்த சிறப்பு படிப்பு இருப்பதாகவும் கூறி னார்.

கார் உற்பத்தி செய்யும் நிறுவ னங்களில் பயிற்சி பெறவும், கணி னியில் வடிவமைக்க தேவை யான மென்பொருள்கள், அவற் றை கையாளும் விதம் ஆகியவற் றையும் அனுபவ ரீதியாக பெறும்படி ஆலோசனை வழங்கினார். இதன் அடிப்படையில் செயல் படத் தொடங்கிய அந்த மாணவன் வெற்றி பெற்றான்.

தன்னைத் தானே உற்சாகப்படுத்துதல்…

உங்களிடம் உள்ள முழுமையா ன திறமையை நீங்கள் நினை த்தால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். வேறு யாராலும் உங்களை இயங்கச் செய்ய முடியாது. வழிகாட்டிகளாக அல்லது தூண்டுகோலாக மட்டு மே அவர்கள் செயல்பட முடி யும்.

பலர் சிறப்பாக திட்டமிடுவா ர்கள், இலக்குகளையும் நிர்ணயிப் பார்கள். ஆனால் விடா முயற்சி யும், முனைப்பும் குறையும் போது நடைமுறைப்படுத்தும் ஆற்ற லற்று இருப்பார்கள்.

நீங்களே உங்களை உற்சாகப்படு த்திக் கொள்ளும்போதுதான் வாழ்க் கையை எதிர்கொள்ளும் பொறுப்பு ஏற்படும். உங்களை நீங்கள் வாழும் சூழல் கட்டுப்படுத்தாமல், உங்களது சூழலை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை ஏற்படுகி ன்றது. உங்களது ஒவ்வொரு செய லும் நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைவதற்கான முயற்சியே என்ப தை உணரும்போது உங்க ளது பய ணம் இலக்கைவிட்டு விலகாமல் இருக்கும்.

இன்று செய்ய வேண்டும் என்று எண்ணியதை எக் காரணம் கொண் டும் தள்ளிப் போடக்கூடாது. முதலில் செயல் திட்டத் தை வகுத்துக் கொள்ளுங்கள். இலக்கு சார்ந்த தகவல்களை சேகரியுங்கள். இலக்கை அடைய பல்வேறு வழிகள் இருக் கலாம். அதில் சரியான வழியை தேர்வு செய்து அதை நடைமு றைப்படுத் துங்கள்.

இலக்கை தீர்மானிக்க தேவையான உத்திகள்

* இலக்குகள் பயனளிப்பவையாக இருந்தால்தான் நீங்களே அ தை விரும்பி அடைய முயற்சி மேற் கொள்வீர்கள். எனவே விருப்பமு டையதாகவும், நல்ல பயன் தருவ தையுமே இலக்காக கொள்ளு ங்கள்.

* உங்களுடைய இலக்குகள் நடை முறையில் உங்களால் அடை யக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். கணிதப்பாடம் எப்படிப் படித்தாலும் புரியவில்லையென்றால் உங்களுக்கு நன்கு புரி கின்ற மற்ற பாடப்பிரிவின் அடிப்படையில் இல க்கை நிர்  ணயிக்க வேண்டும்.

* நீங்கள் எதை முக்கியமாக அடைய வேண்டுமென்று கருதுகின்றீர் களோ அதை அடைவதற்கு உங்கள் இலக்கு உதவும் வகையில் அமைய வேண்டும். அப்போதுதான் நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள், இலக்கை அடைவீர்கள்.

* உங்களது இலக்கு உங்களை நம்பிக்கையு டன் செயல்பட தூண்டுவதாக அமைய வேண்டும். இலக்குகளை திட்டமிடும் போது எதிர்மறையான வார்த்தைகளை, சொற்களை பயன்படுத்தக்கூடாது. உங்க ளது எதிர்கால திட்டத்தை இலக்குகள் நிர்ணயித்து அறிக்கையாக தயாரிக் கும்போது நம்பிக்கை ஊட்டும் சொற்களையே பயன்படு த்தப் பழக வேண்டும்.

* உங்களது இலக்குகள் ஒன்றை யொன்று சம்பந்தப்படுத்தி வலுப் படுத்துவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நடை முறைப்ப டுத்துவது எளிது. வளர்ச்சியும் வெற்றியை நோக்கி இருக்கும்.

இலக்குகளின் வகைகள்:

இலக்குகளை பொதுவாக குறு கியகால இலக்கு, இடைக்கால இலக்கு, நீண்ட கால இலக்கு என் று வகைப்படுத்தலாம். 5 ஆண்டு களுக்கு மேல் அவகாசம் தேவை ப்படும் இலக்கை நீண்ட கால இலக்கு என்று கொள்ளலாம். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் அடையும் இலக்கை இடைக் கால இலக்கு என்றும், ஒரு சில மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருட காலத்திற்குள் அடைய முடி யும் என்றால் அதை குறுகிய கால இலக்கு என்றும்கூறலாம்.

ஒரு மாணவர் வக்கீலாக வர வேண்டும் என்பது ஒரு நீண்ட கால இலக்கு. இதை ஒருவர் இலக்காக கொண்டால் அதற் காக அவர் பள்ளிப் பருவத்திலேயே ஏதாவது ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு வாதிடுதல் மற்றும் மறுத்து வாதிடுதல் என்று விவாத திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி- கல் லூரிப் பருவங்களில் தலைமைப் பண்பு டன் செயல்படுவது, சட்டம் சார்ந்த படிப் பை தேர்வு செய்து படிப்பது ஆகிய அனை த்துமே இலக்கை அடைய வழி வகுக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது தமது துறை யில் மூத்தவர்களுடன் நட்பு ஏற்படுத்தி வாடிக்கையாளர்கள் பற்றியும், சட்டம் சார்ந்த அடிப்படை நடை முறைகளையும் அனுபவ ரீதியாக கற்றுக்கொள்ள வேண் டும்.

இலக்கை அடையும் வழிகள்

உங்களது வருங்காலத் திட்டத்தை சிறு சிறு பிரிவு களாக பிரித்துக் கொண்டால் உங்கள் வளர்ச்சியை ஒவ்வொரு நிலை யிலும் உணர முடியும். எந்த செயல் நம்மை அடுத்த கட்டத்திற்கு எளிதாக கொண்டு செல்லுமோ அதை முதலில் செய்யப் பழகு ங்கள்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் நீங்கள் உருவாக்கிய செயல் திட்ட த்தை ஆய்வு செய்யுங்கள். நீங்கள் எதிர்பார்க்காமலே சில சின்னச் சின்ன மாற்றங்கள் நடந்திருக்கலா ம். அதற்கேற்ப உங்க ளது செயல் திட்டத்தை அவ்வப்போது திருத்தி அமைத்துக் கொள் வது தவிர்க்க முடியாத அவசியமாகும். அதுதான் நல்ல பலனைத் தரும்.

ஏனெனில் எதிர்பார்க்காத விளைவு களை எதிர்கொள்ளும்போதும் மாற்று வழிகளை தேர்ந்தெடுத்து இலக்கை அடையும் வகையில் வடிவமைப்பதே நல்ல செயல் திட் டம் ஆகும். எப்போதுமே ஒரு மாற்றுத் திட்டமும் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எத்தகை ய விளைவுகளையும் எதிர் கொ ள்வது சாத்தியமாகும்.

நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் இலக்கு என்பது உங்களுக்கு ஒரு வேலையை பெற்றுத் தருவது மட் டுமல்ல. வாழ்வு தழுவிய ஒன்றா கவும் கருத வேண்டும். அவை உங்களது வாழ்வியல் கொள்கை களையும், பழக்க வழக்கங்களையும் பிரதிபலிக்க உதவுவதாகவும் இருக் க வேண்டும். ஒன்றுக்கொன்று முரண்படக் கூடாது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: