Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்கள் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம்

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டி னாலும், என்றும் மார்க்கண்டேய னாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரி ய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல….! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறை ந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.

நமது வயதை முதலில் வெளிப்படு த்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட்காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையு டன் இருக்க இதோ சில டிப்ஸ். . . ! .

நாம் அதிகமாக சூரிய வெளிச் சத்தில் பயணிப்பதாலும், எண் ணெய் அதிகமுள்ள உணவுக ளை உட்கொள்வதாலும், மாசுள் ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற் றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படு த்தவது நல்லது. மேலும் அதிக மான தண்ணீர் பருகுதல் சரும த்தை பாதுகாக்கும்.

பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 விழுக் காடு கூடுதல் கடினத்தன் மையுடன் இருக்கும். ஆயி னும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்க ளை காட்டி லும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல் பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.

தொடர்ந்து ஷேவிங் செய்வதன் கார ணமாக முகத்தில் முதிர்ச்சி தோன் றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன் படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும் போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெது ப்பான தண் ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முக ம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோ ன்றும்.

ஆண்கள் என்றும் இளமையுடன் இரு க்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகை கள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட் கொள்ள வேண்டும். உடல் திசுக்க ளை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட உணவு களை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாக வும் காணப்படும்.

மேலும் பசலை கீரை, அவுரி நெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றை யும் சேர்த்துகொள்வது மிக வும் நல்லது.

சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப் பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட் டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவை யான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரி தும் பாதிக்கப்படும் என்பதை அநேகமா னோர் அறிவதில்லை. இரவில் குறைந் தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடை பிடித்து வந்தால் மனதில் புத்து ணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கி யத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங் கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர் வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண் கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சி யுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமை யும் கூடிக்கொண்டே போகும். . . !

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: