Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்களுக்கு விருந்தளித்த ரம்யா!

சென்னையின் மையப் பகுதி யை தாண்டி, சற்றுத் தொலைவில் இய ங்கி வரும், சிறப்பான சபாக்க ளில் ஒன்று நாதசுதா. வேளச்சேரி மற் றும் அதன் சுற்றுபுற மக்களுக்கு, கலைச் சேவை கொடுத்து வருகி றது இந்த அமைப்பு.

இவ்வருடம், நாதா சுதாவின் விரு துகளான, நாதபோஷக ரத்னா எம். எஸ்.அனந்தராமன் – வயலின், நாத ரத்னா – வீணை கலைஞர் பத்மா வதி அனந்தகோபாலனுக்கும், குரலிசை கலைஞர் விஜய் சிவா விற்கும், நாதவல்லபா விருதுக ளை காயத்ரி வெங்கட ராகவன், தஞ்சாவூர் முருகு பூபதிக்கும் அளி த்து கவுரவித்தனர்.

நடன விழாவில், ரம்யா கபாடியாவின் நடன நிகழ்ச்சி, அவர் தன் குரு கிருபா ஈஸ்வரனின், சிறந்த மாணவி என சொல்லும் அளவு, அற்பு தமாக இருந்தது. நடனத்திற்கு ஏற்ற உடல்வாகு, நிறம், கண்கள், முகம் உடலை நன்கு பிடிப்புடன் வைத்து, பொறுப்புடன் ஆடுகிறார்.

மிருதங்கத்தில் சுகி, வயலினில் ரிஜேஷ், குரலில் ப்ரீதிமகேஷ், நட்டுவாங்கம் கவுசிக் சந்திரசேகர், நடன ஜதி அமைப்பு சிவகுமார், சுகி, “சுவாமி நான் உந்தன் அடிமை’ என்று, சிவனைப் போற்றும் விதத்தில், அமைந்துள்ள பாபநாசம் சிவனின் வர்ணத்தை, தன் முதல் நடன உருப்படியாக எடுத்துக் கொண்டார்.

பல்லவியின் வரிகளுக்கு, பொருள் விளக்கமாக சிவனின் கேசாதி பாதவர்ணனையை கொடுத்து, முதல் ஜதியை கவுசிக் கொடுக்க, மிக வித்தியாசமான அமைப்பாக நமக்கு கிடைத்தது.

தாமதம் செய்யாது வரிகளில் சிவனை நாயகனாக, தேவியை நாயகி யாக பாவித்து, அவர் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வர்ணனை காட்சிகளில், ரம்யாவின் கண்கள் கவின் நடனம் பேசி யது. இதில், நடனமாடும் சேவடி வரிகளுக்கு, மத்தியம காலத்தில், ப்ரீத்தி பாட, மிக வித்தியாசமாக ரம்யா ஆட, அதை தொடர்ந்து, ஜதி யை மிருதங்கத்தில் மட்டும் கொடுத்து, இவர் ஆடினார்.

முக்தாயிஸ்வரத்திலும், மிக வித்யாசமாக திச்ரநடையில், துரித காலத்தில் அமைத்து, எப்போதும் உள்ள பாணியிலிருந்து, மிக வித்தியாசமாக கொடுத்தது, அற்புதமாக இருந்தது. சரணவரிகளாக நடராஜா தேவா முதல், சரணஸ்வரசாகித்யங்களுக்கு பொருள் விள க்கி அம்சமாக ஆடினார்.

அடுத்த நடன வடிவமாக ரம்யா எடுத்துக் கொண்டது, ஹுசேனி ராகத்தில் அமைந்த சுப்பராம ஐயரின் பதம், “நேற்று அந்தி நேரத்தி லே’ என்று, அருமையான பதம். முருகனின் மீது காதல் கொண்ட நாயகி, அவன் தன்னுடன் நேற்று அந்தி நேரத்தில் நீராடிய வேளை யில், ஜாடைகாட்டி தன்னை அழைத்தது, தன்னை சொந்தமாக்கிக் கொள்ள, பேசிய காதல் வார்த்தைகள், குறிப்பாக, “நிலவு கூட உன் முகம் போல் இல்லை’ என்றெல்லாம் சொல்லியது ஆகும்.

காதல்ரச காட்சிகளில், ரம்யாவின் நடனம் ரசிகர்களை திக்கு முக் காடச் செய்தது. ரம்யாவின் நடனம் மிகச் சிறப்பு என்பதற்கு, அவர் நிறைவாக கொடுத்த தில்லானாவே காரணம். அத்தில்லா னாவை, அவரே இயற்றியுள்ளார் என்பதுதான், நமக்கு வியப்பான செய்தி.

இச்சிறுவயதில் நடனம் ஆடுவதோடு நில்லாமல், ஒரு தில்லானா வை இயற்றும் அளவிற்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது, பாராட்டுதலுக்குரியது. திலங்ராகத்தில், தில்லானாவின் விறுவிறு ப்பான ஜதிகள் அமைப்பு செய்து, சரணவரிகளாய் உலகாளும் நாய கியை அநாதவிநோதினி, ஜனனி, ஜகன் மோகினி, சாம்பவி, சிவ சங்கரி, பவபயநாசினி என்று சித்தரித்து, ஆடிய காட்சிகள், கண் களுக்கு சொர்க்கமாய் அமைந்தது.

நடனக் கலைஞர்களுக்கு வேண்டிய அனைத்து அம்சம், அங்க சுத்தம், அடவு சுத்தம், வலதுபக்கமும், இடதுபக்கமும் சரிசமமாக நின்று ஆடிய பாங்கு, ரம்யாவின் நடனம் முதல்தரம் என்று, அவர் நடனத்தைஅன்று பார்த்தவர்கள் சொல்லுமாறு ஆடினார்.

– ரசிகப்ரியா (தினமலர்)

 

Leave a Reply