Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை, குறைந்த விலைக்கு கொடுக்க, மத்திய அரசு முயற்சி

“சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, குறைந்த விலைக்கு கொடுக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளை யும் எடுத்து வருகிறது. வருங் காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் சூரிய ஒளி மின் சாரத்தை, யூனிட் 3 ரூபாய்க்கு அல்லது 4 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு’ என, மத்திய அமைச் சர் சுஷில்குமார் ஷிண்டே தெரி வித்தார். டில்லியில் இந்திய எரி சக்தி கருத்தரங்கை துவக்கி வைத்த, மத்திய மின் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது: சூரிய ஒளியிலி ருந்து முதன் முதலாக மின் சாரம் தயாரிக்கப்பட்டபோது, மின் சாரம் யூனிட்டுக்கு 18 ரூபாய் என்ற அடிப்படையி ல், மாநிலங்களுக்கு வழங்க ப்பட்டது. தற்போது அரசின் பல்வேறு முயற்சி களால், சூரியசக்தி மின்சாரம் 8 ரூபாய்க்கு வழங்கப்படுகிற து. இதே மின்சாரத்தை இனி வரும்காலங்களில், யூனிட்டுக்கு 3 ரூபாய் முதல் 4 ரூபாய்க்கு வழ ங்க வேண்டும் என்பதை, அரசு தன் இலக் காகக் கொண்டுள்ளது. 64 ஆயிரம் மெகாவாட் மேலும், 12 வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில், 64 ஆயிரம் மெகா வாட் மின் சாரம் தயாரிக்க, அரசு அனைத்து முயற்சிக ளையும் மேற்கொண்டுள்ள து. 10வது ஐந்தாண்டு திட்டம் வரை தயாரிக்கப்பட்ட, மொத்த மின் சாரத்தை விட, தற்போது இரண்டு மடங்கு கூடுதலாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், இந்தியா வில் உள்ள கிராமப்புற மக்களில் 25 சதவீதம் பேர், மின்சார வசதியின்றி வாழ்ந்து வருகின்றனர். மின்சார திருட்டு மற்றும் வினியோகச் சிக்கல்கள் தான், மின்சார பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். மின் சார திருட்டைக் கட்டுப்படுத்த, மின்சாரம் திருடு பவர்களுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்க சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம், பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், மின்சார திருட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.

news in dinamalar

Leave a Reply