வருமான வரி் விலக்குகான உச்சபட்ச ஆண்டு வருவாயினை ரூ.2லட்சமாக அதிகரிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப் படலாம் எனவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. ஐந்து மாநில தேர்தல் நடக் கவிருப்பதையொட்டி, அடுத்த (பிப்ரவரி) மாதம் இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய் யப்படவுள்ளது. இதில் வரி விதிப்பு முறைகளில் மாற்றம் செய்யப்படவு ள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. தற்போது நேரடி வரி விதிப் பின்கீழ் தற்போது வருமான வரிக் கான, ஆண்களின் ஆண்டு வருமானம் ரூ. 1.8 லட்சமும், பெண்க ளின் ஆண்டுவரும் ரூ.1.9 லட்சமா கவும் உள்ளது. புதிய பட்ஜெட்டின் படி ஆண், பெண்களுக்கும் ஒரே மாதிரி யான வருமானவரிவிதிப்பு செய்யவு ம், இதற்காக ஆண்டு வருமானம் உச்சவரம்பாக ரூ.2லட்சம் நிர்ணயிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போன்று வருமானவரி செலுத்தும், மூத்தகுடிமக்களுக்கான வயது வரம்பினை 65லிருந் து 60ஆக குறைக்கவும், இவர்களின் ஆண்டு வருமான ரூ.2.40 லட்சத்தி லிருந்து ரூ.2.50 லட்சமாக அதிகரிக்கபடலாம், வரும் பட்ஜெட்டில் இதன் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் இது 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
nalla thakavl… paarpom