Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களுக்கு விந்தணுக்கள் வலிமைபெற ஒரு எளிய வழி

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கை யைத்தான் எல்லாருக்கும் தந்தி ருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடு வதும் தொலைகாட்சி நிகழ்ச்சிக ளில் மூழ்கிப் போவதுமாய் கழிகி றது நமது வாழ்க்கை.
இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ் திரேலிய ஆராய்ச்சி ஒன்று.

மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்ப தே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச் சியாளர்கள்.

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கிய மான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும். தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின் றன.

தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகா சமடைகிறது. அதற்கு அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் கால்களுக்கு இதமாக நடந்து வருவது தான்!

இந்த ஆய்வை நடத்திய போது இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங் களில் விந்தணுக்களின் வலி மையும், எண்ணிக்கையும், உரு வமும் பல மடங்கு மேம்பட்டதா கச்சொல்கிறார் இந்த ஆராய்ச்சி யை நடத்திய மருத்துவர் கிளார்க்.

இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின் மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்ற னர் என்பது வியப்பூட்டுகிறது. அலுவலக அறைகளுக்குள் ளேயே அடைபட்டுக் கிடப்ப வர்கள் அவ்வப் போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட் டமின் டீயும் பெற்றுக் கொள் வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆரா ய்ச்சியின் முடிவாகும்.

புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத் துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: