Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தீ விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? – வீடியோ

சமையல் செய்வது உள்ளிட்ட சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தீக் காயம் ஏற்பட்டு விடுகிறது. பிற விபத் துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக் காயத்திற்கும் நிறைய வேறு பாடுகள் இருப்பதால், இரண்டு க்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமா கவே எடுத்துக் கொள்ளக் கூடாது.
சமையல் செய்யும்போது கை யில் தீக் காயம் ஏற்பட்டால், உடனடி யாக அந்த வெப்பத்தை வெளி யேற்றுவது அவசி யம். அதற்கு, தீக்காயம் ஏற்பட்ட கை யை தண் ணீரில் மூழ்கச்செய்ய வேண் டும். தீக்காயம் உருவான இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்தும் வெப்பத்தை வெளியேற்றலாம். இது தான், இந்த வகை தீக்காயத்திற்கு நாம் செய்யும் முதலுதவி. பிறகு, தகுந்த மருத்துவரிடம் சென்று சிகிச் சை பெற வேண்டும்.

தீப்புண்ணில் கிருமிகள் இருக்காது என்பதால் பிறர் கைகளில் உள்ள அசுத்தம் புண்ணி ல் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக தீ விபத்துக்கு உள்ளானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது மன அளவில்தான். அதாவது, அதிக அதிர்ச்சிக்கு ஆளா கிறார்கள். அதனால் பாதி க்கப்பட்டவர் பதற்றப்படுவதை தவிர்க்க வேண் டும்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரது உடல் பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாய்வதால் மற்ற உடல் பகுதிகளில் ரத்த ஓட்டம் குறையும். இதன் கார ணமாக, அவரது உடல் ஜில் லென்று ஈரமாக இருக்கும். ஜீர ண சக்தியும் அதிக அளவில் குறைந்து விடும். இதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவர் சாப்பிட விரும்பினால் தண்ணீ ர் அல்லது லேசான தேயிலை பானம் போன்ற நீர் ஆகாரம் மட்டுமே தர வேண்டும்.

மேலும், ஆடையில் தீப்பற்றுவதன் மூலம் தீ விபத்தைச் சந்திப்ப வர்கள் அதில் இருந்து விடுபட ஓடுவார்கள். அது தவறு. அவ்வாறு ஓடினால் வேகமாக காற்றோட்டம் உட லில் ஏற்பட்டு தீ வேகமாக பரவும். பக்கத்தில் இருப்பவர்கள், தீப்பற்றியவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைப்பது தான் சிறந்த தடு ப்பு முறை.

அதேநேரம், மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய்ப் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக் கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகி ன்ற எண்ணெயை மேலும் பரவச் செய்து விடும்.

மேலும் சில தகவல்கள்

காயங்கள் ஏற்படும் முறை:

  • பாத்திரங்களை சூடுபடுத்தும் போது ,
  • கடாய் மற்றும் பாத்திரங்களின் கைப்பிடிகள், அடுப்பு, சமையல் பாத்திரங்கள் போன்ற சமையலறை சாமான்கள் பராமரிப்பின் போது…
  • தண்ணீர் கொதிக்கவைக்கும் பாத்திரங்கள், கருவிகள், ஹீட்டர், துணி தேய்க்கும் அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட நவீன மின்சாதனங்கள் பயன் படுத்தும் போது.
  • திறந்த வெளியில் சமைக்கும் பொழுதும், எரிவாயுக்கள் மற் றும் மின்சாரம் போன்றவற்றாலும் எதிர்பாராமல் நிகழும் தீ விபத்துகள்.
  • ஆடைகள் மற்றும் பிற பொருட்கள் தற்செயலாக தீப்பற்றிக் கொள்ளுதல்
  • வெளுப்பான்கள் மற்றும் வீரியம் மிக்க கிரிமிநாசினிகள் உபயோகப்படுத்தும் போது
  • சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் மற்றும் அனல் காற்றின் போது,
  • கயிறைக் கைகளால் பற்றிக்கொண்டு அதி வேகத்தில் இறங் கும் பொழுது ஏற்படும் வெப்பத்தால் உருவாகும் காயங்கள்

மேலும்,பெரும்பாலான தீப்புண்கள் வீடுகளில் ஏற்படுகின்றன. எனவே வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படலாம். பெரும்பா லான வீடுகளில் நடக்கும் விபத்துக்கள் சமயலறையில்தான் ஏற் படுகின்றன. எனவே, இங்கு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

விபத்துக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க சமையலறையே சிறந்த இடமாகும்.

சில முக்கியமாகச் செய்யக்கூடாதவைகள்

காயம் ஏற்பட்டதும் உடலில் எந்த விதமான தீப்புண்கள் ஏற்பட்டுள் ளது ? நீங்கள் என்ன உதவிகள் செய்யலாம் ? என்பதனை அறியும் முன் நீங்கள் கண்டிப்பாக செய்யக்கூடாத சில காரியங்களும் உண்டு. அவை பின்வருமாறு:

  • ஒருபோதும் தீப்புண்களின் மீது வெண்ணெய், மாவுகள் அல்லது சமையல் சோடா முதலியவற்றைப் போடாதீர்கள்
  • ஒருபோதும் ஆயின்மென்ட், லோஷன் மற்றும் எண்ணெய்களை சிகிச்சையளிக்கப் பயன்படுத்தாதீர்கள்.
  • ஒருபோதும் புண் மற்றும் கொப்புளங்களைக் கிழிக்கவோ, கிள்ளவோ அல்லது உடைக்கவோ செய்யாதீர்கள்
  • தேவையின்றி தீப்புண்களைத் தொடவோ அல்லது கையாளவோ செய்யாதீர்
  • தீக்காயத்தில் ஒட்டியுள்ள துணிகளை ஒருபோதும் அகற்ற முயற்சிக்காதீர்.
  • தீக்காயங்களுக்கு மருத்துவரின்றி சிகிச்சை அளிக்காதீர்.

இன்றைய நாட்களில் மக்கள் உடுத்தும் பெரும்பாலான ஆடைகள் சிந்தடிக் பொருட்களால் ஆனவை. அவை தீயினால் உருகி மிட்டா ய்கள் போன்று சருமத்துடன் ஒட்டிக்கொள்ளும். இதுபோன்று ஒட்டிக் கொண்ட துணிகளை அகற்ற முயற்சிப்பீர்கள் என்றால் அது தேவையில்லாமல் சருமத்தில் வலியையும் புண்ணின் பாதிப் பையும் அதிகரிக்கும். அப்படிப் பட்ட துணிகளை கிருமித்தொற்று இல்லாமல் முறையாக அகற்ற மருத்துவர் மூலமே சிகிச்சை அளிக்க வேண்டும்.எனவே அத்துணியி னை அப்படியே விட்டுவிடு வது நல்லது.

பொதுவான சிகிச்சை

பராமரிப்பு

  • பக்கெட் அல்லது சமயலறை தண்ணீர் தொட்டி/சிங்கில் குளி ர்ந்த நீரை நிரப்பி அதில் காயப்பட்ட பகுதியை அமிழ்ந்திரு க்கும் வண்ணம் செய்யுங்கள்.அதிக வேகமாக இல்லாமல் மிதமான வேகத்தில் குளிர்ந்த தண்ணீர் வரும் குழாயின் கீழ் தீக்காயமடைந்த பகுதி யைக் காட்டி தண்ணீர் படும்படியும் செய்யலாம்.
  • தீப்புண்ணை சுமார் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் அமிழ்ந்த வண்ணம் அவசியம் வைக்கவேண்டும். அப்படி வைப்பது சிரமமாக (முகத்தில் உள்ள தீக்காயம் போன்றவற்றுக்கு) இருந்தால், ஏதாவ து மென்மையான மற்றும் தூய்மையான துணியைக் குளிர்ந்த தண் ணீரில் நனைத்து அந்த காயத்தின் மீது வைக்கவுமஇவ்வாறு அடிக் கடி மீண்டும் குளிர்ந்த தண் ணீரில் நனைத்து மாற்றி மாற்றி போடவும். ஆனால் தீக் காயத்தைத் துணியைக் கொண்டு தேய்க்காதீர்கள். இந்த சிகிச் சைகள்தீக்காயமடைந்த திசுவிலுள்ள வெப்பத்தினை ஓரளவு க்கு வெளியேற்றவும் மற்றும் மென்மேலும் ஏற்படும் சிதைவு, சிவத்தல், கொப்புளம் வருதல்,வலியின் அளவு மற்றும் தன்மையைக் குறைக்கவும் தடுக்கவும் உதவும்.
  • காயம் ஏற்பட்டவுடன் மோதிரம், வளையல், ஷூ மற்றும் அணிந் துள்ள அனைத்து ஆபரணங்களையும் சீக்கிரமாக நீக்க வேண்டும். ஏனெனில் காயத்தின் காரணமாக வீக்கம் ஏற் படலாம். அப்படி வீக்கம் ஏற்பட்டால் மேற்கூறிய பொருட்க ளை நீக்குவது பின்னர் கடினமாகிவிடும்.
  • சிறிய மேலான தீக்காயங்களாக இருந்தால் வலிநீங்கியவுடன் ஜாக்கிரதையாகபுண்ணை உலரச் செய்யவும். பின்னர் அதை சுத்தம் செய்து பக்குவமாக கட்டு (ட்ரஸ்ஸிங்) போடவும். பெரிய காயங்கள் அல்லது ஆழ்ந்ததீக்காயங்களை குளிர்ந்த தண்ணீரிலிருந்து எடுத்தவுடன் அவசியம் அவற்றை சுத்த மான,கந்தல் இல்லாத மற்றும் பஞ்சு ஒட்டாத துணியை வைத்து இலகுவாக மூட வேண்டும் ( கை,கால்களை மூட சுத்தமான பைகள், நீளமான காலுறைகள் பொருத்த மானவை)
  • மருத்துவரை அழைக்க ஆள் அனுப்புங்கள் அல்லது ஆம்புல ன்ஸை அழையுங்கள்
  • தபால் தலை அளவைவிடப் ( 2 x 2 1/2 செ மீ ) பெரியதாக உள்ள எந்த தீப்புண்ணும் அவசியம் ஒரு மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நீங்கள் குளிர்ச்சி வைத்தி யம் கொடுத்தவுடன் மருத்துவரை அழைக்க வேண்டும்.
  • பெரிய அளவில் பலத்த காயம் இருப்பின் மருத்துவமனை பராமரிப்பு தேவை.அப்படி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, ஐஸ் கட்டிகளை டவல்களில் வை த்துக்கட்டி அதைக் காயத்தின் மேல் வைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.
  • தீக்காயமடைந்த பகுதியை நோய்த்தொற்று ஏற்படாமல் மூடி வைப்பது அவசியம். அப்படி செய்வது விபத்துக்குள்ளானவர் காயத்தின் அளவையும்,கொடூரத்தையும் பார்ப்பதைக் குறை க்கும். அதனால் அவரின் பதற்றம் மற்றும் பயம் சற்றே குறை யும். நைலான் அல்லாத மேசை விரிப்புத்துணி, துண்டு, சால் வை உள்ளிட்டவை உடலை மூடுவதற்கு மிகவும் உகந்த வை.  உடலின் மேல் லேசாக மற்றும் அழுந்தாமல் மூட /போர்த்த வேண்டும்.
  • மருத்துவர் அல்லது ஆம்புலன்ஸிற்காகக் காத்திருக்கும் போது விபத்துக்குள்ளானவரை மீண்டும் தேற்றுங்கள், ஆறு தல் கூறுங்கள். குழந்தையாக இருப்பின் அரவணைத்து எடுத்துச்செல்லுங்கள். அப்படி செய்வது மிகமுக்கியம். ஆனால் அப்படி செய்யும் போது பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
சிறப்பு சிகிச்சை தேவைப்படும் தருணங்கள்:
துணிகளில் ஏற்படும் தீ
  • துணிகளில் தீ பற்றியெரியும் போது, தீயைத் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். விபத்துக்குள்ளானவரின் மீது15.PNG கெட்டித்துணி,போர்வை,கோட்,சாக்கு/கோணி போன்றவற்றால் சுற்றி அணைக்கலாம்.நீங்கள் விபத்துக்குள்ளானவரை போர்வை கொண்டு சுற்றும் போது தீயானது உங்களைத் தாக்காத வாறு போர்வையை உங்களுக்கு முன் இருக்கும் வண்ணம் வைத்துக்கொள்ளுங்கள்
  • ஒருவன் தீயில் பயங்கரமாக பற்றியெரியும் போது, வலி தாங்க முடியாமல் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக் கு ஓடலாம்.இதனால் தீயானது வேகமாகப் பரவும். அவர் காற் றோட்டமான பகுதிக்கும் ஓடலாம். அப்படி காற்றோட்ட மான பகுதிக்கு செல்லும் போது தீ அதிகமாகப் பற்றியெரி யும். எனவே விபத்துக்குள்ளானவரை ஒரே இடத்தில் இருக்கும் படி செய்யவேண்டும்.
  • தீ அணைந்துவிட்டால்,ஏற்கெனவே கூறியுள்ள பொதுவான சிகிச்சைகளைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.

கண்களில் வேதிப்பொருள் தெளிப்புஇது நிரந்தரமான பாதிப்பு மற்றும் பார்வை இழப்பையும்கூட ஏற் படுத்தும். எனவே சிகிச்சை அளிப்பதில் அதி வேகமாக செயல் பட வேண்டும். அவ்வேதிப்பொருளின் வீரியத்தைக் குறைப் பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply